நமது தளத்தில் எப்பொழுதும் பொருளாதாரம், முதலீடு என்று தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்ததற்கு மாற்றாக இந்த கட்டுரையில் ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொள்வோம்.
கொஞ்சம் வித்தியாசமகவே கார்டூனிஸ்ட் மதன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
English Summary:
The tamil book "ki.mu-ki.pi" gives the detailed history of world in fact pace. Many interesting unknown stories are covered in the book and available in Amazon.
நேற்று தான் படித்து முடித்த ஒரு புத்தகத்தை பற்றி எழுதுகிறேன்.
ஒரு நண்பரிடம் இரவலாக வாங்கி படித்து முடித்து விட்டேன். தற்போது முடித்து விட்டாலும் வீட்டில் இருக்க வேண்டிய நூல் என்று நினைப்பதால் வாங்க வேண்டும் என்றே நினைத்துள்ளேன்.
கொஞ்சம் வித்தியாசமகவே கார்டூனிஸ்ட் மதன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் இது போன்ற புத்தகங்கள் அடிக்கடி வருவது மிகவும் நல்லது. புத்தக விலை 135 ரூபாய் தான் என்றாலும், அதில் உள்ள தகவல்களும், அதனை தந்த விதமும் மதிப்பில்லாததே.
கிட்டத்தட்ட 4000 வருடங்களில் உலகத்தில் நடந்த நிகழ்வுகளை 189 பக்கங்களில் எழுதியுள்ளார். வரலாற்றை இவ்வளவு கோர்வையாக எங்கும் படித்தது இல்லை. நமது பாடத்திட்டங்களில் இப்படி ப்ராக்டிகல் நடையில் எளிமையாகவே சேர்க்கலாம் என்றே தோன்றுகிறது.
ட்யோனாசர் தோன்றியது, குரங்கில் இருந்து மனிதன் வந்தது, நமக்கு முன்னரே ஒரு மனித இனம் வாழ்ந்து வந்தது, அவர்களைக் கொன்று தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பல புதிய தகவல்கள் வந்து கொண்டே இருந்தன.
அமெரிக்காவும், ஜப்பானும் உலகின் மற்ற கண்டங்களில் இருந்து பிரிந்ததால் தான் அவை சுயமான வல்லரசாக மாறின என்று கூறி இருந்தார். இதனை ஏற்க முடியவில்லை. அப்படி என்றால், தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஏன் அந்த அளவு வளரவில்லை என்று கேள்வியும் எழுகிறது.
கிட்டதட்ட மனித வரலாறு என்பது எகிப்தில் இருந்தே ஆரம்பிக்கிறது.. தற்போதைய தலைமுறை தான் கரென்ட் முதல் பலவற்றை கண்டுபிடித்து அறிவாளிகளாக இயங்கி கொண்டிருக்கோம். என்று நினைத்தால் அதை விட தவறான எண்ணம் வேறு இல்லை என்று சொல்லலாம்.
எகிப்தியர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே மூக்கின் வழியாக மூளையை உறிஞ்சி எடுத்தும், ஈரல், நுரையீரல்களை அறுவை மூலம் தனியே எடுத்து மம்மியை தயார் செய்து உள்ளார்கள். இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னரே அவ்வளவு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருந்துள்ளார்கள் என்பது ஆச்சர்யமளிக்கும் செய்தி.
யூதர்கள் அறிவியலில் அறிவாளிகள் என்றால், கிரேக்கர்கள் தத்துவத்தில் கரை கண்டவர்கள் என்றே சொல்லலாம். கிரேக்க மொழி வழக்கில் இல்லாமல் போனதால் நாம் பல முக்கிய இலக்கியங்களை இழந்திருப்போம் என்றே நினைக்கிறேன். பல நூற்றாண்டுகள் முன் சாக்ரடீஸ், ப்ளுட்டோ என்று கிரேக்கர்கள் கூறிய தத்துவங்கள் நமது திருக்குறளுக்கு ஒப்பாக சொல்லலாம்.
கீழே உள்ள ஒரு மேற்கோள் ப்ளுட்டோ கூறியதாக புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
"பலர் இணைத்து செய்யும் முட்டாள் ஜனாயகத்தை விட நல்ல சர்வாதிகாரம் மேலானது" என்று கி.மு. விலே கூறியுள்ளார். கண்டிப்பாக இன்றைய இந்திய ஜனநாயகத்துக்கும் பொருந்தும் என்று சொல்லலாம்.
இப்படியே, அலெக்ஸ்சாண்டர், சந்திர குப்தர், என்று வந்து கடைசியில் அசோகர், புத்தர் காலத்தில் பக்கங்கள் முடிவடைகிறது.
தமிழகமும் ராஜ ராஜ சோழனும் தான் உயரிய வரலாற்றைக் கொண்டவர்கள் என்று நினைத்து வந்த எமக்கு அவர்களுடன் பலர் புகழை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதையும் புரிய முடிந்தது.
நாலாயிரம் வருட வரலாற்றை இரண்டு நாட்களில் சலிப்பு இல்லாமல் படிக்க முடிந்தது மதனின் எழுத்து நடைக்கு கிடைத்த வெற்றியே.
புத்தகப் பிரியர்கள் படிக்கலாம். கீழே அமேசான், ப்ளிப்கார்ட் இணைப்புகள் உள்ளன.
English Summary:
The tamil book "ki.mu-ki.pi" gives the detailed history of world in fact pace. Many interesting unknown stories are covered in the book and available in Amazon.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக