புதன், 27 ஆகஸ்ட், 2014

நிலங்களை விற்கும் போது இப்படி வரியை சேமிக்கலாம்

இதற்கு முன் பங்கு வருமானத்திற்கு வரி உண்டா? என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தோம்.

அதில் Long Term Capital Gain (LTCG) என்பதன் மூலம் பங்கு முதலீட்டில் முழுமையாக வரியை சேமிக்கலாம் என்று கூறி இருந்தோம். அதே கட்டுரையில் பங்குச்சந்தை அல்லாத ரியல் எஸ்டேட், தங்க முதலீடு போன்றவற்றிக்கு வரி உள்ளதையும் சுட்டிக் காட்டி இருந்தோம்.


சில கணக்கீடுகள் மூலம் அரசு நமக்கு வரியை சேமிக்கும் வழியை அளிக்கிறது. அதனைப் பற்றி விவரமாக பார்ப்போம்.

Long Term Capital Gain Tax


ரியல் எஸ்டேட் முதலீடுகளை மூன்று வருடத்திற்குள் விற்றால் அது Short Term Capital Gain (STCG) என்ற பிரிவிற்குள் வந்து விடும். அதாவது உங்கள் லாபத்திற்கு 30% வரை வரி கட்ட வேண்டி இருக்கும்.

ஆனால் மூன்று வருடத்திற்கு பிறகு விற்றால் LTCG முறை மூலம் அதிக பலனை பெறலாம். ஆனால் LTCG முறையில் கூட 20% வரி கட்ட வேண்டி இருக்கும்.


இந்த 20% வரியையும் குறைப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? என்று நமக்கு கேள்வி எழலாம். அதற்கும் ஒரு வழி உண்டு. அதனை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்த வழிமுறையை Indexation Benefit என்று அழைக்கிறார்கள். சுருங்கக் கூறினால், நீங்கள் சொத்து வாங்கியதில் இருந்து உள்ள காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வை கழித்த பிறகு வரி கட்டுவதற்கு வாய்ப்பு தருகிறார்கள். இதில் உண்மையாகவே அதிக பலன் பெறலாம்.

Long Term Capital Gain Tax


எளிதாக புரிவதற்கு ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

கணேசன் என்பவர் 2010ல் 35 லட்சத்துக்கு ஒரு வீட்டினை வாங்குகிறார். அதனை 2014ல் 50 லட்சத்துக்கு விற்கிறார் என்று எடுத்துக் கொள்வோம். அப்படி என்றால், அவர் எவ்வளவு வரி கட்ட வேண்டும்?

மூன்று வருடம் முடிந்து விட்டதால் அவர் LTCG வரி பலனைப் பெற தகுதி உடையவராகிறார். அதனால் அவர் லாபத்துக்கு 20% வரி கட்ட வேண்டும்.

அப்படி என்றால் அவரது வரி இவ்வாறு கணக்கிடப்படுகிறது.

வீட்டை விற்பதால் அவர் அடைந்த லாபம் = 15 லட்சம்.
அதற்கு 20% வரி என்றால், 15L * 20% = 3 லட்சம் ரூபாய் வரி கட்ட வேண்டும்.

இதே கணேசன் Indexation பலனை எடுத்துக் கொள்கிறார் என்று எடுத்துக் கொள்வோம்.

அப்பொழுது அவரது வரி இவ்வாறு கணக்கிடப்படுகிறது.

இந்த கணக்கீட்டில் பணவீக்க குறியீடு முக்கிய பங்கை வகிக்கிறது. இதனை ஆங்கிலத்தில் Cost Of Inflation Index (CII) என்று அழைக்கிறார்கள். வருமான வரி அலுவலகத்தின் இணைய தளத்தில் ஒவ்வொரு வருடமும் இந்த மதிப்பு வெளியிடப்படும்.

2010, 2014ம் ஆண்டுகளில் CII மதிப்பு கீழே உள்ளவாறு உள்ளது.

2010ல் CII மதிப்பு = 785
2014ல் CII மதிப்பு = 1024

இந்த மதிப்புகளை வைத்து கீழே உள்ளவாறு வரி கணக்கிடப்படுகிறது.

உண்மையான லாபம் = விற்ற தொகை - (வாங்கிய தொகை * CII-2014 / CII-2010)

அதாவது,
உண்மையான லாபம் = 50L - (35L * (1024/785)) = 50L - 45.65L = 4.35L

தற்பொழுது Indexation பலனுடன் சேர்த்து 10% வரி மட்டுமே கணக்கிடப்படுகிறது.

அப்படி என்றால், வரி =  4.35L * 10% = 43,500 ரூபாய்.

இதே சமயத்தில் Indexation பலனை அனுபவிக்காமல் இருந்தால் நீங்கள் 3 லட்ச ரூபாய் வரி கட்ட வேண்டும். ஆனால் தற்போது 43,500 ரூபாய் மட்டுமே வரி கட்ட வேண்டி உள்ளது. அதாவது, 2.57 லட்சத்தை சேமிக்கலாம்.

35 லட்ச ரூபாய் முதலீட்டில் 2.57 லட்சம் என்பது ஒரு மிகப்பெரிய தொகை என்றே நினைக்கிறேன்.

இந்த சமயத்தில், எமக்கு பிடித்த "RICH DAD, POOR DAD" என்ற புத்தகத்தில் Robert Kiyosaki என்ற எழுத்தாளரின் மேற்கோள் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்..

"ஏழை தந்தை தங்கள் வருமானத்தின் பெரும் பகுதியை வரியாகவே கட்டி விடுகின்றார். அதே நேரத்தில் பணக்கார தந்தை ஸ்மார்ட்டாக செயல்பட்டு வரியையும் செலவுகளையும் குறைத்து தமக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்கின்றார்." என்பதே அந்த மேற்கோள்.

அது இந்த LTCG வரி விசயத்திலும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

கீழ் அந்த புத்தகத்திற்கான இணைப்பு உள்ளது. படித்துப் பாருங்கள். பயனாக இருக்கும்.


<!–- google_ad_section_start -–> English Summary:
Indexation helps to reduce on Long Term Capital Gain Tax. Inflation can be deducted from the profit of property sale through indexation.
<!–- google_ad_section_end -–>
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக