வியாழன், 4 செப்டம்பர், 2014

உச்சத்தில் உள்ள சந்தையில் என்ன செய்வது?

நீண்ட நாள் உச்சத்திலே சென்று கொண்டிருந்த நேற்று தான் கொஞ்சம் கீழே வந்தது. வாங்கும் வாய்ப்புகளுக்கு இனி கொஞ்ச நாள் இறக்கங்களை எதிர்பார்க்கலாம்.

கடந்த மாதத்தில் வெளிவந்த பல தரவுகள் உற்சாகமளிக்கும் விதத்தில் இருந்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தொழில் வளர்ச்சி மீண்டும் ஐந்து சதவீதத்தை தாண்டியுள்ளது. இதனால் அரசு நிர்ணயித்த 6% GDP வளர்ச்சியைத் தொட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஏற்றுமதி கூடியுள்ளது. இறக்குமதி குறைந்துள்ளது. இதனால் நிதிப் பற்றாக்குறை குறைந்துள்ளது. வாகன விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வாறு பல சாதகமான தரவுகள் ஒன்று கூட சென்செக்ஸ் 27,000 புள்ளிகளைத் தொட்டுள்ளது.

இன்னும் விவசாயத் துறை அவ்வளவு ஏற்றம் காணாதது தான் கவலை கொள்ள செய்கிறது. பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர விவசாயத் துறை இதை விட அதிக வளர்ச்சி பெறுவது அவசியமாகிறது. அப்பொழுது தான் வட்டி விகிதங்கள் குறையும்.



அடுத்த வாரம் சந்தை கொஞ்சம் இறக்கத்தில் வந்து மீண்டும் 25,500க்கும் 27,000க்கும் இடையே ஊசலாடலாம். இவ்வாறு எதிர்பார்க்கும் கரெக்சன் சமயத்தில் நமது செப்டெம்பர் 15 போர்ட்போலியோவும் வெளிவருகிறது என்பது சாதகமான விஷயம்.

கடந்த வாரம் நடந்த நிகழ்வுகளைப் பார்த்தால்,

சிப்லா புதிய ஆஸ்துமா மருந்தை ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தியதால் ஏறுமுகமாக இருந்தது. இது வரும் காலங்களில் கிப்லாவின் மொத்த வருமானத்தில் 10% வரை பங்கு வகிக்க வாய்ப்புள்ளது.

ஹரியானா அரசின் நிலா ஒதுக்கீடு ரத்து காரணமாக DLF தள்ளாட்டத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட 350 ஏக்கர் நிலத்தை DLF இழக்கிறது.

நிலக்கரி உற்பத்தி செய்யும் சுரங்கங்களில் அனுமதியை ரத்து செய்ய வேண்டாம் என்று அரசு நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது சாதகமான விஷயம். ஆனாலும் தீர்ப்பு வந்தால் தான் யாரெல்லாம் தப்புகிறார்கள் என்று தெரியும். அது வரை பவர் பங்குகளில் ஒரு முடிவு எடுக்க முடியாத நிலைமை .

டெல்லியில் மின் தடை, அடுத்து மும்பையில் பவர் கட், நம்ம ஊரில் சொல்ல வேண்டாம் என்று எங்கும் மின்தடைகள் தொடர்கிறது. மத்திய அரசு மின்சாரம் தொடர்பாக முழு கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. இல்லாவிட்டால் மொத்த வளர்ச்சிக்கும் உலை வைத்து விடும்.

டீசல் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ற வகையில் மாற்றலாம் என்று அரசு கூறுவது எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமான விஷயம். நீண்ட நாள் ஒதுக்கப்பட்டு கிடந்த பெட்ரோல் பங்குகளில் தற்பொழுது மீண்டும் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறோம்.

இன்று முதல் Shardha Cropchem IPO விண்ணப்பத்தினை பெறுகிறது. இது தொடர்பாக எமது கருத்துக்களை Shardha Cropchem IPOவை வாங்கலாமா? என்ற எமது கட்டுரையில் பார்க்கலாம். விண்ணபிக்க கடைசி நாள் செப்டெம்பர் 9.

நல்ல 10 பங்குகளை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எப்பொழுதெல்லாம் பங்கு விலை 2% க்கு கீழ் குறைகிறதோ வாங்கிப் போட்டுக் கொண்டே இருங்கள். அது தான் தற்போதைய சந்தையில் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற முறையாக இருக்கும்.

கட்டண சேவையில் பங்குகளை கையாளுவது தொடர்பான நமது கருத்துக்களைப் பகிரவும்  மற்றும் புதிய போர்ட்போலியோ தேதிகளை அறிவிக்க நமது தளத்தில் 'அறிவிப்பு' என்ற பகுதியை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறோம். எமது கருத்துக்கள் எளிதாக வேகமாக செல்வதற்கு இந்த பகுதி உதவும். 'அறிவிப்பு ' தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
 
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. அறிவிப்பு பகுதியை பற்றி என் கருத்து.

    ஒரு சிறு தொகையை அறிவித்து, அதை செலுத்துபவர்களுக்கு மட்டும் தனியாக login செய்து தெரிந்து கொள்ள கூடிய வகையில் இருந்தால் இன்னும் பல அவசியமான சிறு, மத்திய முதலீட்டளர்கள் மற்றும் டிரடெர் களுக்கு உபயோகமாக இருக்கும். option trading டிப்ஸ்
    குறுகிய கால முதலீடு டிப்ஸ் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது என் அபிப்ராயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தொடர்பாக விளக்கமாக ஒரு பதிவு எழுதுகிறோம்! தங்கள் கருத்துக்களுக்கு நன்றி,,

      நீக்கு