செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மூத்தக் குடிமக்களுக்கு ஒரு பயனுள்ள ஓய்வூதிய திட்டம்

கடந்த ஆகஸ்ட் 15 அன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் மூத்தக் குடிமக்களுக்காக ஒரு ஓய்வூதிய திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். அதனுடைய சாதகங்கள், பாதகங்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

இந்த திட்டத்தின் பெயர். "Varishtha Pension Bima Yojana". இந்த பெயரில் தான் கட்டாய இந்தி திணிப்பு உள்ளது. குறிப்பெடுத்து வைக்காமல் நியாபகம் வைப்பது கஷ்டம் தான்

Varishtha Pension Bima Yojana


இந்த திட்டத்தில் இணைபவர்கள் ஆகஸ்ட் 2014 முதல் ஆகஸ்ட் 2015 என்ற ஒரு வருடத்திற்குள் இணைந்து கொள்ளலாம். இதில் இணைவதற்கு 60 வயது பூர்த்தி செய்து இருக்க வேண்டும்.

இந்த திட்டமும் FD போல் தான். முதலில் பணத்தை 15 வருடத்திற்கு FD போல் செலுத்த வேண்டும். அதன் பிறகு வருடத்திற்கு 9.3% வட்டி அளிக்கப்ப்பட்டு மாதந்தோறும் ஓய்வூதியம் போல் தரப்படுகிறது..

குறைந்தபட்சம் 500 முதல் அதிகமாக 5000 ரூபாய் வரையில் மாத வருமானம் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதாவது 66,665 ரூபாய் முதலீடு செய்யும் போது 500 ருபாயும், 6.66 லட்சத்திற்கு 5000 ரூபாயும் மாத ஓய்வூதியம் கிடைக்கும்.

இதன் வட்டி விகிதம் தற்போதுள்ள மூத்தக் குடிமக்களின் வங்கி பிக்ஸ்ட் டெபாசிட்டிலே கிடைக்கிறது என்பதும் உண்மையே, ஆனால் அதிலிருந்து எப்படி பயனாக இருக்கும் என்றால், அடுத்த 15 வருடத்திற்கு நிலையான 9.3% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

அதாவது FDயில் வட்டி விகிதம் என்பது மாறுபடும் விகிதம். உதாரணத்திற்கு 2000மாவது ஆண்டில் 9.5% வட்டி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2003வது ஆண்டில் வெறும் 5.5% மட்டுமே அளிக்கப்பட்டது. அதாவது பணவீக்கம், வளர்ச்சி போன்ற பிற காரணிகளால் இந்த வட்டி விகிதம் வருடத்திற்கு மாறுபட்டுக் கொண்டே இருக்கும்.

ஆனால் நாம் மேல் சொன்ன அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இந்த மாறுபாடு இருக்காது. 9.3% வட்டி வகித்தை அடுத்த 15 வருடங்களுக்கு நிலையாக பெற முடியும்.

இந்த திட்டம் எல்ஐசி மூலம் செயல்படுத்தப்படுகிறது. அரசின் உத்தரவாதம் இருப்பதால் பாதுகாப்பானது.

இடைப்பட்ட காலங்களில் பணம் தேவை ஏற்பட்டால், குறைந்த வட்டியில் உங்கள் தொகையில் 75% வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் ஒரு பாதகம் என்னவென்றால், கிடைக்கப்படும் ஓய்வூதிய வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும். அதாவது உங்கள் வருட வருமானம் மூன்று லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் வரி கட்ட வேண்டும். பெரும்பாலானவர்களுக்கு இதற்கு கீழே இருப்பதால் பிரச்சினையில்லை.

இத்தகைய திட்டங்கள் எல்லாம் நாம் முன்னர் எழுதியிருந்த "கிராமப்புற இளைஞர்களுக்கு பயன்படும் அஞ்சலக காப்பீடு" திட்டம் போன்று அதிக அளவில் விளம்பரம் செய்யப்படுவதில்லை. ஏனென்றால், இந்த திட்டங்களுக்கு முகவர்களுக்கு கிடைக்கும் கமிசன் தொகை மிகக் குறைவு. அதனால் நாமே தான் கண்டுபிடித்து அணுக வேண்டியுள்ளது.

பெற்றோருக்கு மாதந்தோறும் செலவிற்கு பணம் அனுப்பும் இளைஞர்களும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால், ஒரு முறை பணத்தை செலுத்தி விட்டால் அதன் பிறகு அவர்கள் சுதந்திரமாக அவர்கள் வருமானம் போன்று எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.,

மேலதிக விவரங்களை, எல்ஐசி தளத்தில் பார்க்கலாம்.

English Summary:
"Varishtha Pension Bima Yojana" gives better benefits for senior citizen's pension. It gives 9.3% fixed interest rate for next 15 years. RBI's bank interest rate changes will not affect the scheme.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

  1. Which Means the person who enroll in these scheme in 60 can redeem after the age of 75th only. Am I correct...

    As per me and I believe the fact, average life age of anybody for recent / coming time would be would be less than 75.

    I would have appreciated the scheme if the starting age is around 50 years..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yes. you are correct Prabhu! In the previous term, the minimum age was 55 only. Now they revised to 60. They could have continue with the same norms.

      நீக்கு
  2. Can we go for the below 2 pension plans from LIC

    Jeevan Akshay-VI
    LIC's New Jeevan Nidhi

    Apart from LIC, which is the best pension solution for people who are around 40 years now and say after 10 years need some monthly income.

    Thanks

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Recently, I am not tracking the pension plans much. Once doing analyze, we will write about pension plans in a post.

      நீக்கு