முதலில் தமிழில் சொல்வதற்கு வசதியாக 'Face Value' என்பதனை 'முக மதிப்பு' என்று எடுத்துக் கொள்வோம்.
பொதுவாக டிவிடென்ட் வழங்கும் போது இந்த முக மதிப்பு என்பது முக்கியத்துவம் பெறும். அதாவது டிவிடென்ட் தொகையை குறிப்பிடும் போது முக மதிப்பில் இவ்வளவு சதவீதம் என்று தான் குறிப்பிடுவார்கள் தவிர பங்கின் சந்தை மதிப்பில் குறிப்பிடுவதில்லை.
அதற்கு முக்கிய காரணம், முக மதிப்பு என்பது ஒரு நிலையான மதிப்பு. சந்தையில் பங்குகளின் மதிப்பு கூடினாலோ அல்லது நிறுவனங்களின் லாபம், நஷ்டங்களில் மாற்றம் ஏற்பட்டாலும் முக மதிப்பு மட்டும் மாறாமல் நிலையானதாக இருக்கும். அதே போல் டிவிடென்ட் என்பதும் ஒரு மாறாத மதிப்பாக இருப்பதால் முக மதிப்பில் குறிப்பிடுவது எளிதாகி விடுகிறது.
இந்த முக மதிப்பைப் பற்றி விளக்கமாக பார்ப்போம்..
நிறுவனம் தனது மொத்த மதிப்பை ஒரு அடிப்படை மதிப்பை வைத்து பங்குகளாகப் பிரிக்கலாம். இந்த அடிப்படை மதிப்பை தான் முக மதிப்பு (face value) என்று குறிப்பிடுகிறார்கள்.
உதாரணமாக,
ஒரு நிறுவனத்தின் மொத்த மதிப்பு 10 கோடி ரூபாய் என்று உள்ளது என எடுத்துக் கொள்வோம். அந்த நிறுவனம் பங்குகளை 10 ரூபாய் என்பதை அடிப்படையாக வைத்து பிரித்தால், மொத்தமாக ஒரு கோடி பங்குகளை நிறுவனம் வைத்திருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். இங்கு 10 ரூபாய் என்பது முக மதிப்பாகக் கருதப்படுகிறது.
சரி..இந்த முக மதிப்பு 10 ரூபாய் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டுமா?
அதுவும் இல்லை.
அதே நிறுவனம் தனது முக மதிப்பை 1 ரூபாய் என்றும் எடுத்துக் கொள்ளலாம். அதாவது நிறுவனங்கள் தங்கள் வசதிக்கேற்ப இந்த முக மதிப்பை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
மேலே 'நிறுவனங்கள் தங்கள் வசதிக்கேற்ப' என்று நாம் குறிப்பிடுவதற்கு காரணம்... முக மதிப்பில் சட்டப் பூர்வமாக ஒரு முக்கிய 'கொக்கி' போடப்பட்டுள்ளது. அதனை நிறுவனங்கள் முடிந்த வரை தவிர்க்க முயலும்.
அதாவது நாம் ஒரு நிறுவனத்தின் பங்கை 100 ரூபாய்க்கு வாங்குகிறோம். அந்த நிறுவனத்தின் பங்கு முக மதிப்பு 1 ரூபாய் என்றும் எடுத்துக் கொள்வோம். ஒரு கட்டத்தில் அந்த பங்கு விலை 50 பைசாவுக்கு வீழ்ந்து விட்டது.
அந்த சமயத்தில் நிறுவனம் விற்கப்படுகிறது அல்லது பங்குச்சந்தையில் இருந்து விலகுவதாக அறிவிக்கிறது. அப்படி என்றால், நமது பங்கை நிறுவனத்திற்கு விற்கும் போது நமக்கு 50 பைசா தானே கிடைக்க வேண்டும்.
அப்படி இல்லை..
அந்த சமயத்தில் நமக்கு குறைந்தபட்சம் பங்கிற்கு 1 ரூபாய் கிடைக்க வேண்டும்.
ஆமாம். முக மதிப்பிற்கு கீழ் பங்கு விலை சென்றால் அதற்கு நிறுவனமே பொறுப்பு ஏற்க வேண்டும். அந்த நஷ்டத்தை ஈடுகட்டி பங்குதாரர்களுக்கு பணம் அளிக்க வேண்டும்
அதாவது, நாம் 100 ரூபாய் கொடுத்து ஒரு பங்கை வாங்கும் போது அதன் முக மதிப்பான 1 ரூபாய் "Reserved Cash" என்ற பகுதிக்கு சென்று விடும். அந்த பகுதியினை நிறுவனத்தால் ஒன்றும் செய்து விட முடியாது. அப்படியே தான் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆக, ஒரு வித குறைந்தபட்ச பாதுகாப்பை முக மதிப்பு நமக்கு அளிக்கிறது.
அதனால் தான் இந்த மாதிரி சிக்கல்களை குறைப்பதற்காக நிறுவனங்கள் தங்களது முக மதிப்பை மிக குறைந்த மதிப்பாக வைத்துக் கொள்கின்றன. அதனால் பங்கு தாரர்களின் பணத்தை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் கடினக் காலங்களில் இழப்பீடும் குறைவாக கொடுத்தால் போதும்.
பங்கு முதலீட்டில் என்றுமே உங்கள் பணம் பூஜ்யமாக மாறி விடாது. அதற்கு ஒரு அடிப்படை மதிப்பு உண்டு என்பதை தான் முக மதிப்பு உணர்த்துகிறது.
தொடர்ச்சியான கட்டுரையாக, நிறுவனத்தை மதிப்பிட உதவும் டிவிடென்ட்டை எப்படி கணக்கிடுவது? எழுதப்பட்டுள்ளது.
English Summary:
Face values guarantees investor to get minimum value from the promoters on their stock investments. The promoters assures minimum value of stocks.
Informative and simple to understand. Can you please share about Book Value. How the book value difference from Face Value..?
பதிலளிநீக்குDear Venkatesh,
பதிலளிநீக்குThanks for your comments!
Please read this post for knowing about book value.
http://www.revmuthal.com/2014/05/bookval.html
Book value will be changing over the time and does not gurantee to investor. In this perspective, face value differs. Face value is not telling about the asset value which is described in balance sheet.