ஞாயிறு, 1 மார்ச், 2015

தங்கத்தை வீட்டிற்கு பதில் வங்கியில் வைத்தால் வட்டி கிடைக்கும்

இந்த வருட பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தங்கம் தொடர்பான சில முடிவுகள் நாட்டிற்கும், மக்களுக்கும் நல்ல பலன்களை கொடுக்கலாம்.


உலக அளவில் தங்கம் அதிகமாக வாங்கப்படும் ஒரு நாடு இந்தியா. பெருமளவு தங்கம் வெளிநாடுகளில் இருந்து இங்கு இறக்குமுதி செய்யப்படுவதால் கணிசமான அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்படுகிறது.



அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கம் அப்படியே பிரோவில் தூங்கும் போது யாருக்கும் பயன்படாமல் போய் விடுகிறது. இந்த Dead Asset காரணமாக பெருமளவு பணம் அப்படியே முடங்கி விடுகிறது.  இது நாட்டின் பொருளாதரத்திற்கும்  பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.


இதனை தவிர்ப்பதற்கு ஜேட்லியின் பட்ஜெட் அழகான வழிமுறையைக் கொடுத்துள்ளது.

இனி நம்மிடம் இருக்கும் தங்கத்தை வீட்டில் இருப்பதற்கு பதில் வங்கியில் வைத்துக் கொள்ளலாம். அதற்கு பிக்ஸ்ட் டெபொசிட் போல் தகுந்த அளவு வட்டி வழங்கப்படும்.

வங்கிகள் இந்த தங்கத்தின் மதிப்பில் கடன் பத்திரங்கள் வெளியிடுவதற்கு எதுவாக இந்த தங்கம் இருக்கும். அதனால் நாட்டின் பொருளாதரத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவு அதிக பணப்புழக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது நாட்டின் பொருளாதரத்தில் பெரிய அளவு மாற்றங்களை ஏற்படுத்த உதவும்.

ஆபரண தங்கத்திற்கு இந்த முறை பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனால் தங்க நாணயங்களுக்கு கண்டிப்பாக பொருந்தும் என்று தெரிகிறது.

இதே போல் தங்க மதிப்பில் ETF முறை போன்ற பத்திரங்களையும் வெளியிட உள்ளது. அதாவது வாங்கும் தினத்தில் உள்ள மதிப்பில் வாங்கி விற்கும் தினத்தில் உள்ள மதிப்பில் விற்றுக் கொள்ளலாம்.

அரசே இந்த பத்திரங்களை வெளியிடுவதால் பாதுகாப்பான முறையாகவும் கருதப்படுகிறது.

அதே நேரத்தில் முதலீடு நோக்கில் தங்கத்தை வாங்குபவர்கள் இந்த பத்திரங்களை வாங்கலாம். இதனால் செய்கூலி, சேதாரம் போன்றவற்றிற்கு வீணாகும் 15% பணம் தவிர்க்கப்படும்.

மூன்றாவதாக அரசே அசோக சக்கரம் படமடங்கிய தங்க நாணயங்களை வெளியிட உள்ளது. நகைக்கடைகளில் வாங்குவதற்கு பதில் இந்த நாணயங்களை வாங்குவதன் மூலம் ரூபாய் நோட்டுகளாக எளிதில் மாற்ற உதவும்.

பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகள் செயலாக்கமாக ஆறு மாதங்கள் வரை ஆகலாம். ஆனாலும் பாராட்டப்பட வேண்டிய திட்டங்களே.

தொடர்பான பதிவுகள்:
தங்கத்தில் முதலீடு செய்ய சில வழிமுறைகள்


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. அருமையான திட்டம். கோயில்களில் ஏராளமான நகைகள் உள்ளது. இதை வங்கிகளில் வைப்பதன் மூலம் பாதுகாப்பும் ஆச்சு, கூடவே வருமானமும் கூட. இதைக்கொண்டு கோயில்களில் அன்னதானம் போல உயரிய காரியங்களை செய்யலாம்.

    பதிலளிநீக்கு