வெள்ளி, 27 செப்டம்பர், 2013

இது எமது பங்கு நஷ்டக் கணக்கு

பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் போது அதில் நஷ்டம் வராதவர்கள் மிகக் குறைவு. நீண்ட நாள் இருந்தவர்கள் எதாவது ஒரு பங்கையாவது நஷ்டத்தில் விற்றிருப்பார்கள்.


சரி..தலையிலே கையை வச்சது போதும். 
ஆனால் அதைக் கண்டு துவளுவதை விட காரணங்களை கண்டுபிடித்து
பாடமாக ஏற்றுக் கொண்டு மேற்கொண்டு முதலீடு செய்தால் நல்ல வருமானம் பெற முடியும்.


இது எமது நஷ்டக் கணக்கு. மற்றவர்களுக்கு ஒரு நல்ல புரிதலாக இருக்கும் என்பதால் நஷ்டத்திற்கான காரணங்களுடன் இங்கு பகிர்கிறேன்.

EROS International:

இந்த நிறுவனம் பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். தமிழ், இந்தி திரைப்படங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனம்.

இந்த வருட ஆரம்பத்தில் Morgan Stanley பரிந்துரை செய்தது. மதிப்பீடல் படியும் பங்கு நல்ல விலையில் இருந்தது. அதனால் 167 ரூபாய்க்கு இந்த பங்கினை வாங்கினேன். வாங்கிய பிறகு மீண்டும் அலசல் செய்தால் பழைய வரலாறு நன்றாக இருக்கிறது. மதிப்பீடல் நன்றாக இருக்கிறது.

ஆனால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு கையில் கோச்சடையான் படம் மட்டுமே முக்கிய படமாக இருந்தது. அதிலும் கோச்சடையான் ட்ரைலர் பார்த்த பிறகு பொம்மை ரஜினியை ரசிகர்கள் ஏற்பார்கள என்று ஒரு சந்தேகம் வந்தது.

அதனால் வாங்கிய விலைக்கு விற்று விடலாம் என்றால், வாங்கிய பிறகு இந்திய பொருளாதார தேக்கம், ரூபாய் சரிவு என்று பல காரணிகளால் பங்குச்சந்தை ஒரே அடியாக சரிந்தது. பங்கு 110 ரூபாய்க்கு சென்றது.

பின்னர் மீண்டும் உயர்ந்து இறங்கிய சந்தையில் ஒரு முறை 140க்கு சென்றது. இது தான் சமயம் என்று 16% நஷ்டத்துக்கு விற்று விட்டேன். நமது போர்ட் போலியோவில் 5% க்கு குறைவாக இருந்ததால் அவ்வளவாக பாதிப்பு ஏற்படுத்தவில்லை.

இதிலிருந்து எமக்கு கிடைத்து பாடம் என்னவென்றால் தெரியாத துறை, எதிர் கால திட்டம் இல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்யக் கூடாது என்று.

Petronet:

இந்த நிறுவனம் ஒரு அரசுத் துறை பெட்ரோலிய நிறுவனம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு திரவ வடிவில் சுருங்கி வரும். அதனை மீண்டும் வாயு வடிவிற்கு கொண்டு வந்து சப்ளை செய்வார்கள்.

அடிப்படையில் ஒரு நல்ல நிறுவனம். நிறுவன பொருளாதார வரலாறும் நன்றாக இருந்தது. மதிப்பீடலும் நல்ல பங்கு விலையைக் காட்டியது. அதனால் 140 ரூபாய்க்கு வாங்கினேன்.

ஆனால் ஒரு செய்தி தெரிந்திருந்தும் கண்டுக்காமல் விட்டுவிட்டேன். அதாவது, இந்த நிறுவனத்தின் முக்கிய ப்ராஜெக்ட் கொச்சி துறைமுக முனையத்தில் உள்ளது. அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட எரிவாயு தமிழ்நாடு, கர்நாடகா என்று பிற மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்படும்.

அந்த வழி தமிழ்நாடு கோயம்புத்தூர் வழியாக செல்கிறது. விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக நிலங்களுக்கு அடியில் பைப் போடும் பணி கடந்த ஒரு வருடமாக தடைபட்டு நிற்கிறது. இது போக, தமிழ்நாடு அரசும் எதிர்க்கிறது. இதனால் விற்று விடலாம் என்று நினைத்தேன்.

அப்புறம் வழக்கமான தேக்கம், ரூபாய் சரிவு போன்றவற்றால் 100 ரூபாய்க்கு சரிந்தது. பின்னர் மீண்டும் 130 ரூபாய்க்கு அருகில் வந்த போது  7% நஷ்டத்துக்கு விற்று விட்டேன்.

இதிலிருந்து எமக்கு கிடைத்து பாடம் என்னவென்றால் அரசியல் போன்ற எதிர்பாராத காரணிகளால் பாதிக்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யக் கூடாது என்று.


உங்களுக்கு இந்த கணக்கு ஓரளவு பயனாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ரிஸ்க் எல்லாம்
 ரஸ்க் சாப்பிட மாதிரி

அதனால் எப்பொழுது நிறுவனம் வளர்வதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிய வரும் போது விற்று விடுங்கள். சும்மா அதே நிலையில் இருப்பதற்கு பதிலாக வளரும் பங்குகளில் போட்டால் அந்த நஷ்டம் ஈடுகட்டப்பட்டு விடும்.

எமக்கு ஒரு நிலை சாதகமாக இருந்தது. அதாவது பங்குகளை பரவலாக பிரித்து முதலீடு செய்திருந்தேன். அதனால் மற்ற பங்குகள் இதனை சமநிலைபடுத்திவிட்டன. நீங்களும் பிரித்து போடுங்கள்.

அரசியல், திரைப்படம் போன்ற துறைகள் சார்ந்திருக்கும் பங்குகளை தவிர்ப்பது நல்லது. அது சிறு முதலீட்டர்களுக்கு ஏற்றதல்ல என்று நினைக்கிறேன்.

பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

தொடர்புடைய சில பதிவுகள்:
பங்குச்சந்தை எப்படி தொடங்குவது?
நமது போர்ட் போலியோவின் நிலவரம் (21/09)
பங்குகளை delist செய்யும் போது நாம் என்ன செய்வது?


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

10 கருத்துகள்:

  1. நஷ்டக் கணக்கை பொதுவில் வைக்கும் உங்கள் நேர்மைக்கு என் வந்தனங்கள்.ஈராஸ் போன்ற சினிமா நிறுவனங்கள் தோற்கும் என்பதைச் சொன்ன என் முந்திய பதிவு ஒன்று:http://sengovi.blogspot.com/2011/05/blog-post_31.html

    பதிலளிநீக்கு
  2. நன்றி சென்கோவி நண்பரே! "Long time, no see":)..உங்களது நல்ல பதிவு. சினிமாவை ஒரு முழு நேர 'Corporate' தொழிலாக கருத முடியாது. SONY போன்ற நிறுவனங்களே தோல்வி அடைந்து உள்ளன.

    பதிலளிநீக்கு
  3. Thanks Thiru. Rama. What is your opinion/ recommendation on GSPL ?
    If possible Suggest a few stocks for short term / long term.

    பதிலளிநீக்கு
  4. Dear Ganesan,I am quite positive on GSPL. For other long term stocks, I have already recommended some stocks as portfolio in revmuthal.com.Please look into this link.http://www.revmuthal.com/2013/09/2109.html

    பதிலளிநீக்கு
  5. Super. I too have petronet scrip. With your valid justification. I decided to sell and invest something else.can you suggest one scrip.

    பதிலளிநீக்கு
  6. Dear Veeramani,Thanks for your comment! You can prefer 'Aegis Logistics' instead of petronet. I will write a separate post for the same.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்!! நிரந்தர சிறிதளவு மாத வருமானம் ஆவது கிடைக்க எந்த மாதிரி இன்வெஸ்ட்மன்ட்கள் செய்யலாம் என்று சொல்லவும் . (நேரம் கிடைக்கும் போது)

    பதிலளிநீக்கு
  8. நன்றி விஜய்! இன்னொரு பதிவில் இதனை பற்றி விளக்கமாக கூறுகிறோம்!

    பதிலளிநீக்கு