புதன், 3 செப்டம்பர், 2014

'Shardha Cropchem' IPOவை வாங்கலாமா?

சந்தை காளையின் பிடியில் இருக்கும் போது அந்த சூழ்நிலையை IPO வெளியிடும் நிறுவனங்களும் நன்றாக பயன்படுத்திக் கொள்ளும். அதனால் தான் தற்போதும் அடுத்தடுத்து  IPO வெளிவர ஆரம்பித்துள்ளன.


கடந்த வாரம் Snowman IPOவைப் பற்றிய எமது கருத்துக்களைப் பகிர்ந்து இருந்தோம். அதனையடுத்து Shardha Cropchem என்ற நிறுவனம் IPOவாக செப்டெம்பர் 5ல் வெளிவர இருக்கிறது.Shardha Cropchem நிறுவனம் விவசாயத்திற்கு தேவையான விதைகள் மற்றும் சம்பந்தப்பட்ட வேதிப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேதிக்கலவைகளின் கண்டுபிடிப்புகளுக்கான உரிமம் பெற்றுள்ளது. இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.

தற்போது IPOவில் பங்கு விலை 145 முதல் 156 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்ச விலையில் P/E மதிப்பு 12 என்ற அளவிற்கு வருகிது. இது துறை சராசரியான 25க்கும் கீழே இருப்பதால் நல்ல மதிப்பீடலிலே உள்ளது.

பொதுவாக IPO என்றவுடன் உடனடி அதிக லாபம் என்று வருபவர்கள் அதிகம். அதாவது லிஸ்ட் செய்யப்பட உடனே 5௦% வரை லாபம் எதிர்பார்ப்பார்கள்.

ஆனால் இந்த பங்கில் அந்த அளவு அதிகமாக எதிர்பார்க்க முடியமா? என்பது கொஞ்சம் சந்தேகம் தான். ஆனால் 10~20% வரை லாபம் எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

காரணம் என்னவென்றால்,

2010களில் 30% அளவு அதிகரித்து வந்த இந்த நிறுவனத்தின் வியாபாரம் கடந்த இரண்டு வருடங்களாக ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. wonderla, snowman போன்று போட்டி இல்லாத துறையாகவும் இது இல்லை. நிறைய நிறுவனங்கள் ஏற்கனவே சந்தையில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளன.

அடுத்து, இந்தியாவில் விவசாய வேதித்துறையானது மற்ற துறைகளைக் காட்டிலும் 9% வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. இது மற்ற துறைகளைக் காட்டிலும் குறைவானதே.

நிறுவன உரிமையாளர்களும் தங்களது பங்கை DILUTE பண்ணுவதற்காகத் தான் பங்குச்சந்தைக்கு வருகிறார்கள். வியாபர விரிவாக்கதிற்காக அல்ல என்பதையும் கவனிக்க.

அதனால், மதிப்பீட்டில் பங்கு மலிவாக கிடைக்கிறது. அதே நேரத்தில் வளர்ச்சியில் பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்று சொல்லலாம்.

10 முதல் 20% வரை உடனடி லாபம் எதிர்பார்ப்பவர்கள் IPOவை வாங்கலாம். பங்கு லிஸ்ட் மதிப்பில் இருந்து கீழே போவதற்கு அவ்வளவு வாய்ப்புகள் இல்லை.

அதிக அளவில் லாட் வாங்குவதற்கு பதிலாக ஒரு லாட்டை மட்டும் வாங்குவது போதுமானது என்று பரிந்துரை செய்கிறோம். ஒரு லாட் என்பது 90 பங்குகளைக் கொண்டது.

Snowman IPOவில் முடங்கி கிடக்கும் பணம் செப்டெம்பர் 8ல் தருவார்கள் என்று சொல்கிறார்கள். அதனால் அதனையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

எமது அடுத்த போர்ட்போலியோ செப்டெம்பர் 15ல் வெளிவருகிறது. மேலும் விவரங்களை இங்கு அல்லது muthaleedu@gmail.com என்ற முகவரியில் பெறலாம்.

English Summary:
Shardha Cropchem Initial public offer is recommended for low risk takers in stock market. The company's growth is limited and promoters are diluting the capital money.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக