செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

Snowman IPOவை வாங்கலாமா?

இந்தியாவில் இணைய வணிகம், மின்சாரம் போன்றவற்றை அடுத்து அதிக வளர்ச்சி வருமானம் எதிர்பார்க்கப்படுவது உணவு பதப்பனிடுதல் துறை. இந்த துறையில் முதல் முறையாக ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் நுழைகிறது. அந்த நிறுவனத்தின் பெயர் Snowman Logistics Limited.




நாமும் முதல் முறையாக ஒரு IPOவை எமது தளத்தில் பரிந்துரை செய்கிறோம். வழக்கம் போல், ஏன் பரிந்துரை செய்கிறோம் என்பதையும் காரணங்களுடன் கீழே விவரித்துள்ளோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

IPOவைப் பற்றி அறியாதவர்கள் எமது முந்தைய IPO அறிமுக கட்டுரையை பார்க்கலாம்.

இந்தியாவில் உணவு பதப்பனிடுதல் தொழில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மிக நல்ல வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

இந்தியாவில் உணவு மற்றும் மருந்து துறையில் குளிர்ப்பதனப்படுத்தும் கட்டமைப்புகள் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிலும் தற்போதைய மத்திய அரசு உணவு பதப்பனிடுதலில் மிக ஆர்வமாக இருக்கிறது என்பதும் இந்த துறைக்கு ஒரு முக்கிய சாதகமான விஷயம்.

Snowman நிறுவனம் மருந்து மற்றும் உணவு போன்ற கெட்டுப் போகும் பொருட்களை தேவையான வெப்பநிலையில் பரமாரிக்கும் பணியை மேற்கொள்கிறது. இந்த துறையை ஆங்கிலத்தில் Temperature Control Logistics என்று அழைக்கிறார்கள். இது போக  Labelling, Sorting போன்ற சேவைகளையும் இந்த நிறுவனம் அளித்து வருகிறார்கள்.

நிதி நிலையின் படி, 2010லிருந்து பார்த்தால் Snowman நிறுவனத்தின் வருமானம் நான்கு வருடங்களுக்குள் ஐந்து மடங்கு அதிகரித்து உள்ளது. செலவு போக லாபம் மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. கிட்டத்தட்ட சராசரியாக 40% வளர்ச்சியை கடந்த காலங்களில் கொடுத்துள்ளது. இது ஒரு நல்ல வளர்ச்சியே.

இந்த நிறுவனம் தமது பிரிவுகளை இந்தியா முழுமைக்கும் விரிவாக்குவதற்காக பங்குச்சந்தையில் முதலீட்டை திரட்டுகிறது. இதனால் இன்னும் அதிகப்படியான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். கடந்த காலத்தில் பெற்ற துறை அனுபவங்கள் காரணமாக விரிவாக்கங்கள் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் இதே பிரிவில் உள்ள மிக சில நிறுவனங்களில் ஒன்று Snowman என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் நுகர்வோர்கள் பட்டியல் கொஞ்சம் பலமானதே. Hindustan Unilever, Novozymes South Asia, McGain Foods India, Karnataka Co-operative Milk Producers’ Federation, Graviss Foods, Saguna Food, West Coast Fine Foods India போன்றவர்கள் இந்த லிஸ்டில் உள்ளார்கள்.

தற்போது 44~47 ரூபாய் என்ற வரம்பில் பங்கு விலை நிர்னயிக்கப்பட்டுள்ளது. Overscubscription நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் 47 ரூபாயில் IPOவை வாங்கலாம். 300, 600 என்று மடங்குகளில் பங்குகள் தரப்படுகின்றன. அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாய் முதலீடு அனுமதிக்கப்படுகிறது.

இந்த பங்கு IPO என்பதற்கு மட்டுமல்லாமல் மூன்று வருட நீண்ட கால முதலீட்டீற்காகவும் முதலீடு செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும்.

நல்ல வளர்ச்சியைக் கருதி Snowman நிறுவனத்தை 'முதலீடு' பரிந்துரை செய்கிறது.

நடுத்தர மற்றும் அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். IPO விற்கான கடைசி தேதி. நாளை ஆகும். (28/08/2014 ). மேலும் Prospectus விவரங்களை  இந்த இணைப்பில் பெறலாம்.

இதே போன்று தமிழில் விரிவான விளக்கங்களுடன் போர்ட்போலியோ சேவைகளை பெறுவதற்கு எமது குறைந்த கட்டண சேவையில் இணையலாம்.

English Summary:
Snowman's Initial public offer is recommended for BUY in Indian stock market. It is having potential of high growth in food processing.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. Though I was reading CRISIL rating and other recommended article for Snowman logistics IPO. Some how little dilemma to take FIRM Decision.

    After Muthaleedu recomendation, No confusion... Subsription done ....

    Thanks for the suggestion.

    பதிலளிநீக்கு