புதன், 29 ஆகஸ்ட், 2018

மாற்றி யோசிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

அடுத்த சில ஆண்டுகளில் இந்திய விமான துறை கணிசமான வளர்ச்சியைக் காணும் என்பது பல முதலீட்டாளர்களது எதிர்பார்ப்பு.


நடுத்தர வர்க்கத்தை சேர்த்தவர்கள் கூட விமானத்தில் பயணிப்பதை கடினமாக நினைக்காத அளவு வருமானம் இருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.



அதனால் சில விமான பங்குகள் மல்டி பேக்கேராக மாற அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் தற்போது உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை விமான நிறுவனங்களை ஆட்டுவித்து வருகிறது.

இதில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த காலாண்டில் மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டங்களை தந்துள்ளது.

அதனால் நிறுவனத்தின் நிகர மதிப்பு கூட எதிர்மறையில் சென்றுள்ளது. நிறுவனத்தையும் நடத்துவதற்கு கூட தடுமாறி வருகிறது.

பார்க்க:
ஓட முடியாத இடியாப்ப சிக்கலில் ஜெட் ஏர்வேஸ்

இதே போல் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் கூட சிறிய நஷ்டங்களை கொடுத்துள்ளன. ஆனால் ஜெட் ஏர்வேஸ் அளவுக்கு செல்லவில்லை.

கச்சா எண்ணேய் விலை கூடிய அளவிற்கு டிக்கெட் விலையை விமான நிறுவனங்களால் கூட்ட முடியவில்லை.

விமான டிக்கெட் விலையை கணிசமான அளவு உயர்த்தி விட்டால் காலியாக செல்ல வேண்டி இருக்குமோ என்ற பயமும் இதற்கு காரணம்.

இது போக, பெட்ரோல் உட்பட எரிபொருளுக்கு உலக அளவிலே இந்தியாவில் தான் அதிக வரி விதிக்கப்படுகிறது.

இதனால் இந்திய அரசின் உதவியும் இந்த நிறுவனங்களின் மீட்சிக்கு தேவைப்படுகிறது.

இந்த கடினமான காலத்தை கடந்து விட்டால் அதன் பிறகு பெரிய அளவு எதிர்காலம் இருப்பதை உணர்ந்து இருப்பதால் விமான நிறுவனங்கள் தங்களை தக்க வைத்துக் கொள்வதற்கு பெருமளவில் முனைந்து வருகின்றன.

அதில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் எடுத்து வரும் முயற்சிகள் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளதை காண முடிகிறது.

இதில் வெற்றி பெற்றால் விமான நிறுவனங்களின் லாப, நஷ்டங்கள் அப்படியே மாறுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

டெல்லியில் இருந்து தேஹ்ராடுன் வரை 20 நிமிடங்களுக்கு BioFuel முறையில் ஒரு விமானத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

பொதுவாக விமானங்கள் Aviation Turbine Fuel (ATF) என்ற எரிபொருளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. இதன் மூலப் பொருள் கச்சா எண்ணெய் ஆகும்.

BioFuel என்பது ATF எரிபொருளுடன் 25% எத்தனால் கலந்த BioFuel சேர்க்கப்படும். இதனால் கச்சா எண்ணெய் தேவை 25% அளவு குறைய வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் புகையும் மற்றதை விட குறைவாக விடுவதாக கணித்துள்ளார்கள்.

மேலும் மென்படும் சமயத்தில் விமான நிறுவனங்களின் நிதி நிலைமையை நல்ல விதமாக மாற்றியும் அமைக்கலாம்.

அடுத்து, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உள்நாட்டு சேவையில் முதல் முறையாக இணைய சேவை வழங்கவுள்ளது.

இது போக, விமான நிலையங்களில் உள்ள கடைகளில் ஏதேனும் வாங்க வேண்டும் என்றால் விமானத்திற்குள் வைத்தே ஆர்டர் செய்வதற்கான வசதிகளையும் கொண்டு வரவுள்ளது.

இந்த மதிப்பு கூடுதல் சேவைகள் அளிக்கும் கூடுதல் வருமானம் லாப மார்ஜினை கூட்டுவதற்கோ அல்லது நஷ்டங்களில் இருந்து தப்பவும் பெரிதும் உதவும்.

அஜித் சிங்கின் மேலான்மையில் SpieceJet பங்கை கவனித்து வருக!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக