வியாழன், 21 ஆகஸ்ட், 2014

ஆயில் விலை குறைந்ததால் உற்சாகத்தில் பெட்ரோல் பங்குகள்

கடந்த இரண்டு வாரமாக சந்தையைப் பார்த்து வரும் போது ஒரு நல்ல விடயம் புலப்படுகிறது. அதாவது கடந்த சில வருடங்களாக ஒதுக்கப்பட்ட சில துறை பங்குகள் மீண்டும் எழுச்சியை அடைந்து வருவது நாட்டின் பொருளாதரத்திற்கு நல்ல அறிகுறியே.


கடந்த வாரம் வாகன விற்பனை கணிசமாக அதிகரித்து வந்ததால் ஆட்டோ துறை பங்குகளில் சில பத்து சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது.



அதே போல் இந்த வாரம் பெட்ரோல் துறைக்கு தோதுவாக இருந்தது. கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை குறைந்தது ஆயில் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்தது. இது போக, நிதி அமைச்சர் மானியங்களைக் கணிசமாக குறைக்க முயலுவதும் ஆயில் நிறுவனங்களுக்கு நல்ல செய்தியே.

கடந்த ஒரு பதிவில் இராக் உள்நாட்டு பிரச்சினை காரணமாக பெட்ரோல் துறைக்கு ஏற்படும் பாதிப்பை பற்றி எழுதி இருந்தோம். அதில் விழும் போது இரண்டு வருடங்கள் என்ற நோக்கில் முதலீடு செய்பவர்கள் பெட்ரோல் பங்குகளை வாங்குவதற்காக வாய்ப்பாக கருதிக் கொள்ளலாம் என்றும் சொல்லி இருந்தோம். அப்பொழுது வாங்கி இருந்தவரால் பலனை அடைந்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

சவுதி மற்றும் லிபியா போன்ற நாடுகள் கடந்த மாதத்தில் தமது கச்சா எண்ணெய் உற்பத்தியை கணிசமாக அதிகரித்ததும், சீனா போன்ற பெரிய நாடுகளில் பெட்ரோல் தேவை திடீரென கணிசமாக குறைந்ததும் எண்ணெய் விலை குறைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தன.

அதனால் கடவுள் ஏதோ ஒரு விதத்தில் பிரச்சினை கொடுத்தாலும் மற்றொரு விதத்தில் படி அளந்து  விடுகிறார்.

அடுத்து, சிறிது நாட்கள் முன் நேர்மையில்லாமல் செயலபடும் CAIRN பங்கை 350 ரூபாயை அடைந்த பிறகு விற்று விடுமாறு கூறி இருந்தோம். மீண்டும் பங்கு அந்த இலக்கை நோக்கி வருகிறது. எமது கட்டண போர்ட்போலியோவில் CAIRN பரிந்துரையை பெற்றவர்கள், இலக்கை அடைந்து விற்ற பிறகு ஆயில் துறையில் மற்றொரு பங்கை இலவச பரிந்துரையாக எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.

அடுத்த காலாண்டில் இது வரை சொதப்பி வந்த இன்ஜினியரிங், பவர், நிலக்கரி போன்ற துறை சார்ந்த பங்குகள் இது போன்று எழுச்சி பெற வாய்ப்பு உள்ளது. பயன்படுத்திக் கொள்வோம்!

தற்போதைக்கு சந்தையை பெரிய அளவில் சரிய வைக்கும் காரணிகள் எதுவும் இல்லை என்பது தெரிகிறது. அதனால் சரிவிற்காக காத்திராமல் நல்ல பங்குகள் மலிவான விலைக்கு கிடைக்கும் போது வாங்கிப் போடலாம்.

எமது குறைந்த கட்டண போர்ட்போலியோ சேவை மீண்டும் தொடந்கியுள்ளது. தேவைப்படும் நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக