புதன், 20 நவம்பர், 2013

AMARA RAJA நிறுவனத்தை ஏன் பரிந்துரை செய்கிறோம்?

நமது போர்ட் போலியோவில் இருந்து மகிந்திரா நிறுவனத்தை நீக்குவதைப் பற்றி கடந்த பதிவில் எழுதி இருந்தோம்.

விவரங்களுக்கு இந்த பதிவைப் பார்க்க..
இதனால் ஏற்பட்ட ஆட்டோ துறை சார்ந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு மற்றொரு பங்கை பரிந்துரை செய்ய வேண்டியுள்ளது.இந்த பதிவில் ஆட்டோ துறை சார்ந்த ARB என்று அறியப்பட்ட AMARA RAJA BATTERIES என்ற நிறுவனத்தைப் பரிந்துரை செய்கிறோம்.

தயாரிப்புகள்:

இந்த நிறுவனம் வீடுகளுக்கு தேவையான UPS மற்றும் வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகள் போன்றவற்றை தயாரித்து வருகிறது. EXIDE நிறுவனத்தின் கடுமையான போட்டியாளர்.60% வருமானம் ஆட்டோ துறையில் இருந்தும் 40% வருமானம் தொழில் துறையில் இருந்தும் வருமானம் வருகிறது. ஆட்டோ துறையில் மகிந்திரா, மாருதி, ஹோண்டா  போன்ற பல நிறுவனங்கள் நேரடி நுகர்வோர்களாக உள்ளன.

இதனுடைய தயாரிப்புகள் AMARON,QUANTA,POWER STACK,POWER SLEEK,POWER ZONE என்ற பெயர்களில் அறியப்படுகிறது. 


நிதி நிலை அறிக்கை:

AMARA RAJA2Q'132Q'12Growth
Net sales(in Cr)80772012%
EBIT(In Cr)13310131%
Net Profit (in Cr)94.67035%
EPS (In Cr)5.544.1135%

சாதகங்கள்:

 • இந்திய பொருளாதார தேக்கத்திலும் நல்ல நிதி நிலை அறிக்கையைக் கொடுத்து வருகிறது.. 
 • இந்த நிறுவனத்தின் நுகர்வோர்களாக மகிந்திரா, மாருதி, என்று ஆட்டோ துறையின் பெரிய தலைகள் பரவலாக உள்ளன. இதனால் எந்த ஒரு தனிப்பட்ட நுகர்வோர் நிறுவனத்தின் நஷ்டங்கள் ARB நிறுவனத்தை பெரிய அளவில் பாதிக்காது. 
 • கடந்த பல காலாண்டுகளாக நல்ல நிதி வளர்ச்சியைக் கொடுத்துள்ளது. முதல் இடத்தில உள்ள EXIDE Batteries நிறுவனத்தின் சந்தையை மெதுவாக பிடித்து வருகிறது.  EXIDE நிறுவனத்தின் பங்குகள் தொடர் வீழ்ச்சியைக் கண்ட போதும் ARB நிறுவன பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் 35% வரை உயர்ந்துள்ளன.
 • நிறுவனத்தின் புதிய உற்பத்தி பிரிவுகள் செயலாக்கத்தில் வரும் போது வளர்ச்சி நன்றாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 
 • கடந்த ஐந்து வருடங்களில் லாபம் 80 கோடியில் இருந்து 286 கோடியாக உயர்ந்துள்ளது.
 • நிறுவனத்தின் செயல் திறன் இரண்டு மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. 
 • பைக் பேட்டரிகள்  செயல் திறன் 4.8 மில்லியனில் இருந்து 8.4 மில்லியனாக அதிகரிக்கப்பட உள்ளது.கார் பேட்டரிகள்  செயல் திறன் 5.6 மில்லியனில் இருந்து 8.2 மில்லியனாக அதிகரிக்கப்பட உள்ளது..

ரிஸ்க்:
பொருளாதார தேக்கம் ஓரளவு பாதிக்கலாம்.

தற்போதைய விலையில் 320 ரூபாயில் பரிந்துரைக்கப்படுகிறது.

நிறுவனம் பற்றிய தகவல்களுக்கு:
Amara Raja Batteries
Amara Raja Batteries Finance Report

நமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...

எளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.

தொடர்பான பதிவுகள்:
24000 ரூபாய் லாபம் கொடுத்த எமது போர்ட்போலியோ« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்:

 1. Thanks for your recommendations. If you indicate the likely target prices for the stocks recommended by you, it would help. Thanks

  பதிலளிநீக்கு
 2. Thanks for your recommendations. If you indicate the likely targets for the recommended scrips as well, it would help us.

  regards, JAN

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஐயப்பன்! இனி வரும் பரிந்துரைகளில் Target Price குறிப்பிடுகிறோம். இந்த பங்கிற்கு 200 ரூபாய் முதல் கட்ட எதிர் பார்ப்பாக வைத்து கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு