வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

சரிவுகளில் பங்கு வாங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திய வாரம்

எமது கடந்த வார பதிவில் சென்செக்ஸ் 500 முதல் 700 புள்ளிகள் வரை குறைய வாய்ப்புள்ளது என்று கூறி இருந்தோம். அதே போல் இந்த வாரத்தில் 700 புள்ளிகள் வரை குறைந்து பங்குகளை வாங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தியது.

இனி இந்த வார பங்குச்சந்தை நிகழ்வுகளை பார்ப்போம்..

நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.

"Core Sectors" என்று சொல்லப்படும் உற்பத்தி துறை தான் பெரும்பாலும் நாட்டின் GDP மதிப்பை தீர்மானிக்கிறது. மற்ற சேவைத் துறைகள் இந்த உற்பத்தி துறையை சார்ந்து தான் இயங்குகின்றன.

இந்த உற்பத்தி துறையின் வளர்ச்சி கடந்த ஒன்பது மாதத்தில் இல்லாத அளவு நன்றாக வந்து உள்ளது என்பது முக்கியமான விடயம். இதில் தான் சிமெண்ட், உலோகம், மின்சாரம் என்று முக்கிய துறைகள் உள்ளன.



அடுத்து ஒவ்வொரு நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

வங்கிகளின் நிதி அறிக்கைகள் இந்த முறை எதிர்பார்ப்புகளைத் தவற விட்டுள்ளன. ஆனாலும் மோசம் என்று சொல்ல முடியாது. ICICI, விஜயா போன்ற வங்கிகள் எதிர்பார்ப்புக்கு அதிகமாக நிதி முடிவுகளை கொடுத்துள்ளது.

மாருதியின் நிதி அறிக்கை நன்றாக இருப்பது ஆட்டோ துறைக்கு சாதகமான விஷயம்.

இந்த முறை மென்பொருளில் HCL நிதி அறிக்கை ஓரளவு எதிர்பார்ப்பிற்கு கீழாக இருந்தது. இருந்தாலும் பாதிப்பு இல்லை.

அதே போல் நுகர்வோர் துறையும் நல்ல நிதி அறிக்கைகளையே கொடுத்துள்ளது..

இனி வரும் வாரங்களில் புறக்காரணிகளுக்கு அல்லது சென்செக்ஸ் புள்ளிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விட தேர்ந்தெடுத்த பங்குகளின் நிதி அறிக்கைகளை கூர்மையாக கவனித்து வருவது அதிக பலனைத் தரலாம்.

அடுத்த வருடம் இந்திய GDP வளர்ச்சி 5.5% என்பதை எட்டும் என்று அரசு உறுதியாக நம்புகிறதாக செய்திகள் வந்துள்ளது. அப்படி நடந்து விட்டால் சென்செக்ஸ் எளிதில் 30000 என்பதைத் தாண்டலாம்.

இதனால் தற்போதைய நிலையில் சென்செக்ஸ் கீழ் வரம்பு என்பது கொஞ்சம் வலுவாகவே உள்ளது. ஆதலால் மேலும் பெரிதளவில் சரிவை எதிர்பார்க்க முடியாது.

அவ்வப்போது 200, 300 என்று புள்ளிகள் குறையும் போது சீராக பங்குகளை வாங்குவதே பாதுகாப்பான முதலீடாக இருக்க முடியும். 'இன்னும் குறையும்' என்று காத்திருந்தால் வாய்ப்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

அடுத்த வாரத்தில் சென்செக்ஸ் சிறிது உயர்வில் கானப்படலாம் என்று நினைக்கிறோம்.

நேற்று சந்தை சரிவுகளுக்கு காரணமாக கூறப்பட்ட உலக போர் பதற்றங்கள் தற்காலிக காரணிகளே.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக