திங்கள், 4 ஆகஸ்ட், 2014

முதலீடு தளத்தில் நீங்களும் எழுதலாம்

பல வித துறைகளில் பணிபுரிந்து வரும் எமது வாசகர்கள் துறை அனுபவங்களை தமிழில் எழுதுவதற்கு எமது தளத்தில் ஒரு வாய்ப்பு.

அதே போல் சிறு தொழில் முனைவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களது வெற்றிக்கான காரணங்களையும், அனுபவங்களையும் பகிர்வதோடு தங்கள் நிறுவனங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகமும் செய்து கொள்ளலாம்.

எல்லாரும் எழுத்தாளர் தான்..

எமது தளத்தின் வாசகர்கள் சுயதொழில் மற்றும் பல வேலைவாய்ப்புகள் தொடர்பான விவரங்களைப் பெறுவதற்கு ஆர்வமாக இருப்பதால் இந்த 'Guest Blogging' முறையை அறிமுகப்படுத்துகிறோம்.

எழுதுபவர்களுக்கு தங்கள் எழுத்துக்கள் எமது தளத்தை தொடரும் ஆறாயிரம் வாசகர்களை எளிதில் அடையும்.  சுயதொழில் புரியும் நண்பர்களுக்கு தங்களை, தங்கள் நிறுவனத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பாக இருக்கும்.

இவ்வாறு எழுதப்படும் "Guest Blogging" பதிவுகள் வாரத்திற்கு ஒன்று என்ற அளவில் வெளியிடப்படும்.

வழிமுறைகள்
  • வேலைவாய்ப்பு, சுயதொழில், பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
  • சினிமா, அரசியல் போன்றவை தொடர்பான கட்டுரைகளை தவிர்த்து விடலாம்.
  • தங்களது எழுத்துக்கள் வேறு எங்கும் நகல் எடுக்கப்படாததாக இருத்தல் அவசியம்.
  • கட்டுரைகள் தரத்துடனும், பிழைகள் இல்லாதும் இருத்தல் வேண்டும்.
  • அறிமுகம் பற்றிய விவரங்கள் 200 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கலாம்.
  • எழுதுபவர்கள் தங்கள் புகைப்படத்தை விருப்பமிருந்தால் பகிரலாம்.
  • ப்ளாக் எழுதுபவர்கள் தங்கள் தளத்திற்கான இணைப்பையும் பகிரலாம்.

தங்களது கட்டுரைகளை muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு தமிழில் அனுப்பலாம்.

இந்த முறையில் வெளியிடப்படும் கட்டுரைகளின் ஆசிரியர்களுக்கு வெகுமதியாக 300 ரூபாய் மதிப்புள்ள முதலீடு தளத்தின் கூப்பன் வழங்கபப்டும். இதனை எமது கட்டண சேவையில் பரிந்துரைகளைப் பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

English Summary:
Announcement of Guest Blogging in Muthaleedu website

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்: