செவ்வாய், 3 செப்டம்பர், 2013

இந்திய மருந்து விலை கட்டுப்பாடு யாரை எப்படிப் பாதிக்கும்?

இந்திய அரசு கடந்த வருடம் மருந்து விலை கட்டுப்பாடு கொள்கையை(Drug Price Control Policy) அறிமுகப்படுத்தியது. அதன் படி 334 அடிப்படை மருந்துகளின் விலை 70% வரை குறைக்கப்படும்.

ஒரு இந்திய குடிமகனாக இந்த நடவடிக்கை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்க வேண்டிய நடவடிக்கை.

ஒரே மருந்தினை வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விலைகளில் மருந்து நிறுவனங்கள் விற்று வருகின்றன.பாமர மக்களைப் பாதுகாக்க இந்த நிறுவனங்களுக்கு கடிவாளம் கட்டாயம் அவசியம்.


விலை வித்தியாசத்தை பாருங்கள் (பெரிதாக்க சொடுக்கவும்)

அதே நேரத்தில் ஒரு முதலீட்டாளனாக பாதிக்கப்படும் நிறுவனங்களைப் பற்றி தெரிய வேண்டியது அவசியமாகிறது. நாம் ஒரு பங்கு பரிந்துரை பதிவில் "Abbott India" என்ற நிறுவனத்தைப் பரிந்துரை செய்திருந்தோம். இதனால் மருந்து விலை கட்டுப்பாடு இந்த நிறுவனத்தை எவ்வாறு பாதிக்கிறது என்று சொல்வதும் நமது கடமையாகிறது.

தொடர்புடைய பதிவு:
இந்திய ஊட்டச்சத்து மருந்து சந்தையை பிடிக்கும் Abbott

இந்த கொள்கை கிட்டத்தட்ட எல்லா மருந்து நிறுவனங்களையும் பாதிக்கிறது. சதவீத அளவு தான் நிறுவனங்களிடம் வேறுபடுகிறது. உள்நாட்டு மருந்து சந்தையை அதிகம் சார்ந்திருக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. மற்ற நிறுவனங்கள் குறைந்த அளவில் பாதிக்கப்படுகின்றன. 


இதனை எதிர்த்து CIPLA, RANBAXY போன்ற நிறுவனங்கள் நீதி மன்றத்துக்கு சென்றுள்ளன. ஆனால் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. அநேகமாக அரசுக்கே சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

"Abbott India" பொறுத்த வரை ஏழு மருந்துகள் இந்த கொள்கையில் வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் இந்த நிறுவனத்தின் லாபம் 88 கோடி வரை குறையும். இது March 2013 நிதிநிலை அறிக்கையின் படி நிறுவன லாபத்தின் 4.7% ஆகும்.

இந்த கொள்கையால் பாதிக்கப்படும் மற்ற நிறுவங்களின் லாப சதவீதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Sun Pharma (-3%)
Lupin (-4%)
Abbot india (-4.7%)
Dr Reddy (-6%)
Cipla & IPCA (-7%)
Cadila (-9%)
GSK (-16%).,

அந்த வகையில் "Abbott India" லாப குறைவு மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் சராசரிக்கு கீழேயே உள்ளது. நாம் பரிந்துரைத்த போதே பங்கு விலை கணிசமாக இறங்கி திருத்தம் செய்யப்பட்டிருந்தது. 

மற்ற நிறுவனங்களை விட வளர்ச்சி இன்னும் அதிகமாக உள்ளது.(+11% Vs சராசரி +10%. லாபம்) அதனால் இதைப் பற்றி அதிகம் கவலை கொள்ள வேண்டாம் என்றே கருதுகிறோம். நீண்ட கால நோக்கில் இது ஒரு நல்ல மருந்து பங்கே.

இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பின் உங்கள் ஓட்டினைப் பதிவு செய்யவும். தங்கள் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயக்கமின்றி பதிவு செய்யவும்.

English Summary:
Which Pharma companies will be affected by Medicine price control in India?

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: