திங்கள், 29 செப்டம்பர், 2014

ஜெயலலிதா கைதைக் கொண்டாடும் சன் டிவி பங்கு

கடந்த மாதம் சுதர்சன் சுஹானி என்ற குறுகிய கால முதலீட்டிற்கான பங்குச்சந்தை நிபுணர் சன் டிவி பங்கைப் பற்றி சொன்ன ஒரு நிகழ்வு சுவையானது.

கடந்த மாதத்தில் மத்திய அரசு சுமங்கலி கேபிள் நிறுவனத்திற்கான அனுமதியை ரத்து செய்தது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன் தான் சுஹானி சன் டிவி பங்கை வாங்குமாறு கூறி இருந்தார்.

அடுத்த ஒரு வாரத்திதிலே  அவர் இவ்வாறு சொன்னார்.
"Sun TV chart is looking more confused. So we can avoid Sun TV"

அவரது பரிந்துரையை அப்படியே பின்பற்றியவர்களுக்கு அவ்வளவு கோபம் வந்திருக்கும். என்னடா ஒரு வாரத்தில் இப்படி மாற்றி சொல்கிறாரே என்று.


ஆனால் இந்திய பங்குச்சந்தையில் சில பங்குகள் இருக்கின்றன. அவற்றை பங்குகளின் டெக்னிகல் சார்ட்டில் கொண்டு வர முடியாது. சூழ்நிலைக்கு தக்கவாறு தான் வர்த்தகம் செய்ய வேண்டும். அரசியல், அரசு கொள்கைகள் போன்றவற்றில் இறுக்கமாகக் கட்டுப்பட்டு இருக்கும்.

நீண்ட கால முதலீட்டாளர்களாக இருந்தால் இத்தகைய பீட்டா மதிப்பு அதிகம் கொண்ட பங்குகளைத் தவிர்த்து விடலாம். ஏனென்றால் இந்த பங்குகளில் எப்பொழுது என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. இதனால் கணிப்பது மிகக் கடினம்.

இதே சன் டிவி நேற்று ஜெயலலிதா அவர்களின் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகு ஒரு கட்டத்தில் பங்கு விலை 4% அளவு அதிகரித்தது.

தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் செயல்பாடுகளில் மேலும் தொய்வு வரும். அது  சன் டிவிக்கு சாதகமாக அமையலாம் என்பதும் ஒரு கணிப்பாக உள்ளது. இது தான் இந்த உயர்விற்கு காரணமாக அமைந்தது.

ஆனாலும் இந்த அரசியல் நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்டு சன் டிவியின் அடிப்படை வியாபாரம் கீழ் நோக்கி சென்று இருக்கிறது என்பது அவர்களது நிதி அறிக்கையில் தெரிந்து  வருகிறது.

இதனை  "சன் டிவியின் ஆளுமையும் பங்கும் சரிகிறது" என்ற கட்டுரையில் விவரித்து இருந்தோம்.

அதனால் எதிரி வீழ்ந்தால் தான் நாம் வாழ முடியும் என்ற நிலையில் இருக்கும் சன் டிவியைத் தவிர்ப்பது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்லது.

#

முதல் முறையைத் தவிர மற்ற இரண்டு தடவைகளிலும் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியை அவ்வளவு குறை சொல்ல முடியாது. இலங்கை, காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவற்றில் அவர் காட்டிய உறுதி பாராட்டத்தக்கது.

அவரது ஆரம்ப கால சகவாசமும், இந்த வழக்கில் அவருக்கு தரப்பட்ட தவறான வழிகாட்டுதல்களும் அவரை இந்த நிலைக்கு தள்ளி விட்டன.

தற்போது ஆசிரியர் இல்லாத வகுப்பறையைப் போன்று அவரது அமைச்சரவை மாறியுள்ளது. அழுதே மானத்தை வாங்கி விடுவார்கள் போல் தெரிகிறது. இந்த ஜால்ராக்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவர்கள்.


English Summary:
Sun TV shares are celebrating Jeyalalitha's arrest after long time of Sun TV's shares fall down.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. ஜெயலலிதா அவர்களின் நிர்வாகம் இந்த முறை அவ்வளவாக குறை சொல்ல முடியாது இருந்தது என்பதை மறுக்க முடியாது .... அதே சமயம் அவர் செய்த தவறிற்கு மன்னிப்பாக விடுதலை தர வேண்டுமென்ற தமிழக மக்களின் எண்ணத்தை என்னால் எற்றுக் கொள்ள முடியவில்லை ....

    இலங்கை, காவிரி, முல்லைப் பெரியாறு அவரின் உறுதியை மறுக்க முடியாது.. அதே சமயம் இது அவரின் கடமையும் கூட ...

    அவரின் சமிபத்திய பல நல்ல திட்டங்களை வரவேற்கலாம் , நிர்வாக திறமையை பாராட்டலாம் , அதே சமயம்அவரின் ஆணவத அதிகாரத் வெறுக்காமலும் இருக்க முடியாது..

    தனது சுயநலத்துக்காக எதையும் செய்பவர் ... உதாரணம் எவ்வளவோ இருக்கு .. சமிபத்தியது விடுதலை புலிகளால் உயிருக்கு ஆபத்து ..... கேட்டுட்டு என்ன ஈழ பொழப்பு என்று தான் சொல்ல தோன்றியது ....

    முல்லை பெரியாருக்கு இவருக்கு கோடிக்கணக்கான பணத்தில் பாராட்டு விழா ... தென் மாவட்டத்துக்காரன் என்ற முறையில் தெரியும் வைகோவை தவிர வேறு அரசியல்வாதியும் பாராட்டு கொண்டாட முடியாது...

    நல்ல தலைவராக மாறிக் கொண்டிருக்கிறார், அது நிச்சயம் என்றால் தண்டனையை அனுபவித்துட்டு வந்து சொலிக்கட்டும் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்து ஏற்கத்தக்கவை. சரியான தண்டனை கால தாமதத்தால் தவறான நேரத்தில் வந்துள்ளது.

      நீக்கு