ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

Snowman IPOவில் எத்தனை பங்குகள் கிடைக்கும்?

கடந்த வாரத்தில் Snowman IPOவை வாங்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம். அதன்படி, பல நண்பர்கள் முதலீடு செய்ததை மெயில்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. தங்கள் நம்பிக்கைக்கு நன்றி!


Snowman IPO தற்போது 60 மடங்கிற்கும் அதிகமாக முதலீட்டினை பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சி கலந்த கவலையான விசயமாகவும் மாறியுள்ளது.
அதாவது 60 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளதால் 47 ரூபாய்க்கு வாங்கிய நமது பங்கு கண்டிப்பாக ஒரு சில நாட்களிலே 60 ரூபாயைக் கடந்து விடும் என்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.. அதாவது இரண்டு வாரங்களில் 30% அளவு லாபம் கிடைக்கும். இது ஒரு மகிழ்ச்சியான விஷயம்.

இதே அதிக அளவு விண்ணப்பங்கள்' தான் கவலை அளிக்கும் பகுதியாகவும் உள்ளது. ஆமாம் நமக்கு கிடைக்கும் பங்குகள் என்பது மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் லாபம் குறைந்த அளவிலே பகிரப்படும்.

தற்போதைய IPO புதிய விதிகளின் படி, விண்ணப்பித்த அனைவருக்கும் பங்குகள் கிடைக்க வேண்டும் என்று செபி வலியுறுத்தியுள்ளது.  அதனால் விண்ணப்பித்த அனைவருக்கும் பங்குகள் கிடைக்கும்.

Snowmanல் ஒரு லாட் என்பது 300 பங்குகளைக் கொண்டதாக உள்ளது. அதனால் முதல் 300 பங்குகள் கொண்ட ஸ்லாட்டிற்கு கண்டிப்பாக பங்குகள் கிடைப்பது உறுதி. அதன் பிறகு விகிதத்தில் மட்டுமே பங்குகள் பகிரப்படும். அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

இதனால் 300 வாங்கியவருக்கும் 600 வாங்கியவருக்கும் ஒரே அளவு பங்குகள் கிடக்கவே வாய்ப்பு உள்ளது.

இந்த விதிமுறைகளில் பார்த்தால், குறைந்தது 200 பங்குகளாவது நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி என்றால், 9400 ரூபாய் மதிப்புள்ள முதலீடு  12000 ரூபாயாக சிறிது நாட்களிலே மாறலாம்.

மேல் கூறி உள்ளது எமது அனுமானங்களே, அதனால் மாற்றங்களும் இருக்கலாம்.

கடந்த முறை IPO முறையில் 125 ரூபாயில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட Wonderla பங்கு தற்போது 320க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது என்பதையும் கவனிக்க.

Snowman பங்கு Wonderlaவையும் விட அதிக அளவு விண்ணப்பங்கள் பெற்றுள்ளதால் நாம் சொல்லியதை விட அதிகமாகவே செல்ல வாய்ப்புள்ளது என்றும் கருதலாம்.

ஆனால் ஒரு புள்ளியில் மட்டும் Sonwman உதைக்கிறது. அதாவது தற்போதைய IPO உச்ச வரம்பு விலையின் போதே அதன் P/E மதிப்பு 30க்கு மேல் உள்ளது. லிஸ்ட் செய்த பிறகு பங்குகள் கணிசமாக உயர்ந்தால் P/E மதிப்பு கடுமையாக அதிகரித்து விடும். அதனால் Fundamental Valuation என்பது சரியாக இல்லாமால் இருக்கும்.

ஆனால் வரும் வருடங்களில் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் குறைந்தது நிதி அறிக்கை வெளிவரும் வரை பங்கு அதிக விலையில் வர்த்தகமாக வாய்ப்புள்ளது. அதன் பிறகு கொஞ்ச காலத்திற்கு குறையலாம் அல்லது ப்ளாட்டாகவே இருக்கலாம். நாமும், அந்த நிலவரத்தின் படி வைத்துக் கொள்ளலாமா? அல்லது விற்கலாமா? என்பதை மீண்டும் பரிந்துரைக்கிறோம்.

இதே போன்ற எமது பரிந்துரைகளைப் பெறுவதற்கு செப்டெம்பர் போர்ட்போலியோவிலும் இணையலாம். விவரங்களை இங்கு பெறலாம்.

English Summary:
Snowman Initial Public Offer is recommended for investment for better returns. Over subscription may make it difficult to get the stocks. The stock is recommended in terms of growth opportunities.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக