திங்கள், 25 ஆகஸ்ட், 2014

நிலக்கரி ஊழல் தீர்ப்பில் நாம் என்ன செய்வது?

நேற்று காலையில் 150 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ், உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பால் இறுதியில் அனைத்தையும் இழந்து விட்டது. பங்குச்சந்தையைப் பொறுத்த வரை அவ்வளவு ஒரு பரபரப்பு தீர்ப்பாக இருந்தது.


அதாவது, 1993க்கு அப்புறம் தனியார்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட நிலக்கரி சுரங்கங்கள் அனைத்துமே முறைகேடானவை. அவை அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்று நீதிமன்றம் கூறியுள்ளது.இந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை தன்மை சுத்தமாக கடைபிடிக்கப்பட வில்லை என்பதே குற்றச்சாட்டாகும். இதனால் 1.83 லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது தணிக்கை அதிகாரியின் குறிப்பு.

இதன்படிப் பார்த்தால் காங்கிரஸ் அரசு மட்டுமல்லாமல் வாஜ்பேயி தலைமையிலான பிஜேபி அரசும் இந்த 21 வருட காலக்கட்டத்தில் அடங்கும். ஆதலாம் பிஜேபியும் இந்த தீர்ப்பு குறித்து மற்றவர்களை குற்றம் சாட்டாமல் நழுவி செல்லவே வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பான மேலும் விவரமான தீர்ப்பு செப்டம்பர் ஒன்று அன்று வெளியாகும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால் நிலக்கரி, உலோகங்கள், மின்சாரம் தொடர்பான பங்குகள் படு வீழ்ச்சியை சந்தித்தன. அதிலும் ஜிண்டால் பங்கு 13% சரிவை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டெம்பர் ஒன்று அன்று முழுமையாக தீர்ப்பு வெளிவந்தால் கூட முதலீட்டாளராக ஒரு முடிவை எடுக்க வசதியாக இருக்கும். தற்போது தவணை முறையில் தீர்ப்பு வருவது குழப்பத்தை அதிகரிக்கிறது. என்ன நடக்கும் என்றே தெரியாததால் தற்பொழுது இந்த பங்குகளில் வேடிக்கை பார்ப்பது தவிர வேறு வழி இல்லை.

Jindal steel, Hindalco, Tata steel, Sesa sterlite போன்ற பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பாதியை விற்று விட்டு மீதி பாதியை வைத்து இருப்பது நஷ்டத்தை குறைக்க ஓரளவு உதவும்.

இதில் நல்லது என்னவென்றால், கடந்த 10 மாதங்களாக நீதிமன்ற இடைக்காலத் தடையால் முடங்கி கிடந்த நிலக்கரி வெட்டி எடுக்கப்படுதலும், அதனால் பாதிக்கப்பட்ட மின்சார உற்பத்தியும் மீண்டும் தடையின்றி தொடங்குவது என்பது ஒரு சாதகமான விடயம்.

அரசும் ஒரு புதிய ஏல முறையை வேகமாக அறிமுகப்படுத்துவதில் ஆர்வமாக இருப்பதாகவே தெரிகிறது. இது GDP வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும். ஆனால் 20 வருட நடைமுறையை மாற்றுவதற்கு ஓரளவு காலமும் தேவைப்படும் என்பதும் உண்மையே.

இதனால் புதிய முடிவுகள் வந்த பிறகு, எந்தெந்த நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன என்பதையும், எந்த நிறுவனங்கள் புதிய ஏல முறையில் வாய்ப்புகளை பெறுகின்றன என்பதையும் கூர்ந்து கவனித்து நிலக்கரி, பவர், சுரங்க துறைகளில் முதலீடு செய்வது நல்லது. அனுமானத்தில் முடிவெடுப்பது இதில் சரியாக இருக்காது.

ஏதேனும் சூழ்நிலைகளில் கட்டாயம் இந்த துறைகளில் முதலீடு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், நிலக்கரியை காண்ட்ராக்ட் முறையில் வெட்டி எடுப்பதற்காக உதவி செய்யும் இன்ஜினியரிங் நிறுவனங்களை கருத்தில் கொள்ளலாம்.

So WAIT and SEE is the best solution as of now..

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக