ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

Dividend Yield: பங்கினை மதிப்பிட உதவும் ஒரு வழி (ப.ஆ - 28)

'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் முந்தைய பகுதியை இங்கு காணலாம்.

நிறுவனத்தை மதிப்பிட உதவும் டிவிடென்ட்டை எப்படி கணக்கிடுவது?

பொதுவாக லாபத்தில் இயங்கும் நிறுவங்களை டிவிடென்ட் வழங்க முன் வரும். இதனால் சில சமயங்களில் நிறுவனங்கள் வழங்கும் டிவிடென்டும் அந்த நிறுவனத்தை மதிப்பீடுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.


ஒரு நிறுவனம் தொடர்ந்து பல வருடங்கள் டிவிடென்ட் வழங்கி வந்தால் முதலீட்டாளர்களுக்கு தோதுவான பங்காக கருதப்படும். லாபத்தின் ஒரு பகுதியை நிர்வாகம் எல்லா முதலீட்டாளர்களிடம் பங்கிடுவது என்பது நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க உதவும்.


வழக்கமாக டிவிடென்ட் என்பது நிறுவன பங்கின் முக மதிப்பிலிருந்தே கணக்கிடப்படுகிறது. முக மதிப்பு (Face Value) என்பது மாறாத மதிப்பாக இருப்பதால் வரலாற்றுத் தரவுகளில் குறிப்பிடுவதற்கு எளிதாக அமைகிறது.

ஆனால், ஒரு நிறுவனத்தின் திறனை மதிப்பிடுவதற்கு முக மதிப்பை அடிப்படையாக வைத்த டிவிடென்ட் சதவீதம் பயனற்றதாகி விடுகிறது.

ஒரு முதலீட்டாளனாக நமக்கு முக மதிப்பு என்பதை விட பங்கு விலையே அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

நாம் முதலீடு செய்யும் ஒவ்வொரு பணத்திற்கும் எவ்வளவு ரிடர்ன் பெறுகிறோம் என்பதை அறிய பங்கு விலையை அடிப்படையாக கொண்ட ஒரு டிவிடென்ட் விகிதம் தேவைப்படுகிறது. இதனைத் தான் Dividend Yield என்று குறிப்பிடுகிறார்கள்.

Dividend Yield என்பது கீழ் உள்ள சூத்திரத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது.

Dividend Yield = 
(வருடத்திற்கு பெறப்பட்ட டிவிடென்ட் / தற்போதைய பங்கு விலை) * 100

இந்த விகிதம் பங்கு விலையை அடிப்படையாக வைத்து உள்ளதால் மாறிக் கொண்டே இருக்கும் தன்மை உடையது.

நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு எவ்வளவு டிவிடென்ட் ரிடர்னாக பெறுகிறோம் என்பதை Dividend Yield வைத்து அறிந்து கொள்ளலாம்.

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

A, B என்ற இரண்டு நிறுவனங்கள் ஒரு பங்கிற்கு 10 ரூபாயை டிவிடென்ட்டாக வழங்கியுள்ளன. இதில் A நிறுவனத்தின் பங்கு 500 ரூபாய்க்கும், B நிறுவனத்தின் பங்கு 1000 ரூபாய்க்கு வர்த்தகமாக வருவதாகக் கருதுவோம்.

இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் எந்த பங்கை விரும்புவார்கள்?

A நிறுவனத்தின் Dividend Yield = (10/500) * 100 = 2%

B நிறுவனத்தின் Dividend Yield = (10/1000) * 100 = 1%

இதனால் இரண்டு நிறுவனங்களும் ஒரே டிவிடென்ட்டை வழங்கினாலும் ரிடர்ன் என்று பார்க்கையில் 2% அளவு டிவிடென்ட் வழங்கிய A நிறுவனம் முதலீட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

இதனால்  Dividend Yield என்பதை நிறுவனத்தை மதிப்பீட உதவும் ஒரு காரணியாகவும் கருதிக் கொள்ளலாம்.

Dividend Yield விகிதத்தை எளிதில் கணக்கிடுவதற்காக ஒரு கால்குலேட்டரை நமது Stockcalculation தளத்தில் இணைத்து உள்ளோம்.

இந்த இணைப்பில் பார்க்கலாம்.
http://www.stockcalculation.com/2014/12/stock-dividend-yield-calculator.html

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பகுதி..

பங்கினை மதிப்பிட உதவும் பிற வழிகளை இந்த கட்டுரைகளில் பார்க்கலாம்.

English Summary:
Dividend yield is the value to see how company is friendly to investor. It related dividend money to the value of stock price.
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக