சனி, 21 டிசம்பர், 2013

Mutual Fund: தேர்ந்தெடுப்பது எப்படி? -3

கடந்த பாகத்தில் பரஸ்பர நிதியைத் தேர்ந்தடுக்கத் தேவையான சில அடிப்படை குறிப்புகளைப் பார்த்தோம். இந்த பதிவில் இதன் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.

கடந்த பாகத்தினைப் பார்க்க..

நிலைத்தன்மை:

பாதுகாப்பான நீண்ட கால முதலீட்டிற்கு பரஸ்பர நிதியின் நிலையானத் தன்மை என்பது மிக முக்கியம். சில நிதிகள் சில காலங்களில் அதிக மாற்றங்களில் காட்டும்.அதன் பின் மாற்றங்கள் இருக்காது. இந்த மாதிரியான நிதிகளை தவிர்க்கலாம்.இதனை நாம் Beta என்ற மதிப்பின் மூலம் எளிதில் கண்டு பிடித்து விடலாம். இந்த Beta அளவானது ஒன்றுக்கு அருகில் இருந்தால் சந்தையுடன் ஒத்துப் போகிறது என்று அர்த்தம். அல்லது 1.5 என்று இருந்தால் சந்தை 10% கூடினால்/ குறைந்தால் இந்த நிதி 15% கூடுகிறது அல்லது குறைகிறது என்று பொருளாகும்.


சீர்தன்மை:

சில நிதிகள் சில காலங்களில் மட்டும் நல்ல திறனாக செயல்படும். மற்ற காலங்களில் அமைதியாக இருக்கும். இந்த நிதிகளையும் தவிர்க்கலாம். இதனை Standard Deviation என்ற மதிப்பை வைத்து எளிதில் கண்டு பிடிக்கலாம்.


உதாரணத்துக்கு Standard Deviation மதிப்பு 4% என்றும் வருட லாபம் 12% என்றும்  இருந்தால் அதனுடைய லாபம் 8 முதல் 16% என்ற இடைவெளியில் இருக்கலாம்.

பரவலாக்கம்:

நிதி அதிக அளவில் பரவலாக்கப்பட்டிருப்பதும் அவசியமானது. இந்த நிதிகள்  கொஞ்சம் பாதுகாப்பு அதிகமான, நிலையான வருமானம் கொடுக்கும் வகையில் இருக்கும்.

இதனுடைய பரவலாக்கம் பல துறை பங்குகள், LARGE CAP, MID CAP, SMALL CAP என்று பல அளவுகளில் இருப்பது நல்லது.

வரலாறு:

நிதியின் கடந்த கால வரலாற்றைப் பார்ப்பது நல்லது. இதன் மூலம் நிதி பல ஆண்டுகள் முன் ஆரம்பிக்கப்பட்டு இருந்தால் பல தகவல்கள் அறிந்து கொள்ளள ஏதுவாக இருக்கும்.

CRISIL RATING:

இது பொதுவாக நிறுவனங்களுக்கு, பரஸ்பர நிதிகளுக்கு வழங்கப்படும் அளவுகோல். இந்த அளவுகோல் ஒன்று முதல் ஐந்து ஸ்டார் அளவில் உள்ளது. இதில் அதிக அளவு பெற்ற நிதி நல்லதாகக் கருதப்படும். அதனால் 4, 5 ஸ்டார் ரேடிங் உள்ளதா என்பதையும் பார்த்து முதலீடு செய்யுங்கள்.

நமது தேவை?:

கடைசியான ஒன்று..நமது தேவை என்ன என்பதைப் பார்க்கவும்..அதாவது வயதானவர்களுக்கு உடனடியாக ஒரு பாதுகாப்பான முதலீடு தேவைப்படும். அதே சமயத்தில் இளைஞர்களுக்கு சிறிது காலம் பிறகு ஒரு பெரிய தொகை தேவைப்படும். அவர்கள் கொஞ்சம் அதிக வருமானம் எதிர்பார்க்கும், கொஞ்சம் அதிக RISK கூடிய நிதிகளில் முதலீடு செய்யலாம்.

இவ்வளவு தகவல்களையும் சரி பார்த்தால் கண்டிப்பாக உங்கள் முதலீட்டில் நஷ்டம் வாரது. அதனால் முதலீடு செய்யும் முன் கொஞ்சம் பொறுமையாக இருந்து முடிவு பண்ணுங்க..ஏதோ வருமான வரி விலக்கு பெறுவதற்காக அவசரம், அவசரமாக முதலீடு செய்ய வேண்டாம்.

இனி ஒரு நிதியை எடுத்து நாம் CASE STUDY பண்ணுவோம்...அதனை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

கட்டுரை பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்..

<!–- google_ad_section_start -–> English Summary:
How to select mutual fund investments from so many in the list? Stability, Deviation, Crisil Ratings, Long history, Stock splitting method are playing key roles in mutual fund selection.
<!–- google_ad_section_end -–>


« முந்தைய கட்டுரைAdvt.

Email: muthaleedu@gmail.com


5 கருத்துகள்:

  1. மிக தெளிவாக விளக்கங்கள் அளிக்கின்றீர் :) நன்றி மற்றும் வாழ்த்துகள்! உங்கள் பதிவுகள் என்றும் வளரட்டும்!!

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்துகள் மிக உற்சாக அளிக்கிறது. நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. நண்பா இதன் தொடர்ச்சி காணப்படவில்லையே ....

    பதிலளிநீக்கு