செவ்வாய், 9 செப்டம்பர், 2014

உற்சாகத்தில் இருக்கும் டயர் பங்குகளை வாங்கி போடலாம்

கடந்த சில நாட்களாக வாகனங்களுக்கு டயர் தயாரிக்கும் நிறுவனங்கள் நல்ல டிமாண்டில் உள்ளன. இதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாக அமைந்தன.


முதலாவது, ஆட்டோ வாகனங்களின் விற்பனை கடந்த சில மாதங்களாக நல்ல வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் வாகனத்தின் முக்கிய பாகமான டயர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது.


அதோடு மட்டுமல்லாமல், டயர் தயாரிப்பின் முக்கிய மூலப் பொருளான ரப்பர் விலை கடுமையாக குறைந்துள்ளது. அதாவது ஒரு கிலோ ரப்பர் 129 ரூபாய்க்கு குறைந்துள்ளது. இது ஐந்து வருடங்களில் இல்லாத அளவு குறைந்த விலையாகும்.

ரப்பர் உற்பத்தி செய்யும் உலக நாடுகள் தங்கள் ஏற்றுமதியை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்துள்ளன. ரப்பர் அதிக அளவு உபயோகிக்கப்படும் சீனாவில் தேவை குறைந்துள்ளது. இவ்வாறு உலக சந்தையில் ஏற்பட்ட டிமாண்டை மீறிய சப்ளை காரணமாக கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை அடுத்து மூன்று வருடங்களுக்கும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டயர் நிறுவனங்களின் லாப விகிதம் (Profit Margin) கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

இப்படி மூலப்பொருள், விற்பனை என்ற வியாபாரத்தின் இரு முனைகளுமே டயர் நிறுவனங்களுக்கு அதிக சாதகமாக உள்ளன. டயர் நிறுவனங்களை நமது போர்ட்போலியோவில் வைத்து இருப்பதற்கு ஏற்ற தருணம் இது.

மதிப்பீடலில் மலிவாக கிடைக்கும் டயர் பங்குகளை தற்போது வாங்கி போடலாம்.

நமது கட்டண சேவை போர்ட்போலியோவில் ஏற்கனவே ஒரு டயர் பங்கை பரிந்துரை செய்து இருந்தோம். அந்த பங்கு 80% க்கும் அதிக லாபம் கொடுத்துள்ளதை நினைவு கூர்கிறோம்.

அடுத்த போர்ட்போலியோ செப்டெம்பர் 15 அன்று வெளிவருகிறது. விருப்பமுடைய நண்பர்கள் muthaleeedu@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 8 பங்குகளுடைய போர்ட்போலியோ 1200  ரூபாயில் பரிந்துரை செய்யப்படுகிறது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக