தற்போது இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் வியக்க வைக்கிறது.
ஆளுங்கட்சிக்கு தான் சொல்லும்படியாக பேச ஒன்றும் இல்லை என்றால் எதிர் கட்சிகளுக்கு விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கம், வேலைவாய்ப்பு குறைவு என்று பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளும் நிறையவே இருக்கின்றன.
ஆனால் நமது அரசியல்வாதிகள் பழைய வரலாறுகள், தனிநபர் தாக்கம் போன்றவற்றை மட்டும் பிரதானமாக எடுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் தாங்கள் செய்ய இருக்கும் பணிகள், இந்த ஆட்சியின் நடைமுறை குறைகள் போன்றவற்றை கண்டுபிடித்து பிரசாரம் செய்தாலே எளிதில் ஓட்டுகளைப் பெறலாம்.
பாரதீய ஜனதா கட்சி கடந்த பத்து வருடமாக எதிர்க்கட்சி பணியினை சரி வர செய்ததாக தெரியவில்லை. தற்போதைய பிரச்சாரமும் வேறு வழியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
முக்கிய எதிர்க்கட்சி என்பது ஆளுங்கட்சியைப் போல் எல்லா இந்திய மக்களுக்கும் பொதுவானது.
அதனால் பிஜேபி தனது அடுத்த கட்டத்தை நோக்கி சொல்ல வேண்டுமானால் தனது குறுகிய சார்புடைய மதம் மற்றும் மற்ற கொள்கைகளை விட்டுத் அணைத்து மக்களுக்கும் பொதுவானதாக மாற வேண்டும்.
அது போல் இலங்கை தமிழர், தெலுங்கானா போன்ற மாநிலம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பேச்சு என்றே சென்று வருகிறது..
நாங்களும் மாற்றத்தை எதிர் பார்க்கிறோம். அதே போல் நீங்களும் கொஞ்சம் மாறுங்கள்!
உலகின் ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு வலுவான எதிர்க்கட்சி இல்லை என்பது மிகப்பெரிய குறையே.

வலுவான ஆளுங்கட்சியும் இல்லை
பதிலளிநீக்கு