வியாழன், 7 நவம்பர், 2013

பங்குச்சந்தை ஆரம்பம் - தொடர் முன்னோட்டம் (ப.ஆ - 1)

எமது பதிவுகளில் பங்குச்சந்தையில் மிக ஆரம்ப நிலை முதலீட்டார்களுக்கான தகவல்கள் அதிகம் வேண்டும்  என்று சில மின்னஞ்சல்களில் கருத்துகள் வந்திருந்தன.

இது உண்மை தான். இது வரை எமது தளத்தில் ஆரம்ப நிலை முதலீட்டார்கள் பற்றிய பதிவுகள் இடம் பெறவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.


முதலில் பொருளாதார பதிவுகள் எழுதுவதால் வாசகர்கள் நம்பிக்கை பெற எமது தகுதியை ஏதேனும் ஒரு விதத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். அதனை நிரூபித்தால் தான் வாசகர்கள் எம்மைத் தொடர்வதில் ஒரு அர்த்தம் உள்ளது.அதனால் கடந்த மூன்று மாதங்களாக ஒன்பது பங்குகளை பரிந்துரை செய்து இருந்தோம்.அவற்றின் நிதி நிலை முடிவுகள் ஒவ்வொன்றாக வந்த வண்ணம் உள்ளன.

நாம் எதிர்பார்த்தது போல் நல்ல நிதி நிலை அறிக்கைகளால் பங்குகளின் விலைகளும் நன்கு உயர்ந்து உள்ளது. எமது போர்ட்போலியோ பங்குச்சந்தை சரிவுகளுக்கு இடையிலும் 2 மாதத்தில் 12% லாபத்தில் இயங்கி கொண்டு இருக்கிறது.


இரண்டாவது எந்த மாதிரி பதிவுகளை எழுதுவது என்று ஆரம்பத்தில் ஒரு குழப்பம் இருந்தது. ஏற்கனவே இருந்த தமிழ் பொருளாதார தளங்களைப் பார்த்தோம். அவை பங்குச்சந்தை தினசரி வர்த்தகம் பற்றியே அதிகமாக இருந்தன. அடிப்படைகள் குறைவாக இருந்தன.

அதனால் பங்கு மதிப்பீடல் போன்ற அடிப்படைகளை பற்றி அதிகமாக எழுதலாம் என்று நினைத்து அதற்கேற்ற வகையில் எழுதினோம்.. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனாலும் பங்குச்சந்தை அடிப்படைகளுக்கு முன் உள்ள நிலையான பங்கு வர்த்தகத்தில் எப்படி ஈடுபடுவது என்பதை  பற்றியும் சொல்ல வேண்டியது அவசியமாக உள்ளது என்பதை நண்பர்கள் கருத்துகள் மூலம் புரிந்து கொண்டோம்.

அதனால் பங்குச்சந்தை ஆரம்பம் என்ற பெயரில் ஒரு தொடராக எழுதுகிறோம். உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டால் அதற்கேற்ற வகையில் இந்த தொடர் செல்லும்.

குறைந்த பட்சம் வாரம் ஒரு முறை இந்த தொடர் வெளிவரும் வகையில் பார்த்துக் கொள்கிறோம்.

ஆங்கில பொருளாதார சொற்கள் புரிந்து கொள்வதற்கு கடினமாக உள்ளது என்று கருத்துகள் வருகின்றன. அதனால் எமது தொடரில் தமிழில் எளிய சொற்பதங்கள் வரும்படி பார்த்துக் கொள்கிறோம்.

இன்னும் நிறைய கருத்துகள் வருகின்றன. அதனால் இப்பொழுது நிறைய பதிவிற்கான தலைப்புகள் தயாராக உள்ளது. ஆனால் அலுவலக வேலைப்பளுவுக்கிடையில் எழுதுவது சில சமயங்களில் கடினமாக உள்ளது. அதனால் கொஞ்சம் மெதுவாக ஒவ்வொன்றாக எழுதுகிறோம்.

உங்கள் கருத்துகளை பகிர்ந்து ஆதரவு அளியுங்கள்!

தொடரின் அடுத்த பாகம்..

English Summary:
The introduction about "Pangusanthai Aarambam" series. This will give information or lessons for investing in share market based on value investing.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

6 கருத்துகள்: