வெள்ளி, 22 நவம்பர், 2013

AEGIS நிறுவனத்தை ஏன் பரிந்துரை செய்கிறோம்?

எமது முந்தைய பதிவுகளில் AEGIS Logistics என்ற நிறுவனத்தை 130 ரூபாயில் எரிசக்தி துறையில் பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது பங்கு விலை 150 ரூபாய் அருகே சென்று விட்டது.
ஆனால் விரிவான பதிவு எழுதப்படாததால் இங்கு கட்டுரையாக எழுதுகிறோம்.

மேலும் விவரங்களுக்கு,

தயாரிப்புகள்:

1956ல் ஆரம்பிக்கப்பட்ட தனியார் துறையை சேர்ந்த ஒரு எரிசக்தி நிறுவனம். இந்தியா முழுவதும் ஆட்டோ வாகனங்களுக்கு தேவையான காஸ் சிலிண்டர்கள், வீடுகளுக்கு தேவையான காஸ் சிலிண்டர்கள் போன்றவற்றை விநியோகித்து வருகிறது.

இது தவிர பெட்ரோநெட் போன்ற அரசு நிறுவனங்கள் போல் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்களை சேமித்து பெரிய நிருவனகளுக்கும் விநோயோகித்து வருகிறது.இந்த நிறுவனத்துக்கு மும்பை, கொச்சி, ஹல்டியா(மேற்கு வங்காளம்) போன்ற துறைமுகங்களில் டெர்மினல்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் மொத்த செயல் திறன் 35000KL.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் AEGIS Autogas, AEGIS Puregas என்ற பெயர்களில் அறியப்படுகிறது. இதன் நுகர்வோர்கள் பாரத் பெட்ரோலியம், HP, டாட்டா ஸ்டீல், மகிந்திரா போன்ற பெரிய நிறுவனங்கள்.

நிதி நிலை அறிக்கை:

AEGIS2Q'132Q'12Growth
Net sales(in Cr)156288277%
Expenses(in Cr)152992765%
Op. Profit(In Cr)33.4-44.3-22%


சாதகங்கள்:

 • பழுத்த அனுபவுமுள்ள மேலான்மையைக் கொண்ட நிறுவனம்.
 • இந்த காலாண்டில் 77% அதிக வருமானமும், 175% அதிக லாபமும் அடைந்துள்ளது.
 • கடன் 52% குறைந்துள்ளது.
 • டிவிடென்ட் 43$ அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
 • இந்தியா முழுவதும் பரவலாக உள்ள டீலர் நெட்வொர்க்.
 • வேகமாக விரிவாக்கம் செய்யப்படும் கொள்ளளவு. 2015ல் 35000KLல் இருந்து 530000KL ஆக கொள்ளளவு உயர்த்தப்பட உள்ளது.
 • தன்னுடைய டீலர் நெட்வொர்க்கை 30% மேல் அதிகரிக்க உள்ளது.
 • பரவலான, வலிமையான நுகர்வோர் நிறுவனங்கள்
 • பெட்ரோலிய கப்பல் விநியோகம் மற்றும் இதர சேவை பிரிவுகளில் நுழைய உள்ளது.
 • அரசின் டீசல் விலை உயர்வு மற்றும் மானிய ரத்து போன்றவை LPG பயன்பாடை நோக்கி திருப்பி விட வாய்ப்புள்ளது.
 • அரசின் வருடத்திற்கு 9 அல்லது 6 சிலிண்டர் விதி முறை இந்த நிறுவனத்துக்கு மிக சாதகமாக அமையும். இது போக நேரடி மானிய திட்டமும் இந்த நிறுவனத்துக்கு சாதகமாக அமையும்.
 • அரசின் கேஸ் விலை உயர்வு கொள்கை இந்த நிறுவனத்துக்கு சாதகமாகும்.

ரிஸ்க்:

அரசின் கொள்கை முடிவுகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் நிறுவனத்தை பாதிக்கும்.

மேலதிக நிறுவனம் பற்றிய விவரங்கள்:
AEGIS Logistics
AEGIS Financial Results

நமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...

எளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.

தொடர்பான பதிவு:
AMARA RAJA நிறுவனத்தை ஏன் பரிந்துரை செய்கிறோம்?« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக