புதன், 6 நவம்பர், 2013

229% அதிக லாபம் ஈட்டிய ASHAPURA MINE

நமது போர்ட் போலியோவில் "ASHAPURA MINECHEM" என்ற நிறுவனத்தை பரிந்துரைத்து இருந்தோம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :

இந்த நிறுவனம் சுரங்கத் துறையில் அரசின் கொள்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிறுவனம். தற்பொழுது இந்த நிறுவனம் நஷ்டத்தில் இருந்து லாபத்தை நோக்கி மாறிக் கொண்டு இருக்கிறது.
கடந்த வாரம் இந்த நிறுவனத்தின் காலாண்டு நிதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மகிழ்ச்சி தரும் விதமாக அதனுடைய நிதி நிலை அறிக்கை இருந்தது.

சுருக்கமான நிதி நிலை அறிக்கை இங்கே.

ASHAPURA2Q'132Q'12Growth
Net sales(in Cr)
283
129
119%
EBIT(In Cr)
34
6.49
424%
Net Profit (in Cr)
46
14
229%
EPS (In Cr)
4.04
0.57
609%


இனி நிதி நிலை முடிவுகளை பார்ப்போம். கடந்த வருட காலாண்டு அறிக்கையுடன்  ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

 • விற்பனை 119% அதிகரித்துள்ளது.
 • நிகர லாபம் 229% அதிகரித்துள்ளது.
 • கடன் 5% குறைந்துள்ளது.
 • சொத்து மதிப்பு 0.8% அதிகரித்துள்ளது.
 • கடந்த அரை வருடத்துடன் ஒப்பீடுகையில் லாபம் 10% அதிகரித்துள்ளது.

தற்பொழுது தான் சுரங்கத் துறை ஓரளவு மீண்டு வர ஆரம்பித்து உள்ளது. அதனால் வரும் காலங்களில் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் இந்த பங்கில் தொடரலாம்.

முழு விவரங்களுக்கு இங்கு பார்க்க..
ASHAPURA நிதி நிலை அறிக்கை 2Q 2013

நிறைய மின் அஞ்சல்கள் பங்குச்சந்தை முதலீடை தொடங்குவது எப்படி என்ற எதிர்பார்ப்பு நிலையில் வந்துள்ளன. விரைவில் இதனை பற்றி ஒரு தொடர் வடிவில் எழுதுகிறோம்.

எமக்கு அதிக பார்வையாளர்கள் தந்த தமிழ்மணம் திரட்டி கடந்த சில நாட்களாக வேலை செய்யவில்லை. அதனால் எம்மிடம் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் முகநூலில் மட்டும் பதிவுகளை பகிர்ந்து வருகிறோம்.

சில மின்னஞ்சல்கள் 'boune' ஆகியுள்ளன. கிடைக்கப் பெறாதவர்கள் ஒரு 'test' மின்னஞ்சலை muthaleedu@gmail.com முகவரிக்கு அனுப்பவும்.

இது போக நமது பதிவுகளை பெற விரும்புவர் ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம்.
விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...

இந்த பதிவையும் படித்துப் பாருங்கள்.

மதிப்பு பதிவு:
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

 1. உங்கள் பணி மிகச்சிறந்த ஒன்று... தொடரும் விபரங்களுக்கு வாழ்த்துகள்... நன்றி!

  பதிலளிநீக்கு
 2. நன்றி சுகுமார் அவர்களே! தங்கள் வாழ்த்துக்கள் உற்சாகமளிக்கின்றது..

  பதிலளிநீக்கு