புதன், 13 நவம்பர், 2013

பங்குசந்தையை கலக்கிய BRITANNIA (66% லாபம் உயர்வு)

நமது போர்ட் போலியோவில் "BRITANNIA" நிறுவனத்தை ஆகஸ்ட் 14 அன்று பரிந்துரைத்து இருந்தோம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :
பங்கு ஒரு பார்வை: BRITANNIA

நுகர்வோர் துறையில் பிரபலமான இந்த நிறுவனம் நமக்கு இது வரை 22% லாபம் கொடுத்துள்ளது. மூன்று மாதங்களில் 22% லாபம் கொடுத்து பொன் முட்டையிடும் வாத்து போல் நமது போர்ட் போலியோவில் உள்ளது.

கடந்த சில தினங்கள் முன் காலாண்டு நிதி அறிக்கை வெளியிடப்பட்டது. சந்தை தரகர்களின் எதிர் பார்ப்பை விட அதிகமாக லாபம் கொடுத்துள்ளது.


சுருக்கமான நிதி நிலை அறிக்கை இங்கே.

BRITANNIA2Q'132Q'12Growth
Net sales(in Cr)
1753
1559
12%
EBIT(In Cr)
142
77
84%
Net Profit (in Cr)
97
59
66%
EPS (In Cr)
8.15
4.93
66%


இனி நிதி நிலை முடிவுகளின் முக்கிய குறிப்புகளைப் பார்ப்போம். கடந்த வருட காலாண்டு அறிக்கையுடன்  ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

  • விற்பனை 12% அதிகரித்துள்ளது.
  • நிகர லாபம் 66% அதிகரித்துள்ளது.
  • செலவு கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 
  • நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளன.

ITC, HUL வரிசையில் ஓய்வுக்கு திட்டமிடும் நண்பர்களுக்கு ஏற்ற நிறுவனமாக BRITANNIA மாறி வருகிறது. கிராம புறங்களிலும் இதன் தயாரிப்புகள் பிரபலமாகி வருவது நிறுவனத்துக்கு சாதகமாக உள்ளது. பால் சார்ந்த பொருட்களிலும் நிறுவனம் நுழைந்து வருவது சந்தையை விரிவாக்க பெரிதும் உதவும்.அதனால் இந்த பங்கில் தொடரலாம்.

முழு விவரங்களுக்கு இங்கு பார்க்க..
BRITANNIA நிதி நிலை அறிக்கை 2Q 2013

நமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...

எளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.

இங்கு எமது ஏற்கனவே பரிந்துரைத்த போர்ட்போலியோ விவரங்களைப் பார்க்கலாம்.
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக