"பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் முந்தைய கட்டுரையில் முக மதிப்பு பற்றி விரிவாக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சியாக டிவிடென்ட் பற்றியும், முகமதிப்பை அடிப்படையாக வைத்து டிவிடென்ட் தொகையினை கணக்கிடுவது பற்றியும் தற்போது பார்ப்போம்.
பங்குச்சந்தை என்பது சில நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் லாபத்தை பகிர்வது என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து இயங்குகிறது. இந்த லாபத்தை பகிரும் ஒரு வகை முறையே டிவிடென்ட் ஆகும்.
ஒரு நிறுவனம் முதலீட்டுத் தொகையில் 20% லாபம் அடைந்து இருந்தால் நமக்கும் அந்த 20% லாபம் அப்படியே பகிர்ந்து கொடுத்திருக்க வேண்டும் என்று நாம் நினைக்கலாம்.
ஆனால் அப்படியே லாபம் முழுமையாக பகிர்ந்து கொடுக்கப்படுவதில்லை. இந்த லாபத்தின் பெரும்பகுதி நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக முதலீடு செய்யப்படும். ஒரு சிறும்பகுதி மட்டுமே டிவிடென்ட்டாக பகிர்ந்து அளிக்கப்படும்.
டிவிடென்ட் அளிக்கப்பட வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஆனால் சீராக டிவிடென்ட் கொடுத்து வரும் நிறுவனங்களின் நிர்வாகம் முதலீட்டாளர்களின் நண்பனாக கருதப்படும். இதனால் பங்குகளை வாங்கும் போது டிவிடென்ட்டும் சீரான இடைவெளியில் கொடுக்கப்படுகிறதா? என்பதைக் கவனிப்பது அவசியம். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் டிவிடென்ட் கொடுப்பதில்லை.
மேலே லாபத்தின் பெரும்பகுதி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக முதலீடு செய்யப்படுகிறது என்று சொல்லி இருந்தோம். அப்படி என்றால், முதலீட்டாளர்கள் எவ்வாறு பலன் பெறுவார்கள் என்ற கேள்வி எழலாம்.
அவ்வாறு வளர்ச்சிக்கு முதலீடு செய்யும் போது நிறுவனத்தின் மதிப்பு கூடி விடுகிறது. அதனால் பங்கு மதிப்புகளும் கூடி விடுகின்றன. பங்கு மதிப்பு கூடும் போது முதலீட்டின் மதிப்பும் விடுகிறது. இது மற்றொரு வழியில் முதலீட்டாளர்களுக்கு ரிடர்னை கொடுத்து விடும்.
டிவிடென்ட் மூலம் கொடுக்கப்படும் பணத்திற்கு வரி கிடையாது. ஆனால், பங்கு லாபங்களை ஒரு வருடத்தில் விற்றால் வரி கட்ட வேண்டும் என்பதையும் கவனிக்க. அதனால் டிவிடென்ட் சிறப்பு வரிவிலக்கு சலுகையும் அளிக்கிறது.
இனி டிவிடென்ட்டை எப்படி கணக்கிடுவது என்பது பற்றி பார்ப்போம்.
டிவிடென்ட் என்பது பங்கு மதிப்புடன் சேர்ந்து மாறுபடுவது அல்ல. அது நிலையான தொகை. அதனால் நிலையான மற்றொரு மதிப்பான முக மதிப்பை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது.
டிவிடென்ட்டை கணக்கிடும் முன் முகமதிப்பை பற்றி தெளிவாக அறிந்து கொள்வதும் அவசியம். அதனால் நாம் முன்னர் எழுதிய கட்டுரையை படித்து வந்தால் எளிதாக இருக்கும்.
ஒரு உதாரனத்தை எடுத்துக் கொள்வோம்.
கடைசியாக HCL Technologies நிறுவனத்தின் டிவிடென்ட் கீழே உள்ளவாறு வழங்கப்பட்டுள்ளது.
மேலே உள்ளதைப் படிப்பதில் சிறிது குழப்பம் ஏற்படலாம். டிவிடென்ட் 600% என்று குறிப்பிட்டுள்ளார்கள். அப்படி என்றால், பங்கு மதிப்பில் இருந்து 600% வழங்குகிறார்கள் என்று தான் முதலில் நினைக்கத் தோன்றும். பங்கு மதிப்பில் வழங்குவதாக இருந்தால் தற்போதைய பங்கு விலை (1500) * 6 = 9000 ரூபாய் என்று ஒவ்வொரு பங்கிற்கும் வழங்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு இல்லை. இந்த 600% என்பது பங்கின் முக மதிப்பிலிருந்து கணக்கிடப்படுகிறது. HCL பங்கின் முக மதிப்பு 2 ரூபாய். அதில் 600% என்று கணக்கிட்டால் 2*6 = 12 ரூபாய் பங்கிற்கு வழங்கப்படுகிறது. ஒருவர் 10 பங்குகளை வைத்து இருந்தால் 10*12 = 120 ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு வந்து சேரும்.
மேல் உள்ள அட்டவணையில், Effective Date என்ற ஒன்று உள்ளது. இந்த தேதியில் யார் பங்கு வைத்து இருப்பர்களோ அவர்களுக்கு டிவிடென்ட் கிடைக்கும். ஒரு நாள் பின்னதாக சென்றாலும், அதாவது ஆகஸ்ட் 6ல் பங்கை வாங்கினவருக்கு டிவிடென்ட் கிடைக்காது. டிவிடென்ட் வழங்கிய தேதியில் பங்கு மதிப்பும் டிவிடென்ட் மதிப்பிற்கு ஏற்றவாறு குறையும்.
இவ்வாறு டிவிடென்ட் ஒரு நிறுவனத்தை மதிப்பிடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பகுதி..
எமது குறைந்த கட்டண போர்ட்போலியோ சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேவையான நண்பர்கள் இணைந்து கொள்ளலாம்.
முகவரி: muthaleedu@gmail.com
English Summary:
Dividends are the methods for sharing profit with investors. All profits will not be given as dividend. Major profit portions are reinvested for growth of company. Dividends give tax exemption benefit.

Announcement Date | Effective Date | Dividend Date | Dividend(%) | Remarks |
28/07/2014 | 05/08/2014 | Interim | 600% | Rs.12.0000 per share(600%)Interim Dividend |
மேலே உள்ளதைப் படிப்பதில் சிறிது குழப்பம் ஏற்படலாம். டிவிடென்ட் 600% என்று குறிப்பிட்டுள்ளார்கள். அப்படி என்றால், பங்கு மதிப்பில் இருந்து 600% வழங்குகிறார்கள் என்று தான் முதலில் நினைக்கத் தோன்றும். பங்கு மதிப்பில் வழங்குவதாக இருந்தால் தற்போதைய பங்கு விலை (1500) * 6 = 9000 ரூபாய் என்று ஒவ்வொரு பங்கிற்கும் வழங்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு இல்லை. இந்த 600% என்பது பங்கின் முக மதிப்பிலிருந்து கணக்கிடப்படுகிறது. HCL பங்கின் முக மதிப்பு 2 ரூபாய். அதில் 600% என்று கணக்கிட்டால் 2*6 = 12 ரூபாய் பங்கிற்கு வழங்கப்படுகிறது. ஒருவர் 10 பங்குகளை வைத்து இருந்தால் 10*12 = 120 ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு வந்து சேரும்.
மேல் உள்ள அட்டவணையில், Effective Date என்ற ஒன்று உள்ளது. இந்த தேதியில் யார் பங்கு வைத்து இருப்பர்களோ அவர்களுக்கு டிவிடென்ட் கிடைக்கும். ஒரு நாள் பின்னதாக சென்றாலும், அதாவது ஆகஸ்ட் 6ல் பங்கை வாங்கினவருக்கு டிவிடென்ட் கிடைக்காது. டிவிடென்ட் வழங்கிய தேதியில் பங்கு மதிப்பும் டிவிடென்ட் மதிப்பிற்கு ஏற்றவாறு குறையும்.
இவ்வாறு டிவிடென்ட் ஒரு நிறுவனத்தை மதிப்பிடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பகுதி..
எமது குறைந்த கட்டண போர்ட்போலியோ சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேவையான நண்பர்கள் இணைந்து கொள்ளலாம்.
முகவரி: muthaleedu@gmail.com
English Summary:
Dividends are the methods for sharing profit with investors. All profits will not be given as dividend. Major profit portions are reinvested for growth of company. Dividends give tax exemption benefit.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக