வியாழன், 28 ஆகஸ்ட், 2014

சிறிய இடைவெளிக்கு பிறகு செப்டெம்பர் மாதத்தில் போர்ட்போலியோ

SNOWMAN IPOவை வாங்குமாறு கடந்த பதிவில் கூறி இருந்தோம். சில சமயங்களில் நல்ல டிமேண்ட் இருப்பதும் கெடுதலாக அமைந்து விடுகிறது. ஆமாம். நாம் முன்னர் சொல்லியவாறு Oversubscription ஆகி உள்ளது.


அதாவது 60 மடங்கிற்கும் அதிகமான  விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதே நேரத்தில் சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 40 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளது. இதனால் 40 பங்குகளுக்கு விண்ணப்பித்து இருந்தால் ஒரு பங்கு தான் கிடைக்கும் நிலைமை.

அப்படியென்றால் , 300 பங்குகள் விண்ணப்பித்து இருந்தால்  7.5 பங்குகள் மட்டுமே கிடைக்கலாம். ஆனாலும் பட்டியலிடப்பட்ட சில நாட்களிலே 15~20 சதவீதம் லாபம் கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. முடிந்த வரை பயன்படுத்திக் கொள்வோம்! இன்னும் 12 நாட்களில் முடிவுகள் தெரியும்.கடந்த வாரம் பங்கு நிலவரத்தில் சொல்லியவாறு இன்னும் பங்குச்சந்தையை பாதிக்கும் காரணிகள் தென்படாததால் அவ்வளவு எளிதில் புள்ளிகள் குறையாமல் உள்ளது. இந்த நிலவரத்தில் நாம் விருப்பப்படும் பங்குகள் 2% குறைந்தாலே வாங்கிப் போடுவது சரியாக இருக்கும்.

இந்த வாரத்தில் நாம் போர்ட்போலியோக்களில் பரிந்துரைத்த பங்குகள் சிறிது வீழ்ச்சி அடைந்து மீண்டும் எழுந்தன. அதனால் தனிப்பட்ட முறையில் எமக்கும் வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் நமது போர்ட்போலியோ சேவையில் இணைந்த நண்பர்கள் பயன்படுத்தி இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

அடுத்து, ஒரு நல்ல செய்தியாக நாம் பரிந்துரைத்த அணைத்து போர்ட்போலியோக்களும் நல்ல லாபத்தைக் கொடுக்க ஆரம்பித்துள்ளன. ஏப்ரல் போர்ட்போலியோ 65% லாபமும், ஜூன் போர்ட்போலியோ 20% லாபமும்,  ஜூலை 1 போர்ட்போலியோ 5% லாபமும், ஜூலை 15 போர்ட்போலியோ 8% லாபமும் கொடுத்துள்ளன.

நாம் பரிந்துரைத்த ஒரு இலவச மாதிரி போர்ட்போலியோ 110% லாபத்துடன் சென்று கொண்டு இருக்கிறது.

நேற்று நமது தளத்தை உற்சாகப்படுத்தி மெயில் அனுப்பி இருந்த ஒரு நண்பரிடம் பேசும் போது தமிழில்/ஆங்கிலத்தில்  எமக்கு மெயில் அனுப்பும் போது இருக்கும் கஷ்டத்தை பற்றி கூறி இருந்தார். அதனால் ஆங்கிலத்தில் எழுத கஷ்டப்படும் நண்பர்கள் தங்க்லீஷிலும் எமக்கு மெயில் அனுப்பலாம். அதாவது தமிழில் தோன்றியவற்றை ஆங்கிலத்தில் டைப் செய்து அனுப்பலாம். பதில் தமிழிலே அனுப்புகிறோம்.

இந்த மாதத்தில் வேலைப்பளு காரணமாக தனிப்பட்ட முறையில் மட்டுமே போர்ட்போலியோ சேவையைக் கொடுத்து வந்தோம். அடுத்து, பொதுவான போர்ட்போலியோவை  செப்டெம்பர் 15 அன்று வெளியிடுகிறோம். சில சமயங்களில் சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்தால் செப்டெம்பர் 15க்கு முன்னாலும் பொர்ட்பொலியோவை பகிர்வதற்கு வாய்ப்புள்ளது.

அதனால் செப்டெம்பர் 10க்கு முன் எம்மிடம் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம். இதுவும் முன்னர் போல் 8 பங்குகள் கொண்ட முழு போர்ட்போலியோ 1200 ரூபாய்க்கும் 4 பங்குகள் கொண்ட மினி போர்ட்போலியோ 650 ரூபாய்க்கும் கொடுக்கப்படும்.

ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் முழு போர்ட்போலியோவிற்கும் இருபதாயிரம் ரூபாய் அளவு முதலீடு செய்பவர்கள் மின் போர்ட்போலியோவிற்கும் செல்லலாம்.

போர்ட்போலியோ பற்றிய முழு விவரங்களை இந்த இணைப்பில் தெரிவித்து உள்ளோம். அதில் போர்ட்போலியோ வடிவமைப்பும் உள்ளது. பார்த்துக் கொள்ளுங்கள்!

சந்தேகங்களுக்கு muthaleedu@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் கேட்கலாம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக