வெள்ளி, 8 நவம்பர், 2013

அள்ள அள்ள பணம் - ஒரு அறிமுகம் (ப.ஆ - 2)

கடந்த பதிவில் பங்குச்சந்தை ஆரம்பம் என்ற தொடர் எழுதுவதாக கூறி இருந்தோம். இங்கு பார்க்க..
பங்குச்சந்தை ஆரம்பம் - தொடர் முன்னோட்டம்

'பங்குச்சந்தை அறிமுகம்' தொடரின் முதல் பகுதியாக ஒரு புத்தகத்தை
பரிந்துரைக்கிறோம்.

சில நண்பர்கள் பொருளாதார பகுதியின் ஆங்கில வார்த்தைகள் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது, அதனால் தமிழ் புத்தகங்களை பரிந்துரை செய்யுமாறு கேட்டிருந்தார்கள்.


பங்கு வர்த்தகம் செய்யும் போது அடிப்படை புத்தக அறிவு கண்டிப்பாக தேவை. புத்தகத்துக்கு முதலீடு செய்வதை கண்டிப்பாக மிகக் குறைந்த காலத்தில் பங்குச்சந்தையில் பெற்று விடலாம். அதனால் புத்தக அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம்.முதல் புத்தகமாக தமிழில் எளிமையாக பங்குச்சந்தை பற்றி விளக்கப்பட்டிருந்த ஓர் புத்தகத்தைப் பற்றி பகிர்கிறோம்.

இந்த புத்தகம் அள்ள அள்ள பணம் என்ற பெயரில் ஐந்து தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இந்த புத்தகத்தை தன்னம்பிக்கை, முன்னேற்றம் தொடர்பாக அதிக புத்தகங்கள் எழுதியுள்ள திரு.சோம வள்ளியப்பன் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

அவரைப் பற்றிய விவரங்களுக்கு இங்கே பார்க்க..
Soma Valliyappan in Wikipedia

தமிழில் ஐந்து வருடங்களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பிரதிகள் விற்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் எளிதான தமிழ் சொற்பதங்களால் விளக்கப்பட்டுள்ளதால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். ஐந்து தொகுதிகளில் மூன்றை நாம் பரிந்துரைக்கிறோம்.

அமேசான் தளத்தில் குறைவான விலையில் கிடைக்கிறது. மூன்று புத்தகங்களும் சேர்ந்து வாங்கும் பொது அஞ்சல் வழி செலவு 120 ரூபாய் குறையும்.
அள்ள அள்ள பணம் – 1 (பங்குச்சந்தை அறிமுகம்)

பங்குச்சந்தை பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தை இந்த புத்தகம் கொடுக்கிறது. பங்குச்சந்தை பதங்கள் அழகாக விளக்கப்பட்டுள்ளன. கண்டிப்பாக வாங்கி படியுங்கள்.

அள்ள அள்ள பணம் - 2 (பங்குச்சந்தை அடிப்படை)

பங்குகளின் Fundamental Analysis, Technical Analysis போன்ற விவரங்கள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் Fundamental Analysis பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். கண்டிப்பாக வாங்கி படியுங்கள்.

அள்ள அள்ள பணம் - 3 (Future & Options)

இந்த புத்தகம் குறிகிய கால பங்கு வர்த்தகத்தில் உள்ள Future & Options பற்றி சொல்கிறது. இதனை நமது வாசகர்கள் தவிர்த்து விடலாம்.

அள்ள அள்ள பணம் - 4 (போர்ட்போலியோ முதலீடுகள்)

இந்த புத்தகம் நீண்ட கால முதலீடான போர்ட்போலியோ முதலீடைப் பற்றி சொல்கிறது. கண்டிப்பாக வாங்கி படியுங்கள்.

அள்ள அள்ள பணம் - 5  (ட்ரேடிங்)

இந்த புத்தகம் தினசரி வர்த்தகம் பற்றி சொல்கிறது. விருப்பமுள்ளவர்கள் வாங்கி படியுங்கள்.

தொடரின் அடுத்த பாகம்..

English Summary:
"Alla Alla panam" book is giving share market tips in Tamil. It is coming with 5 parts like share market basics, future & options, portfolio investments, trading. Available with Amazon.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக