வெள்ளி, 10 அக்டோபர், 2014

பங்குச்சந்தை முதலீடுகள் - ஒரு ஒப்பீடு (ப.ஆ - 30)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதி..
Stock Split: பங்கினை ஏன் பிரிக்கிறார்கள்? (ப.ஆ - 29)

நண்பர் முத்துசுவாமி அவர்கள் பங்குச்சந்தை முதலீடுகளைப் பற்றிய சில ஒப்பீடுகளை பற்றி மின்அஞ்சலில் கேட்டு இருந்தார். இது ஒரு பொதுவான விடயம் என்பதால் இங்கு சுருக்கமான கட்டுரையாக பகிர்கிறோம்.தின வர்த்தகம்

நிறுவனத்தின் அடிப்படைகளை சாராமல் புறக்காரணிகளையும், பங்குவிலையில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளையும் மையப்படுத்தி நடைபெறும் பங்கு வர்த்தகம். இதனை ஒரு தற்காலிக யூகமாகவும் கருதிக் கொள்ளலாம்.

அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் பங்கில் சிறிய அளவில் ஏற்படும் விலை மாற்றங்களை கூட பயன்படுத்திக் கொள்வது இந்த வர்த்தகத்தின் முக்கிய அம்சம். அடிக்கடி பங்கு விலைகள் ஏறி இறங்கி கொண்டிருப்பது தின வர்த்தகர்களுக்கு பிடித்தமாக விடயம்.

சிறிய சிறிய நிகழ்வுகளையும் நுணுக்கமாக கவனிக்க வேண்டியது இங்கு அவசியமான ஒன்று. இதனால் முழு நேர வர்த்தகராக இருப்பது அவசியமானது.

குறுகிய கால வர்த்தகம்

இது காலாண்டு நிதி முடிவுகள், நிறுவனம் தொடர்பான செய்திகள், 52 வார உயர்வு நிலை, 52 வார தாழ்வு நிலை, 100 நாள் பங்கு சராசரி, 200 நாள் பங்கு சராசரி போன்றவற்றை அடிப்படையாக வைத்து நடைபெறும் பங்கு வர்த்தகம். இதனை பொறுத்தவரை காலம் என்பது வர்த்தகம் செய்பவர்களைப் பொறுத்தது. ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரையும் நீடிக்கலாம்.

இதில் CYCLES அல்லது Pattern போன்ற அனுமானத்தில் வரையப்பட்ட வரைபடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வரைபடங்கள் எல்லா பங்குகளுக்கும் பொதுவானதாக இருக்கும். ஏற்றத்தையும் இறக்கத்தையும் அடிப்படையாக வைத்து வரையப்படுவது. சூழ்நிலைகளைப் பொறுத்து வர்த்தகம் செய்வது இதில் அடிப்படையாக கருதப்படுகிறது.

சில சமயங்களில் நிறுவனங்கள் அடுத்த காலாண்டில் இவ்வளவு லாபம் எதிர்பார்க்கலாம் என்று சொல்லும் போது பங்கு விலையும் அதற்கு தக்கவாறு கூடும். இதனால் ஒரு காலாண்டில் வாங்கி மற்றொரு காலாண்டில் விற்று விடுவதும் உண்டு.

நீண்ட கால முதலீடு

இது நீண்ட கால நோக்கில் நிறுவனம் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் செய்யப்படும் முதலீடு. உதாரனத்திற்கு ஒரு வங்கி சில கிளைகளை புதிதாக திறக்கிறது. ஆனால் அந்த புதிய கிளைகள் உடனடியாக லாபம் கொடுக்காது. செயல்பட ஆரம்பித்து ஓரிரு வருடங்களில் லாபம் கொடுக்க ஆரம்பிக்கும். இத்தகைய நிறுவனம் சார்ந்த எதிர்பார்ப்புகள் இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

அதே போல் கடந்த சில வருடங்களில் கிடைத்த நிதி அறிக்கைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் Value Investing என்பதும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்கு Long Term Capital Gain என்ற வரி விலக்கும் கிடைக்கிறது. இதில் முழு நேரமாக பங்கு மாற்றங்களை கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் வேலை பார்த்துக் கொண்டே இந்த முதலீடுகளில் ஈடுபடலாம்.

இரண்டு முதல் ஐந்து வருடம் வரை பங்குகளில் முதலீடு செய்து நிதி அறிக்கைகளை மட்டும் கண்காணித்து வந்தால் போதும்.

###
கவனிக்க, முதல் இரண்டும் வர்த்தகமாக கருதப்படும். மூன்றாவது முதலீடாக கருதப்படும். அதாவது உங்கள் சொத்துக்கள் போல..

நமது தளத்தில் கொடுக்கப்படும் போர்ட்போலியோ சேவைகள் நீண்ட கால முதலீட்டை மட்டும் அடிப்படையாக வைத்துக் கொடுக்கப்படுபவை.
பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பாகம்
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் டிமேட் கணக்கு திறப்பது எப்படி? (ப.ஆ - 31)

English Summary:
Comparison between day trading, short term trading and long term investment. Day trading is the daily buy/sell of stocks. Short term trading is based on quarterly financial results. Long term investment is based on the business initiatives.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

 1. வணக்கம்


  உதாரணத்துக்கு 50 000 Rs பெறுமதியான நிறுவனம் ஒன்று 1 Rs பெறுமதியான 50 000 பங்குகளை வெளியிட்டு பங்குசந்தையில் நுழைகிறது.
  நாளடைவில் பங்கு ஒன்றின் விலை Rs 0.01 ஆக குறைகிறது.
  இப்போது நிறுவனத்தின் பெறுமதி என்ன ?


  நான் 500 பங்குகள் வைத்திருக்கிறேன், நிறுவனம் பங்குசந்தையில் இருந்து வெளியேற விரும்புகிறது.
  வெளியேற முடியுமா ?


  வெளியேறினால் நான் வைத்திருக்கும் பங்குகளின் நிலை என்ன?


  தயவுசெய்து எனக்கு விடையளிக்க முடியுமா?
  நன்றி

  பதிலளிநீக்கு
 2. நிறுவனம் வெளியேறும் போது 90% பங்குகளை முதலீட்டாளர்களிடம் இருந்து வாங்க வேண்டும் அப்பொழுது தான் வெளியே செல்வது வெற்றியடையும்.


  குறைந்தபட்சம் முக மதிப்பிற்கு பங்கு விலை வைத்தாக வேண்டும்.


  விலைகள் மிகவும் குறைவாக இருப்பின் பங்குகளை வைத்து இருக்கும் முதலீட்டாளர்கள் திருப்பி அளிக்க மாட்டார்கள். அதனால் Delisting வெற்றியடைய ஓரளவு நியாமான விலையை நிர்ணயிப்பது வழக்கம்.

  பதிலளிநீக்கு