இன்று மூன்றாவது நிதிக்காலாண்டு பிறக்கிறது. கடந்த இரண்டு காலாண்டுகளில் சந்தை அதிக அளவு ஏற்றம் கண்டு விட்டதால் கடந்த இரு வாரங்களாக சந்தை கரடியின் பிடியிலே இருக்கிறது.
நாம் முந்தைய பதிவுகளில் சொல்லியவாறு நடுத்தர மிட்கேப் பங்குகள் கடந்த வாரத்தில் அதிக வீழ்ச்சியில் இருந்தன. இதற்கு அதிக உயரம் சென்றதால் ஏற்பட்ட திருத்தமே காரணமாக அமைந்தது.
கடந்த இரு நாட்களில் சரிந்ததன் ஒரு பகுதியை மிட்கேப் பங்குகள் மீட்டு விட்டன. இதனால் சிரியா பிரச்சினை போன்ற உலகக்காரணிகள் தற்காலிகமாகவே அமைந்தது.
தற்போதைக்கு பெரிய நிறுவனங்களைக் கொண்டிருக்கும் சென்செக்ஸ் புள்ளிகள் அவ்வளவு மாற்றம் இல்லாமல் வர்தகமாகிக் கொண்டே வருகிறது. வரும் வாரங்களில் மேல் நோக்கி செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
அடுத்து வரும் காலாண்டில் சந்தையின் நகர்வைத் தீர்மானிக்கும் காரணிகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
#
நேற்று அறிவிக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைகளும் மாற்றம் எதுவும் இல்லை. பணவீக்கம் தற்போது குறைந்து வந்தாலும் ரிசர்வ் வங்கிக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை போல் தெரிகிறது.
இந்த ஆண்டில் ஏற்பட்ட வறட்சி அடுத்த ஆண்டு உணவு பணவீக்கத்தை பாதிக்கலாம் என்று கருதுவதால் இன்னும் பணப்புழக்கத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவே ரிசர்வ் வங்கி விரும்புகிறது. இருந்தாலும் இப்போதைக்கு தரவுகள் சாதகமாகவே உள்ளன.
#
ஆட்டோ நிறுவனங்கள் செப்டெம்பர் மாத விற்பனை தரவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றன. பண்டிகை காலம் என்பதால் வாகன் விற்பனை அதிகரிக்கலாம் என்ற ஒரு நம்பிக்கை இதற்கு முக்கிய காரணம். அதனால் இந்த தரவுகளைப் பொறுத்து பங்குகளை தேர்ந்தெடுக்கலாம்.
#
Core Sectors என்று சொல்லப்படும் துறைகளின் வளர்ச்சி விகிதம் மிகவும் நன்றாக வந்துள்ளது. இதில் சிமெண்ட் துறையைத் தவிர மற்ற எல்லா துறைகளும் நல்ல தரவுகளைக் கொடுத்துள்ளன. இன்னும் சுரங்கம், பவர் தொடர்பான நிறுவனங்கள் நீதி மன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்த பங்குகளில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
#
மோடியின் அமெரிக்க பயணத்தில் கொடுத்த விசா விதிமுறைகள் எளிதாக்குவது தொடர்பான விதி முறைகள் சுற்றுலா தொடர்பான பங்குகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஹோட்டல், சுற்றுலா நிறுவனங்கள் போன்றவை இந்த அறிவிப்புகளால் அதிக பயனடையும்.
மற்றபடி மோடியின் ஜப்பான் பயணத்தைப் போன்று அமெரிக்க பயணம் இன்னும் அவ்வளவு சூடு பிடிக்க வில்லை.
#
இந்த மாதத்தில் இருந்து இரண்டாவது காலாண்டு நிதி அறிக்கைகள் வெளிவர ஆரம்பிக்கிறது. அணைத்து புறக்காரணிகளை விட இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவசியமானது. நாமும் தளத்தில் எழுதுகிறோம்.
#
உலக அளவில் சீனாவிற்கும் ஹாங்காங்கிற்கும் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சினை அதிக அளவில் உற்று நோக்கப்பட வேண்டியுள்ளது. இதனால் சீனாவிற்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக தனிக் கட்டுரை எழுதுகிறோம்.
சிலர் இந்த வருட இறுதிக்குள் சென்செக்ஸ் 28,000 நிலையை அடையலாம் என்று சொல்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் இது சாத்தியமானது போல் தெரிகிறது. அதனால் முதலீடுகளை தொடர பரிந்துரைக்கிறோம்.
நமது தளத்தில் புத்தகங்கள் பிரிவில் சில புத்தகங்களைப் பரிந்துரை செய்து இருந்தோம். அமேசான் தளத்தில் புத்தக திருவிழா என்ற பெயரில் தமிழ் புத்தகங்களுக்கும் 25%க்கு மேல் சலுகை வழங்குகிறார்கள். இதில் 130 தமிழ் புத்தகங்களும் அடங்கும். நாம் பரிந்துரை செய்த புத்தகங்களும் இதில் வருகிறது.
இதற்கான இணைப்பு இங்கே உள்ளது.
Above 25% Offer on Tamil Books
நமது அடுத்த போர்ட்போலியோ அக்டோபர் 15 அன்று வெளிவரும். மேலும் விவரங்களை muthaleedu@gmail.com என்ற முகவரியில் பெறலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக