ஞாயிறு, 3 நவம்பர், 2013

முஹுரத் வர்த்தகம் - ஒரு அறிமுகம்

இது நேற்றே எழுத வேண்டிய பதிவு. நேரமின்மை காரணமாக இன்று எழுதியுள்ளோம்.

நேற்றைய தினம் ஞாயிறு. ஆனாலும் பங்கு சந்தையில் வர்த்தகம் நடந்தது. அதற்கு காரணம் ஒரு நீண்ட நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு சுவராஸ்யமான பழக்கம்..


தென் இந்தியாவில் தான் தீபாவளி கடந்த சனியன்று கொண்டாடப்பட்டது. ஆனால் வட இந்தியாவில் நேற்று தீபாவளி லட்சுமி பூஜையாகக் அனுசரிக்கப்பட்டது.

இதன் படி, நேற்றைய தினம் அவர்களுக்கு செல்வம் வரும் தினமாகும். அவர்களது நிதி ஆண்டும் நேற்றைய நாளில் இருந்தே தொடங்கும்.





இந்த தினத்தில் மும்பை பங்குச்சந்தையில்  "முஹுரத் வர்த்தகம்" என்ற பெயரில் வர்த்தகம் நடக்கும். அன்று பங்குசந்தையில் வர்த்தகர்கள் பங்குகளை வாங்க மட்டும் செய்வார்கள். விற்பதில்லை.

சிலர் நீண்ட கால முதலீட்டு நோக்கில் தங்கள் குழந்தைகள் பெயரில் பங்குகளை வாங்கி போடுவார்கள். பங்குச்சந்தை நிதி ஆண்டை நேர்மறையாகத் தொடங்க வேண்டும் என்ற நம்பிக்கை காரணமாக வந்த பழக்கம்.



இந்த தினத்தில் முஹுரத் வர்த்தகம் ஒரு மணி நேரம் மட்டுமே நடக்கும். பங்குகளை வாங்க மட்டும் செய்வதால் சென்செக்ஸ் புள்ளிகளும் இந்த நாள் உயர்ந்தே காணப்படும்.

பங்குச்சந்தை எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் இந்த நாள் மட்டும் புள்ளிகள் சிறிதாவது உயர்ந்து விடும்.

இந்த வருடம் முஹுரத் வர்த்தகம் நேற்று மாலை 6.15 முதல் 7,30 வரை 45 நிமிடங்கள் நடைபெற்றது. நிப்டி பத்து புள்ளிகளும், சென்செக்ஸ் 43 புள்ளிகளும் உயர்ந்தது.

எம்மிடம் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிகளுக்கு பதிவுகளை உடனே அனுப்பி வருகிறோம். சில மின்னஞ்சல்கள் 'boune' ஆகியுள்ளன. கிடைக்கப் பெறாதவர்கள் ஒரு 'test' மின்னஞ்சலை muthaleedu@gmail.com முகவரிக்கு அனுப்பவும்.

இந்த பதிவையும் படித்துப் பாருங்கள்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: