வெள்ளி, 13 செப்டம்பர், 2013

சுயதொழில்: கால் பைக் பிசினசை எப்படி நடத்துவது? -2


முந்தைய பதிவின் தொடர்ச்சி..(கால் பைக் பிசினசை எப்படி நடத்துவது?)


மேலே உள்ள சேவைகளை குறிப்பிட்டு துண்டுப் பிரசுரம் அடியுங்கள். அதை அனைவருக்கும் விநியோகம் செய்யுங்கள்....


வருடத்திற்கு ரூ 10 இலட்சத்திற்கும் குறைவாக டர்ன் ஓவர் இருந்தால் அதற்கு வணிக வரித்துறையிடம் இருந்து VAT பதிவு செய்ய வேண்டியதில்லை. VAT பதிவு இல்லாமலேயே சேவை வரியாக 1% கட்டிவிட்டுப் போகலாம்.

ஒரு நல்ல கணக்காளரை (பகுதி நேரப் பணியாளர்) உங்களின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ள வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள்.....

ஆட்டோ ரிக்ஷாக் காரர்கள் முதலில் எதிர்க்கத்தான் செய்வார்கள். ஆனால் அவர்களிடம் சொல்லுங்கள், உங்களது கம்பெனி கூரியர் கம்பெனிதான் என்று.

கேரளாவில் கொச்சியில் இதுபோல ஒரு தொழில் மிகவும் பிரமாதமாக 2003 இல் இருந்து நடக்கிறது என்று கேள்விப் பட்டேன். அது போலவே ஆந்திராவிலும் நடப்பதாகத் தெரிகிறது....

ஆகவே... தைரியமாகத் தொடங்குங்கள்...... ஒவ்வொரு ஊரிலும் இதை நீங்கள் தொடங்கலாம். அலுவலகம் தனியாக வேண்டாதோர் தங்கள் வீட்டையே சிறிய அலுவலகமாக மாற்றிக் கொள்ளலாம். தங்கள் தொடர்பு என் உங்களது கைபெசியாகவே இருக்கட்டும்....
பெண்களும் இந்த தொழிலைத் தொடங்கலாம். முதலில் ஒரே ஒரு பைக் வைத்துக் கொண்டு செய்யுங்கள். அது நீங்களாகவே இருக்கட்டும். இந்தத் தொழிலை நீங்களே செய்யும்போது அதில் உள்ள கஷ்டங்கள் உங்களுக்குப் புரியும். தொழில் வளரும்போது அடுத்து எத்தனை பைக் வாடகைக்கு எடுக்கலாம் என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்....

ஒன்று மட்டும் நிச்சயம், இதை நீங்கள் செய்யாமல் வேறு யாராவது செய்தால் அவருடன் கூட்டு சேர்ந்து செய்வோம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் தனியாக நின்று இதை செய்யும்போதுதான் தன்னம்பிக்கை வரும்... பின்னர் வேறு ஒரு தொழிலை செய்ய நினைக்கையில் இந்த தன்னம்பிக்கைதான் துணை வரும் என்பதை மறவாதீர்கள்...

என்னுடைய வாழ்த்துக்கள் எப்போதும் உங்களுக்கு உண்டு...

வெற்றி உங்கள் பக்கம்.....

- டி பெ
By: டிமிடித் பெட்கோவ்ஸ்கி

#####

சில சமயங்களில் புதுமையான தொழில்கள் நல்ல வரவேற்பு பெறுவதுண்டு. நம்ம ஊர் ஆட்டோக்களைக் கண்டு வெறுத்துப் பொய் உள்ள மக்கள் இதற்கு ஆதரவு கொடுக்க வாய்ப்புகள் அதிகம். ஆட்டோவை விட சீக்கிரமாகவும் போய் சேரலாம்.

நாமும் வாழ்த்துகிறோம்!

தொடர்பான பதிவு:

ஒரு பயனுள்ள பதிவு

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 1


English Summary:
Call Bike business is one of good option for entrepreneur. Reduces fuel consumption and traffic in the country.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: