வியாழன், 25 செப்டம்பர், 2014

ஆசியக் கோப்பையும், மதிக்கப்படாத இந்தியத் திறமைகளும்

நேற்று கொரியாவில் உள்ள இன்ச்சியானில் நடைபெறும் ஆசியக் கோப்பையில் ஒரு முக்கியமான போட்டியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.


இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற ஹாக்கி போட்டி தான் அது. இதில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தாலும் நல்ல விறுவிறுப்பான போட்டியாக அமைந்தது.

கிரிக்கெட் போன்று பெரிய ஸ்பொன்சர்கள் இல்லாத போதும் இந்திய ஹாக்கி வீரர்கள் காட்டிய ஈடுபாடு பாராட்டுதலுக்கு உரியதே. நேரில் சென்று பார்ப்பதற்கு கிரிக்கெட்டை விட ஹாக்கி நன்றாகவே இருந்தது.

இந்தியா பாகிஸ்தான் ஹாக்கி போட்டி 


கடந்த ஆசிய போட்டியை விட இந்த முறை இந்தியா பதக்கப்பட்டியலில் பெரிதும் பின் தங்கியே உள்ளது. இதற்கு இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் 'அதீத ஈடுபாடும்' ஒரு காரணம் என்று செய்திகளைப் படித்து நாம் தெரிந்து இருக்கலாம்.

நேற்று ஆசியப் போட்டியில் பங்கு பெறும் ஒரு வீரர் மூலமாக இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் யோக்கியதையை நன்றாகவே அறிய முடிந்தது.

கேல்லேரியில் ஸ்பொன்சர்சிப் இருக்கைகள் கிடைத்ததால் விளையாட்டு வீரர்களுக்கு அருகையிலே உட்காரும் வாய்ப்பு கிடைத்தது நன்றதாக போனது. படகோட்ட போட்டியில் பங்கு பெறும் கேரளாவை சேர்ந்த சந்தோஷ் என்ற வீரர் சில முக்கிய தகவல்களை தந்தார். அவர் இந்திய ராணுவம் மூலமாக போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

பதக்கம் பெறும் வாய்ப்புள்ள கிட்டத்தட்ட 150 பேர்களை அனுப்பாமல் இந்தியாவிலே வைத்துள்ளார்கள்.

அரசியல் பலமும் பணமும் தான் யார் போட்டிகளில் பங்கு பெறுகிறார் என்பதைத் தீர்மானிக்கிறதாம். அதற்கு ஒவ்வொரு மட்டத்திலும் லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது போல. நாட்டிற்காக போட்டியில் பங்கு பெறுவதற்கு நாம் நாட்டிற்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை.

இவ்வளவிற்கும் வீரர்களுக்கான விமான டிக்கெட் முதல் தாங்கும் வசதி வரை கொரிய அரசே பார்த்துக்கும் சூழ்நிலையில் கூட பலருக்கு ஆசிய போட்டிக்கு செல்வோமா இல்லையா என்பதே கடைசி நேரத்தில் தான் தெரிந்துள்ளது.

முதலில் செல்வோம் இல்லையா என்ற கவலை. அதன் பிறகு தான் பயிற்சிகள். இப்படி வீரர்களை ஊக்குவிக்க வேண்டிய ஒலிம்பிக் கமிட்டி தன்னம்பிக்கையை கெடுத்து விடும் பணியை சரியாக செய்து வருகிறது.

மற்ற நாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் ஊக்கமும் ஒருங்கிணைப்பும் நமது அரசு மூலம் இல்லை என்ற ஏமாற்றம் அவர் பேச்சில் தெளிவாக தெரிந்தது.

முதலில் சானியாவும் சாய்னாவும் ஆசிய போட்டிகளில் பங்கு பெறுவதில் விருப்பம் இல்லாமல் இருந்தது நமக்கு கோபத்தை வரவழைத்து இருக்கலாம்.. ஆனால் கொஞ்சமும் ஊக்கம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் அவர்களிடம் நாம் மேலும் எதிர்பார்க்க முடியாதே.

பதக்கம் வாங்கிய பின் கொண்டாடுவதை விட அதற்கு முன் ஊக்கம் கொடுத்து வளர்ப்பது தான் அரசு மற்றும் ஒலிம்பிக் கமிட்டிகளின் முக்கிய பணி.

அப்படிக் கொடுக்காவிட்டால் விளையாட்டுத் துறையில் விருப்பம் இருந்தாலும் பிழைப்பிற்காக வேறு துறையை நோக்கி அவர்கள் செல்ல வேண்டி வரும். இது நாட்டிற்கு தான் இழப்பு! அவர்களுக்கு அல்ல..

சீனா போல் பதக்கங்கள் வாங்க வேண்டுமென்றால் நாம் இன்னும் போக வேண்டிய தூரம் மிக அதிகமாக உள்ளது. ஆனால் அதற்கான முயற்சி கொஞ்சமும் தென்படவில்லை.


English Summary:
No encouragement for Indian players in Incheon Asian games in south korea. No proper training, delay in visa and arrangements are giving disappointment to the players.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக