வெள்ளி, 16 ஜனவரி, 2015

விடுமுறையில் செல்கிறோம்

நண்பர்களே,

நாளை (ஜனவரி 17 ) முதல் பிப்ரவரி 8 வரை மூன்று வார இடைவெளியில் அலுவலக விடுமுறையில் இந்தியா செல்கிறோம்.


உறவுகள் சந்திப்பு, விழாக்கள் என்று கொஞ்சம் பிசியாக இருப்பதால் ஜனவரி 17 முதல் ஜனவரி 26 வரை போர்ட்போலியோ சேவைகள் தர இயலாது உள்ளோம். ஆனாலும் இந்த இடைவெளியில் குறைந்த பட்ச கட்டுரைகள் எழுத முயற்சிக்கிறோம்.ஜனவரி 26க்கு பிறகு விடுமுறை வேலைகள் முடிந்து ஓய்வு கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் மீண்டும் பழைய நிலையில் தொடர்கிறோம்.

இந்த இடைவெளியில் பங்குச்சந்தையை பொறுத்தவரை நிறைய நிறுவனங்களின் நிதி அறிக்கை முடிவுகள் வெளிவருகின்றன. இது தான் பங்குச்சந்தையை ஆட்டுவிக்கும் காரணியாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

இது போக நமது சில போர்ட்போலியோவில் TVS பங்கை 145 ரூபாயில் இருந்தே பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது 300 ரூபாயை தாண்டி விட்டது. 100% க்கும் மேல் லாபம் அடைந்து விட்டதால் அந்த பங்கை விற்று லாபத்தை உறுதி செய்யுமாறு போர்ட்போலியோ மூலம் வாங்கிய நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

நேற்றும் இன்றும் நிறைய பயன்தரும் செய்திகள் வந்துள்ளன. பயண வேலைகள் காரணமாக விளக்கமாக எழுத முடியவில்லை. இருந்தாலும் சுருக்கமாக தருகிறோம்.

எதிர்பாராத அளவில் ரிசர்வ் வங்கி தமது வட்டி விகிதத்தை 0.25% குறைத்து விட்டது. இதனால் நமது வீட்டுக்கடன்களின் வட்டி குறையும் நிலை வந்துள்ளது. அதே நேரத்தில் வைப்பு நிதிகளுக்கு வட்டி குறையும்.

பங்குச்சந்தையைப் பொறுத்தவரை பணப்புழக்கம் அதிகமாவதால் அதிகபட்ச நேர்மறையாகவே கருதலாம். நீண்ட நாள் காத்திருந்து வட்டி குறைப்பை பெற்றுள்ளோம்.

லாபம் குறையலாம், ஆட்கள் குறைப்பு என்று பஞ்சப்பாட்டு பாடிய TCS நல்ல நிதி அறிக்கையே கொடுத்துள்ளது என்பதையும் கவனிக்க.

பார்க்க: லாபம் சரியாமலே TCS செய்யும் ஆட்குறைப்பு

அதே போல் AXIS வங்கியும் 18% வளர்ச்சி என்ற நல்ல நிதி அறிக்கையைக் கொடுத்துள்ளது. YES BANKம் நன்றாக வந்துள்ளது.

ஆக, இந்த காலாண்டு நிதி அறிக்கை சீசன் நல்ல விதமாகவே தொடங்கியுள்ளது.

இது தொடரும் பட்சத்தில் பங்குச்சந்தை அடுத்த பாய்ச்சலுக்கு தயாராவதையும் உணரலாம். மோடி அலையை விட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

எமது அடுத்த போர்ட்போலியோ விடுமுறை முடிந்து பிப்ரவரி 21 அன்று தருகிறோம்.

புரிதலுக்கு நன்றி!

நட்புடன்,
முதலீடு

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: