வியாழன், 18 செப்டம்பர், 2014

நம்பிக்கை தரும் இன்போசிஸ் சிக்காவின் முயற்சிகள்

எமது இலவச போர்ட்போலியோவில் HCL Technologies பங்கை 1080 ரூபாய்க்கு பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது 50% உயர்வில் 1620 ருபாயில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.


அதற்கு முக்கிய காரணமாக குறிப்பிட்டது வளரும் தொழில் நுட்பங்களான Cloud computing, Big data போன்றவற்றில் அவர்கள் வலுவாக இருப்பதும், நல்ல அனுபவத்தையும் பெற்றிருப்பது என்று குறிப்பிட்டு இருந்தோம்.

ஆனால் கடந்த பத்து வருடங்களில் மென்பொருள் துறையில் Application Programming என்பதே கோலோச்சி இருந்தது. அதனால் அது சார்ந்த இயங்கிய இன்போசிஸ், விப்ரோ போன்றவை நன்றாக HCLயை விட நல்ல லாபத்தைக் கொடுத்து வந்தன.

அதன் பிறகு, இன்போசிஸ், விப்ரோ போன்றவை காலத்துக்கேற்ற வகையில் மாறாமல் இருந்தததால் கடந்த இரு வருடங்களாக லாபமும், புதிய ஆர்டர்களும் கணிசமாக குறைந்தது.ஆனால் HCL ஏற்கனவே புதிய துறைகளில் அனுபவம் பெற்றிருந்ததால் நன்றாக பயன்படுத்திக் கொண்டது. இதனை விவரமாக முன்னணி IT நிறுவனமாக மாறும் HCL என்ற கட்டுரையில் பார்க்கலாம்.

இன்போசிஸ் நிறுவனத்தைப் பொறுத்த வரை அதன் பழமை மாறாத நிர்வாகம் புதியதொரு நிலைக்கு செல்ல தயங்கியே இருந்தது. இது பற்றியும் தலைமுறை இல்லாமல் தவிக்கும் இன்போசிஸ், என்ற தலைப்பில் விரிவாகவே கட்டுரை எழுதி இருந்தோம்.

இதனால் தான் என்னவோ நாராயண மூர்த்தி பழைய நிர்வாகத்தை அறவே ஒதுக்கி வைத்து விட்டு சிக்காவை கொண்டு வந்தார். அது ஓரளவு பயனளிக்கும் வகையில் மாறத் தொடங்கியுள்ளது.

மிதமிஞ்சிய பணத்தை வைத்துக் கொண்டு தள்ளாடும் இன்போசிஸ் என்ற கட்டுரையில் சிக்கா கையில் வைத்து இருக்கும் பணத்தை புதிய தொழில் நுட்பங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக,

நேற்று சீன அதிபர் விஜயத்தின் போது பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் ஒன்று இன்போசிஸ் நிறுவனம் சீனாவின் முன்னணி ஐடி நிறுவனமான Huawei நிறுவனத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி, இன்போசிஸ் நிறுவனமும் Huawei நிறுவனமும் இணைந்து Cloud தொடர்பான ப்ராஜெக்ட்களில் செயல்பட ஒப்புக் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், Huawei நிறுவனத்தின் நன்கு கட்டமைக்கப்பட்ட Cloud வசதிகளும், இன்போசிஸ் நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த மென்பொருள் நிபுணர்களும் இணைந்து செயல்படுவார்கள் என்று அறியப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தினால்  இன்போசிஸ் நிறுவனத்திற்கு புதிய ஆர்டர்கள் கிடைப்பது எளிதாக இருக்கும்.

ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமும், ஜப்பானின் Hitachi நிறுவனத்திடமும் பெற்றுள்ள புதிய Cloud ப்ரோஜெக்ட்களை தரத்துடன் முடிப்பதற்கு இந்த ஒப்பந்தம் எளிதாக இருக்கும்.இரு நிறுவனங்களும் சேர்ந்து மேகக்கணினி (Cloud computing) முறையை  pay-per-use solutions என்ற முறையிலும் அறிமுகப்படுத்த உள்ளார்கள். தமிழில் எளிதாக சொல்ல வேண்டும் என்றால், மேகக்கணினி மென்பொருளை சில்லறை விற்பனை முறையில் கொண்டு வர உள்ளார்கள்.

இது எப்படி என்றால், நீங்கள் ஒரு சூப்பர் மார்கெட் கடை நடத்துகீறர்கள் என்று வைத்துக் கொள்வோம். தற்போது பில் போடுவதில் இருந்து எல்லாம் கணினி மயமாக வந்து விட்டதால் நமது தகவல்களை ஏதேனும் சர்வரில் வைத்தாக வேண்டும். கடையே 2000 சதுர அடியில் இருக்கும் போது சர்வர் வைக்கும் அறைக்கு மட்டும் 500 அடி ஒதுக்கி விட்டால் அது ஒரு பெரிய தண்டச் செலவு. அதன் பிறகு ஏசி, கணினியைப் பார்த்துக்க ஒரு ஆள் என்று ஏகப்பட்ட வீண் செலவுகள் வரும்.

இதனை எளிதாக்குவதற்கு இன்போசிஸ் நிறுவனத்தின் pay-per-use solutions நன்கு பயன்படும்.  ஒரு குறிப்பிட்ட தொகையை நிறுவனத்திற்கு செலுத்துவதன் மூலம் உங்கள தகவல்களை அவர்களது பெரிய செர்வரில் வைத்துக் கொள்ளலாம். அதனால் நமக்கும் செலவுகள் குறையும். அதே நேரத்தில் ஒரே சர்வரை பல சிறிய நிறுவனங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்திற்கு அதிக லாப விகிதம் கிடைக்கும்.

இது வரை குறைந்த கூலியில் கிடைக்கும் இந்திய மென்பொருள் மனித தலைகளை வைத்து தரகு வியாபாரம் பார்த்து வந்த இன்போசிஸ் இப்பொழுது தான் உருப்படியான மென்பொருள் தயாரிப்புகளை செய்யவிருக்கிறார்கள்  வாழ்த்துக்கள்!

சிக்காவின் அடுதுக்கட்ட முயற்சிகளைப் பார்த்த பிறகு இன்போசிஸ் பங்கிற்கு அதிக தேவை இருக்கலாம். சரியான திசையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது!

***
செப்டம்பர் 15 அன்று வெளியான போர்ட்போலியோ 5% லாபத்தை தற்போது அடைந்து விட்டதால் நண்பர்கள் அதற்கு பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அதற்கு பதிலாக தனிப்பட்ட முறையில் பரிந்துரை செய்யப்படும் போர்ட்போலியோ முறைக்கு செல்லலாம். விவரங்களுக்கு இங்கு பார்க்க...


English Summary:
Infosys CEO is planning to invest in new fields in Big data, Cloud computing solutions. This may lead to better future in the coming generation. pay-per-use solutions may give high profit margin.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக