வெள்ளி, 29 நவம்பர், 2013

ஏன் ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட விரும்புகிறது? (ப.ஆ - 3)

பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின்  மூன்றாவது பகுதி இது.

இந்த தொடரின் முந்தைய கட்டுரையை இந்த இணைப்பில் பெறலாம்.
அள்ள அள்ள பணம் - ஒரு அறிமுகம் (ப.ஆ - 2)

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவது, விற்பது என்ற நிகழ்வுகளோடு சேர்த்து IPO, Delisting, Buy Back என்று பல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. பங்குச்சந்தையில் ஈடுபடுவர்கள் இந்த நிகழ்வுகளையும் கண்காணித்து வருவது மிக அவசியமானது.


இந்த நிகழ்வுகள் பற்றிய சரியான புரிதலுக்கு ஏன் ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட விரும்புகிறது என்ற அடிப்படை காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.


இந்த கட்டுரையின் நோக்கமும் அதுவே.

ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலில் இடம் பெறும் போது அந்த நிறுவனத்துக்கு சாதகங்களும் உள்ளன. அதே நேரத்தில் சில பாதகங்களும் உள்ளன.



முதலில் பட்டியலிட விரும்புவதற்கான  காரணங்களைப் பார்ப்போம்.

முதல் காரணம் அனைவருக்கும் தெரிந்தது போல் நிதி தேவை.

நிறுவன உரிமையாளர்களுக்கு தம்மிடம் இருக்கும் நிதியை வைத்து நிறுவனத்தை நடத்துவது கடினமாக இருக்கலாம். அல்லது நிறுவனம் தன்னுடைய சந்தையை பெரிய அளவில் விரிவாக்க திட்டமிடும் போது நிதி பற்றாக்குறை ஏற்படலாம். அந்த சமயங்களில் பங்குச்சந்தையை நாடுவார்கள்.

சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் பொது மக்களை எளிதில் சென்றடையும்   விளம்பர உத்தியாகவும் பங்குச்சந்தையை கருதுவார்கள்.

சில சமயங்களில் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை உற்சாகப்படுத்துவதற்கு பணியாளர்களுக்கு விற்க முன் வரும். அப்பொழுது நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலில் இடப்பட்டு இருந்தால் எளிதாக இருக்கும்.

தங்கள் நிறுவனத்தை மற்றவர்களுக்கு விற்கும் போது பங்குச்சந்தை பட்டியலிடுதல் நிறுவனத்தின் உண்மையான மதிப்பை கண்டுபிடிக்க உதவும்.


ஆனாலும் இந்த பயன்களுடன் பட்டியலிடப்படுவதால் நிறுவனங்களுக்கு சில தலைவலிகளும் உள்ளது. அதனையும் பார்ப்போம்.

முதலில் பங்குச்சந்தை விதிமுறைகளைத்  தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். தங்கள் நிறுவன நிதி செயல்பாடுகள், வியாபர தகவல்கள் போன்றவற்றுக்கு சரியான முறையில் கணக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கென்று பணியாளர்களை நியமித்து ஊதியம் கொடுக்க வேண்டி வரும்.

தங்கள் நிறுவன செயல்பாடுகளை  அதிக அளவில் பொதுவில் பகிர வேண்டி இருக்கும். இதனால் குறிப்பிட்ட வகையில் தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்க நேரிடும்.

சில சமயங்களில் எதிர்பாராத  நிறுவன விற்பனைகளுக்கும் (TAKE OVER) வாய்ப்பு உண்டு. உரிமையாளர்களின் பங்கு விகிதம் குறைவாக இருக்கும் போது மற்ற நிறுவனங்கள் விருப்பமில்லாமலே நிறுவனத்தை வாங்கி விடும்.

இதனால் நிறுவனங்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு சில சமயங்களில் பங்கு சந்தை சார்புகளை குறைப்பதற்காக   BUY BACK, DELIST போன்ற முறைகளை தந்திரமாக உபயோகித்து பங்குகளை வாங்க முற்படுவார்கள்.

இந்த சமயங்களில் முதலீட்டார்கள் நேரத்திற்கு ஏற்றவாறு விரைந்து முடிவெடுத்தால் நஷ்டங்களில் இருந்து எளிதில் தப்பலாம். இதனை இன்னொரு பதிவில் விவரமாக பார்க்கலாம்.

தொடரின் அடுத்த பாகம்..
பங்குச்சந்தையில் பங்குகளை எப்படி வாங்குவது? (ப.ஆ - 4)


English Summary:
Why companies are interested to list in share markets? The easiest method for collecting working capital is share market. Listing share market is giving the interest non-payment. 

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக