புதன், 10 செப்டம்பர், 2014

SNOWMAN பங்கை லிஸ்ட் செய்யும் போது வாங்கலாமா?

நேற்றைய கிரே சந்தை பற்றிய கட்டுரையில் SNOWMAN IPOவில் பங்குகள் கிடைத்த 'அதிர்ஷ்டகார' நண்பர்களைப் பற்றி கேட்டிருந்தோம். நமக்கு தெரிந்து பத்து பேர் விண்ணப்பித்ததில் ஒருவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது.


நாம் கடந்த பதிவில் SNOWMAN பங்கு வெளிச்சந்தையில் 65 ரூபாய் அளவு வர்த்தகமாகி வருவதாக தெரிவித்து இருந்தோம். அதனால் தான் என்னவோ, பல நண்பர்கள் லிஸ்ட் செய்யும் போதும் இந்த பங்கினை வாங்கலாமா? என்று கேட்டு இருந்தார்கள்.

இந்த கட்டுரையில் அப்படி வாங்கலாமா? வேண்டாமா? என்பதைப் பற்றி பார்ப்போம்.




அதற்கு முன், பங்குகள் நமக்கு ஏன் கிடைக்கலை என்ற ஒரு குழப்பம் இருக்கலாம். அதனைப் பற்றி சுருக்கமாக பார்த்து விட்டு அடுத்ததிற்கு செல்லலாம்.

SNOWMAN IPOவை பொறுத்தவரை நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்களுக்கு அதிக பட்சம் 42 லட்சம் பங்குகளை கொடுக்கலாம். ஆனால் வந்த விண்ணப்பங்கள் 17 கோடிக்கும் மேல். அதாவது 42 மடங்கிற்கும் மேல்.

செபியின் புதிய விதிப்படி விண்ணப்பித்த அனைவருக்கும் குறைந்த பட்ச பங்குகளை கொடுக்க வேண்டும். அதனால் முதலில் ஒருவருக்கு குறைந்த பட்ச பங்குகளான 300 பங்குகளுக்கு மேல் கிடைக்க வாய்ப்பே இல்லை.

அடுத்து, விண்ணப்பித்த அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது விதி. அப்படி என்றால் 42 லட்சம்/300 என்று பார்த்தாலும் அதிகபட்சம் 14,000 பேருக்கு தான் பங்குகளை கொடுக்க முடியும்.

ஒவ்வொருத்தரும் சராசரியாக 900 பங்குகளுக்கு விண்ணப்பித்தால் கூட, விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 1.88 லட்சத்தை தாண்டுகிறது.

ஆக, 13ல் ஒருவருக்கு தான் பங்குகள் கிடைத்து இருக்கும்.

அந்த வகையில் நண்பர் ஜெயகுமார் அவர்கள் உண்மையிலே அதிர்ஷ்டக்காரர் தான். வாழ்த்துக்கள்!

அடுத்து, லிஸ்ட் செய்யும் போது வாங்கலாமா? என்ற கேள்விக்கு வருவோம்.

தற்போது IPOவில் SNOWMAN பங்கின் கட்-ஒப் விலை 47 என்று உள்ளது. இந்த நிலையிலே அதன் P/E மதிப்பு 25 என்று உள்ளது.

சாம்பல் சந்தையிலே 65~70 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் SNOWMAN லிஸ்ட் செய்த பிறகு 70 ரூபாய்க்கு வர்த்தகமாகுவதாக வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் லிஸ்ட் செய்த பிறகு P/E மதிப்பு 37 என்று மாறும்.

இது கொஞ்சம் மிகையான மதிப்பே. அதாவது பங்கு மலிவான விலையில் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.

இதே 45% வளர்ச்சியை அடுத்த சில வருடங்களுக்கு கொடுத்தால் தான் P/E மதிப்பு சராசரி நிலைக்கு வரும். அதனால் கொஞ்சம் எதிர்பார்ப்பும் ரிஸ்கும் இங்கு அதிகமே.

வேண்டும் என்றால் மதிப்பீடலின் படி, இப்படி திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

லிஸ்ட் செய்த பிறகு பங்கு 60 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகிக் கொண்டே இருந்தால் கொஞ்சம் வாங்கிப் போடுங்கள். அதற்கு மேல் சென்றால் வேறு பங்கு பக்கம் போய் விடுவது நல்லது.

நமது செப்டெம்பர் 15 போர்ட்போலியோவில் அதிக நண்பர்கள் இணைந்து வருவது மகிழ்வைத் தருகிறது.

முடிந்த வரை செப்டெம்பர் 14 இரவு அன்றே போர்ட்போலியோவை பகிர்ந்து விட நினைத்துள்ளோம். அதனால் இணைய விரும்பும் நண்பர்கள், செப்டெம்பர் 13க்கு முன் தெரிவிப்பது நமக்கு பயனாக இருக்கும்.

சநதேகங்களுக்கு muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக