சனி, 31 ஆகஸ்ட், 2013

நமது வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இன்று இந்த தளத்தைப் பார்த்தோர் எண்ணிக்கை(Page Views) 15000 தாண்டியது. மிக்க மகிச்சி!

பொதுவாக பொருளாதாரம் சார்ந்த பதிவுகளுக்கு மற்ற திரை, அரசியல் சார்ந்த பதிவுகளை விட வரவேற்பு குறைவாகவே இருக்கும். அதற்கு பொருளாதார பதிவுகளின் புரிதல் கடினத்தன்மையே காரணமாக இருக்கும்.


அதனை நம் தாய் மொழியில் எளிதாக சொல்லும் போது விரைவில் புரியும். அதற்காகவே இந்த தளத்தை ஆரம்பித்தோம். நாம் எதிர் பார்த்ததை விட ஆதரவு அதிகமாகவே இருந்தது. எமது நன்றிகள்!


இன்னும் ஒரு சிறிய வேண்டுகோள்:

நமது பதிவுகள் திரட்டியின் முதல் பக்கங்களில் இருக்கும் வரை வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன் பின் மிகக் குறைந்து விடுகிறது.

திரட்டிகள் பதிவுகளின் தரத்தை விட எண்களை(View Count, Click Count, Comment Count, Vote Count) மையப்படுத்தி வடிவமைக்கப் பட்டுள்ளதால் பொருளாதாரம் சார்ந்த பதிவுகள் கவர்ச்சி பதிவுகளுடன் போட்டி போட முடிய விடாமல் போய் விடுகிறது.

புதிதாக பதிவு எழுதுபவர்கள், துறை சார்ந்த பதிவர்களுக்கு இது ஒரு பெரிய சவாலாக உள்ளது. அதற்காக கவர்ச்சிகரமான தலைப்புகள் கொடுத்து நமது தளத்தின் தரத்தை குறைத்து கொள்வதும் சரியல்ல.

அதனால் நம் வாசகர்கள் உங்கள் கருத்துகள் எது இருப்பினும் பின்னுட்டமிடுங்கள். பதிவுகள் பயனுள்ளதாக இருந்தால் திரட்டிகளில் உங்கள் ஓட்டினைத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அதன் மூலம் எமது பதிவுகள் இன்னும் சிறிது நேரம் திரட்டிகளின் முதல் பக்கத்தில் இருந்து அதிகம் நண்பர்களை சென்றடைய வாய்ப்பாக இருக்கும்! எமக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக அமையும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

8 கருத்துகள்:

  1. மின்னஞ்சல் மூலம் உங்கள் பதிவுகளைப் பெறுவதற்கான ஆப்சனை இணையுங்கள். அதன்மூலமாக, ரெகுலராகப் படிக்க விரும்புவோர் உங்களைத் தொடர முடியும்.

    முன்பு பாலோயர் விட்ஜெட் இருந்தது. தற்சமயம் அந்த ஆப்சன் ப்ளாக்கரிலில்லை என்று கேள்வி.செக் பண்ணுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே! மின்னஞ்சல் சேர்க்கப்பட்டது..ஆலோசனைக்கு நன்றி!

      நீக்கு
  2. இன்னொரு டகால்ட்டி ட்ப்ஸ்: கொஞ்ச நாளைக்கு கூச்சப்படாமல், பல பதிவுகளுக்கும் சென்று 'அருமை..ஆஹா..அடடா..பின்னிட்டேள்' என்று கமெண்ட் போடவும். அந்த வலைப்பூவின் வாசகர்கள் 'அட..ராமா' என்று உங்களையும் பின் தொடரலாம்.

    உங்கள் பதிவின் லின்க்கையும் அந்த கமெண்ட்டின் கீழே கொடுக்கவும். சிலர் அதை விரும்பாமல் போகலாம். ஆனால், எனது ப்ளாக், ஓப்பன் டூ ஆல்.(Including Namitha!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் டிப்சை செயல் படுத்த ஆரம்பித்து விட்டேன்..சில நேரங்களில் இந்த மாதிரியான உத்திகள் கண்டிப்பாக தேவையாக உள்ளது..நன்றி!

      நீக்கு