புதன், 24 செப்டம்பர், 2014

பரபரப்பான தீர்ப்பில் பதறும் பவர் நிறுவனங்கள்

நேற்று உச்சநீதி மன்றத்தில் நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக வந்த தீர்ர்ப்பு அநேக பவர் நிறுவனங்களைக் கலங்கடித்து விட்டது.

இந்த தீர்ப்பு தொடர்பான எமது முந்தைய கட்டுரை இங்கு உள்ளது.
நிலக்கரி ஊழல் தீர்ப்பில் நாம் என்ன செய்வது?

இது வரை நடத்தி வந்த தொழிலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு அதற்கு அபராதமும் விதிக்க சொன்னால் எந்த ஒரு நிறுவனத்திற்கும் அடித்தளம் ஆடி விடத் தான் செய்யும்.


1993ல் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட 214 நிலக்கரி சுரங்கங்களில் நான்கு சுரங்கங்களைத் தவிர மீதி அணைத்து ஒதுக்கீடுகளையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து விட்டது. அது போக, இதுவரை நிலக்கரியை வெட்டி எடுக்காமல் இருந்த நிறுவனங்களுக்கு மெகா டண்ணிற்கு 295 ரூபாய் அபராதமும் கட்ட வேண்டும் என்பது தான் ஹை லைட்ஸ்.

முறைகேடு நடந்து இருந்தால் கண்டிப்பாக இது போன்ற அதிரடியான தீர்ப்புகளும் தேவையான ஒன்று. எதிர்காலத்தில் முறைகேடுகள் எளிதில் நடப்பதை தடுப்பதற்கு இந்த தீர்ப்பு உதவும்.

இதனால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு அடுத்த சில மாதங்களுக்கு அதிக மின் தடை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அதன் பிறகு முறைப்படுத்தப்பட்ட நிலக்கரி உற்பத்திக்கு இந்த தீர்ப்பு பெரிதும் உதவலாம்.

இந்த தீர்ப்பால் பலன் பெரும் நிறுவனங்கள் மிகக் குறைவு. பாதிக்கப்படும் நிறுவனங்கள் அதிகம்.

அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படவில்லை. அதனால் NTPC, SAIL போன்ற நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

இது போக ரத்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்களின் தற்காலிக உற்பத்தியை COAL INDIA நிறுவனம் மேற்கொள்ளும் என்பதால் நேற்று அதன் பங்குகள் 5% அளவு உயர்ந்தன. இன்னும் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு சொந்தமான பவர் ப்ராஜெக்ட்களும் இதில் தப்பி விட்டதால் பாதிப்பு இல்லை. அதனால் நேற்று மட்டும் 6% கூடியது.

ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 3000 கோடி அபராதமும் அவர்கள் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதல் இடத்தில உள்ளார்கள். நேற்று மட்டும் 14% பங்கு சரிந்தது. எமது கடந்த கட்டுரையைத் தொடர்ந்தவர்கள் இந்த நஷ்டத்தை தவிர்த்து இருக்கலாம்.

இதனை அடுத்து, Usha Martin, Sarda Energy, Jayaswal Neco, Monnet Ispat, Prakash Industries போன்ற நிறுவனங்களும் வரிசையில் வருகின்றன.

இது போக இந்த நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் கொடுத்த பஞ்சாப் தேசிய வங்கியும், கனரா வங்கியின் வாரக் கடன்கள் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் நேற்று இந்த பங்குகள் சரிந்தன.

இந்த தீர்ப்பு ஆறு மாதங்கள் கழித்து அமல்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு புதிய ஏலம் நடத்தப்பட்டு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இதனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒரு தெளிவில்லாத நிலையே உள்ளது. ஏலத்தின் பிறகே பவர் துறையைப் பற்றிய முக்கிய குறிப்புகள் கிடைக்கும்.

இதனால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து இருந்தால் விலகுவது நல்லது. அதே நேரத்தில் பதிய முதலீடு செய்யாமல் இருப்பதும் நல்லது.


English Summary:
Indian court gives judgement to cancel the coal licenses which puts more pressure to coal exploring and energy companies to stop the operation. The country's economic may affected by this judgement.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: