இதன் பின்னணியைப் பார்த்தால் கடந்த இருபது வருடங்களாக நிலக்கரி சுரங்கங்கள் ஏல முறையைப் பின்பற்றப்படாமல் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தன, இதனால் அரசிற்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கருதி அணைத்து நிலக்கர சுரங்க ஒதுக்கீடுகளையும் கோர்ட் ரத்து செய்தது.
இதனால் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் ஜெட்லி புதிய கொள்கையை மிக விரைவாக அறிவித்து உள்ளார்.
இந்த கொள்கையின் படி,
முதலில் மத்திய மற்றும் மாநில அரசால் நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏலம் எதுவும் இல்லாமல் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதனால் NTPC மற்றும் மாநில மின் நிறுவனங்கள் நேரடியாக சுரங்கங்களை பெறும். NTPCயின் பங்கு இன்று ஏற்றம் காணலாம்.
அடுத்து நடைபெறும் முதல் கட்ட ஏலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு மின்-ஏல முறையில் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் இந்த ஏலத்தில் நிலக்கரியை தங்கள் தேவைக்காக உபயோகிக்கும் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அதாவது நிலக்கரியை தோண்டி மற்றவர்களுக்கு விற்கும் நிறுவனங்கள் அனுமதிக்கப்படாது. இதனால் மின்சார, சிமெண்ட், சுரங்க நிறுவனங்கள் அதிக அளவில் பயன் பெறும். இந்த ஏலம் அடானி, டாடா, Essar போன்ற நிறுவனங்களுக்கு சாதகமாக அமையலாம். அதே நேரத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் இயங்கும் சிமெண்ட் நிறுவனங்களுக்கு நிலக்கரி பற்றாக்குறையால் அதிக பாதிப்பு ஏற்படும்.
நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்கள் இந்த ஏலத்தில் அனுமதிக்கப்படாது என்றும் கூறி உள்ளார். இதனால் Jindal நிறுவனத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படலாம். ஆனாலும் இது ஒரு தெளிவில்லாத தகவல்.
இறுதியாக வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவும் இந்திய நிறுவனங்களுக்கு சாதகமான விஷயம்.
கோல் இந்தியா நிறுவனத்தின் எதிர்காலமும் அதன் விரிவாக்கங்களும் கொஞ்சம் கேள்விக்குறி தான். அதற்கு எதிர்காலத்தில் புதிய சுரங்கங்கள் கிடைக்க வாய்ப்பில்லை. கோல் இந்தியாவின் திறமைக்கு இருப்பதே போதும் என்று முடிவு செய்து விட்டார்கள்.
இந்த கொள்கை நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி பற்றாகுறையை கணிசமாக குறைக்கும் என்று தெரிகிறது.
அரசியல் ரீதியாக பார்த்தால் நிலக்கரி சுரங்கங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் அந்தந்த மாநிலங்களுக்கே கிடைக்கும் என்று தெரிகிறது. இதனால் பீகார், ஜார்கண்ட், ஒரிசா போன்ற வட கிழக்கு மாநிலங்கள் அதிக பலன் பெறும். அடுத்து வரும் தேர்தல்களை முன்னிட்டு பிஜேபி செய்த காய் நகர்த்தல் என்று தெரிகிறது.
அப்படியே கூடன்குளம், நெய்வேலி போன்ற இடங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அந்தந்த மாநிலங்களுக்கு கொடுப்பது தான் நியாயம் என்ற கேள்வியும் இங்கு வருகிறது.
தொடர்புடைய பதிவுகள்:
English Summary:
New Coal Policy is giving mixed impacts on the power companies. Coal India may see negative impact. Power companies will get more benefits.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக