வியாழன், 7 ஆகஸ்ட், 2014

பங்குச்சந்தையில் ராஜன் எச்சரிக்கையை எப்படி எடுத்துக் கொள்வது?

கடந்த வெள்ளியில் சொல்லியது போல், இந்த வாரம் சந்தை தாழ்வாகவே முடிந்தது. அதனால் வாங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்புகிறோம். அடுத்து, இந்த வாரத்தின் நிகழ்வுகளைப் பார்ப்போம்.


நேற்றைய தினம் ரிசர்வ் வங்கி கவர்னர் மீண்டும் ஒரு பொருளாதாரத் தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். கடந்த முறை ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தை முன்னரே சொல்லியவராதலால் நாமும் எச்சரிக்கையாகவே எடுக்க வேண்டும்.

கருநாக்கு பலிக்காமல் இருந்தால் சரி..

ஆனாலும் அவரே தான் ரிசர்வ் வங்கி SLR விகிதத்தை 22.5% என்பதிலிருந்து 22% என்று குறைத்து பணக் கொள்கைகளை எளிதாக்கி உள்ளார்.

அதனால் அப்படியொரு பொருளாதரத் தேக்கம் எச்சரிக்கை நிலையில் தான் உள்ளது தவிர இன்னும் ஆரம்ப அறிகுறி நிலைக்கு கூட செல்லவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆதலால் தற்போது பதற்றப்பட வேண்டாம்.

இருந்தாலும், முதலீட்டுக் காலத்தை இரண்டு வருடமாக இருந்தால் மூன்று வருடமாக அதிகரித்துக் கொள்வதும், கையில் பங்கு முதலீட்டு பணத்தில் ஒரு 15% தொகையாவது கையில் வைத்துக் கொள்வதும் நம்மை எதற்கும்  தயார் படுத்திக் கொள்ளும் வகையில் இருக்கும்.

அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் ரிஸ்க்கை தாங்கி பிடிக்கும் 'cyclical stocks' என்று சொல்லப்படும் மருந்து, நுகர்வோரு பங்குகளின் சதவீதத்தை 35% அளவு போர்ட்போலியோவில் அதிகரித்துக் கொள்ளுங்கள். அதே வேளையில் ரிஸ்கான பென்னி பங்குகளை 15% என்ற குறுகிய வரம்பிற்குள் கொண்டு வரலாம். இதனால் நஷ்டம் ஏற்படுவது சமநிலைப்படுத்தபப்ட்டு விடும்.

அத்தகைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் இருந்து முழுவதுமாக விலகுவதை விட மேல் உள்ளவாறு தயார் செய்து கொள்வது தான் சிறந்ததாக இருக்கும்.

தகவலுக்காக சொல்கிறேன், 2008ல் ஏற்பட்ட பொருளாதார தேக்கம் தான் எமது முதலீட்டை இரண்டு மடங்காக உயர்த்தியது. ஆமாம், மலிவு விலையில் கிடைத்த பங்குளை வாங்கி போட்டு ஒரு இரண்டு வருடம் காத்து இருந்தது தான் எமக்கு நல்லதாக அமைந்தது.

மற்ற ஒரு நல்ல தகவல், கடந்த மாதம் வந்த வாகன விற்பனை தரவுகள் ஆட்டோ துறைக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதில் மாருதியும், TVSம் மிக நல்ல நிலையில் இருந்தது. இது மக்களிடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. ஆட்டோ துறை மீண்டும் வெளிச்சத்திற்கு வருகிறது.

எமது இலவச போர்ட்போலியோவில் பரிந்துரை செய்யப்பட Amara Raja Batteries நிறுவனத்தின் நிதி அறிக்கை மிக நன்றாக இருந்ததால் கடந்த சில நாட்களில் மட்டும் 10% உயர்வை சந்தித்து உள்ளது. நமது மாதிரி போர்ட்போலியோ தற்போது 100% லாபத்தை தாண்டி இருக்கும் என்று நம்புகிறேன்.

அடுத்த வாரம் முதல் எமது கட்டண போர்ட்போலியோ சேவை மீண்டும் துவங்குகிறது. தேவைப்படுவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்த வாரத்தில் பங்குச்சந்தை ப்ளாட்டாகவே காணப்படும் என்று கருதுகிறோம். அதற்கு தக்கவாறு திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

இனி ராஜ்யசபாவில் பாதுகாப்பு துறை, காப்பீடு, ரயில்வே போன்றவற்றின் அந்நிய முதலீடு அனுமதிப்படுவது வெற்றிகரமாக நிறைவேறினால் சந்தைக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கும்.

தற்போது பார்லிமெண்டில் இந்தியில் தேர்வு எழுதவதா? ஆங்கிலத்தில் எழுதவதா என்ற முக்கியமான விவாதம் சென்று கொண்டிருப்பதால் பங்குச்சந்தை கொஞ்சம் காத்திருந்தே ஆக வேண்டிய சூழ்நிலை. ஆங்கிலத்தில் வெறும் 8 கேள்விக்கு பதிலளிக்க முடியாதவர்கள் எப்படி வெளிநாட்டில் அம்பாசடர்களாக இருப்பார்கள் என்று தெரியவில்லை.

English Summary:
Raajan warnings need to be taken care and expecting market seems to be flat in next week.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக