புதன், 17 செப்டம்பர், 2014

இந்தியாவில் பிட்சா டெலிவரி ஆகுமா? DONUTS ருசிக்குமா?

பொதுவாக பெரிய அளவில் புகழ் பெற்ற உணவு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை விரிவாக்குவதற்கு FRANCHISE முறையைத் தான் அதிகம் பின்பற்றுகிறார்கள்.


FRANCHISE முறையின் மூலம் ஒவ்வொரு விற்பனைக்கும் நிறுவனத்திற்கு ராயல்டி தொகை சென்று விடும். அதே நேரத்தில் எளிதான முதலீடு,வேகமான விரிவாக்கம், குறைவான ரிஸ்க் என்று பல சாதக நிலைகள் இருப்பதால் FRANCHISE முறை தற்போது பிரபலமாகி வருகிறது.

அந்த வகையில் DOMINOS PIZZA மற்றும் DUNKIN DONUTS போன்ற சங்கிலித் தொடரான உணவகங்களை நடத்துவதற்கு உரிமம் பெற்றுள்ள நிறுவனம் தான். JUBULIANT FOODWORKS.



JUBULIANT  நிறுவனம் முதலில் DOMINOS PIZZA மூலம் தமது சேவையை ஆரம்பித்தது. ஆரம்பத்தில் ஓரளவு நல்ல வளர்ச்சியில் சென்று கொண்டிருந்த நிறுவன லாபம் தற்போது கிட்டத்தட்ட mute செய்யப்பட்ட வளர்ச்சி நிலையில் உள்ளது. அதே போல் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட DUNKIN DONUTSம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி கொடுக்கவில்லை.

கடந்த ஆண்டில் செலவு அதிகரித்து, லாபம் குறைந்ததால் விலைகளை 19% அளவு உயர்த்தியுள்ளார்கள். இது Profit Margin என்பதை கூட்ட உதவலாம். ஆனால் விறபனையாகும் பிட்சா எண்ணிக்கையை கணிசமாக குறைத்து விட வாய்ப்புள்ளது.

இதே போல் Same Stores Growth என்று சொல்லப்படும் ஏற்கனவே இருக்கும் கடைகளில் வளர்ச்சி எதிர்மறையில் செல்ல ஆரம்பித்துள்ளது. அதாவது ஒரு முறை சாப்பிட வந்தவர்கள் மீண்டும் அவ்வளவாக வர வில்லை என்று தெரிகிறது.புது கிளைகள் மூலமாகத் தான் வருமானத்தை பெருக்க வேண்டிய நிலைமையில் உள்ளது.

இந்தியர்கள் எந்த பழக்கத்தை கைவிட்டாலும் உணவு பழக்கத்தில் ஏற்படும் மாறுதல்களை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதனால் அதிக அளவில் விளம்பரத்திற்கு செலவு செய்ய வேண்டி உள்ளது. இது லாப விகிதத்தை கணிசமாக பாதிக்கிறது. இதோடு உணவு பண வீக்கமும் சேர்ந்து லாபத்தை பாதிக்கிறது.

வெளிநாடுகளுக்கு வந்தாலே இட்லி, சாம்பார் எங்கு கிடைக்கும் என்று தேடித் பிடிக்கும் நம்மை நம்பி இந்தியாவிலே இந்த தொழில் புரிய வந்த JUBULIANT நிறுவனத்திற்கு கொஞ்சம் ரிஸ்க் அதிகமாகவே உள்ளது.

70 ரூபாய்க்கு காபியையும் 45 ரூபாய்க்கு பிரட்டும் வாங்கி சாப்பிட இந்தியர்களின் மனசாட்சி இடம் தருவது கஷ்டமே. குறைந்த பட்சம் இந்த தலைமுறை வரையாவது இதே போல் சேமிக்கும் பொருளாதார மனப்பான்மையே அதிகம் உள்ளது என்று சொல்லலாம்.

இந்தியாவைப் பொறுத்த வரை பிட்சா கடையும், காபி ஷாப்பும் காதலர்களுக்கு ஏற்ற இடமாகவும். அவசரத்திற்கு சாப்பிடும் இடமாக உள்ளதே தவிர குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு சென்று வழக்கமாக சாப்பிடும் இடமாக இன்னும் மாறவில்லை என்பதே உண்மை.

வரும் காலங்களில் நாட்டின் வளர்ச்சி அதிகம் இருக்கும். இதனால் தனி நபர் வருமானம் உயரும். அப்பொழுது சாப்பாடு சுகாதாரத்தோடு இருக்க வேண்டும் என்று மக்கள் நினைப்பார்கள். இதனால் சாலைக் கடைகளின் வியாபாரம் குறையும். அந்த இடத்தைப் பிடித்து விடலாம் என்று மேற்குலக செயின் உணவகங்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றன.

ஆனால் அதே அளவு உடல் நலத்தை விரும்பும் மக்கள் ஜங்க் உணவையும்  தவிர்க்கவும் ஆரம்பித்து உள்ளார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இதனால் முழுமையாக இந்திய சூழ்நிலைக்கேற்ப மாறாமல் அவர்களால் அவ்வளவு எளிதில் சந்தையை பிடிப்பது கடினமே.

ஒருவேளை, அஞ்சப்பர் உணவகத்தையும், சரவண பவனையும் FRANCHISE எடுத்து இருந்தால் கூட இதை விட அதிக வளர்ச்சியைப் பெற்று இருக்கலாம்.

இதனால் மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சி காரணமாக தற்போதைக்கு தவிர்க்க வேண்டிய ஒரு பங்காக  JUBULIANT நிறுவனத்தைக் கருத்தில் கொள்ளலாம்.

English Summary:
Dominoz Pizza and Dunkin Donuts are facing tough time in Indian market. Jubuliant stock is affected by this slow growth.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக