திங்கள், 18 நவம்பர், 2013

மகிந்திரா பங்கை விற்று விடலாம்

மகிந்திரா நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை அறிக்கை கடந்த வாரம் வெளிவந்துள்ளது. பங்குச்சந்தை, வாகன விற்பனை குறைவு காரணாமாக போன வருடத்தை விட லாபம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்தது.

ஆனால் நிதி நிலை அறிக்கை முடிவின் படி கடந்த காலாண்டை விட லாபம் 10% உயர்ந்து ஆச்சரியம் அளித்தது.


இதனால் கடந்த சில தினங்களில் பங்கு விலை 8% வரை அதிகரித்துள்ளது. நமது போர்ட் போலியோவில் உள்ள இந்த பங்கு இது வரை 10% லாபம் கொடுத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :
பங்கு ஒரு பார்வை: மகிந்திரா & மகிந்திரா

இனி சுருக்கமான நிதி நிலை அறிக்கையைப் பாப்போம்.

MAHINDRA        2Q'13   2Q'12    Growth
Net sales(in Cr)      881       965        -9%
EBIT(In Cr)          1246    1215       3%
Net Profit (in Cr)    989       901       10%
EPS (In Cr)          16.76    15.3      10%


நிதி அறிக்கையின் முக்கிய குறிப்புகள்:

  • விற்பனை 9% குறைந்துள்ளது.
  • நிகர லாபம் 9% அதிகரித்துள்ளது.
  • நல்ல பருவ மழை காரணமாக ட்ராக்டர் விற்பனை 18% அதிகரித்துள்ளது.
  • ஆனால் இதர மோட்டார் வாகன பிரிவு விற்பனை 19% குறைந்துள்ளது.
  • மொத்த வாகன விற்பனை எண்ணிக்கை 6.5% குறைந்துள்ளது.


ஆனால் கீழ்க்கண்ட காரணங்களால் மகிந்திரா பங்கை விற்குமாறு வாசகர்களுக்கு கேட்டுக் கொள்கிறோம்.

நாம் எமது முந்தைய பதிவுகளில் ட்ராக்டர் விற்பனை அதிகரிக்கும் என்று கணித்திருந்தோம். அதற்கேற்ற வகையில் முடிவும் இருந்தது. ஆனால் மற்ற வாகன பிரிவுகள் நாம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி அடைய வில்லை. பொருளாதார தேக்கம் அதற்கு ஒரு காரணமாக இருந்தாலும் நிறுவனம் அதற்கேற்ப எடுத்த நடவடிக்கைகளும் அந்த அளவு பலன் கொடுக்கவில்லை.

ட்ராக்டர் என்ற ஒரு பிரிவை வைத்துக் கொண்டு இதர மூன்று முக்கிய வாகன பிரிவுகளின் நஷ்டத்தை ஈடு கட்டலாம் என்பது ஒரு கடினமான காரியம்.

இந்த காலாண்டின் மற்றொரு முக்கிய லாபம் துணை நிறுவனங்களின் ஈவுத்தொகையில் இருந்து வந்துள்ளது.  இது வருடத்திற்கு ஒரு முறை கொடுக்கப்படும் ஈவுத்தொகை. ஆதலால் வரும் காலாண்டுகளில் இது கிடைக்கப்பெறாது.

பங்கு விலை குறைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஆனால் அதே நேரத்தில் பங்கு விலை இன்னும் கூடுவதற்கான வலுவான கரணங்கள் இல்லை.

Mahindra Car Sales Data

இந்த காரணங்களால் நமக்கு இது வரை கிடைத்த 11% லாபத்தோடு தற்போதைக்கு மஹிந்திரா பங்கில் இருந்து வெளியேறுவதே நன்றாக இருக்கும் என்று கருதுகிறோம்.

ஒரு குறுகிய இடைவெளியில் மற்றொரு ஆட்டோ சார்ந்த பங்கை பரிந்துரைக்கிறோம்.

நமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...

எளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.

தொடர்பான பதிவு:
24000 ரூபாய் லாபம் கொடுத்த எமது போர்ட்போலியோ



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக