வியாழன், 16 அக்டோபர், 2014

இரட்டை இலக்க வருமானத்தில் ஒரு அரசு ஓய்வூதிய திட்டம்

அருகி வரும் கூட்டுக் குடும்ப கலாச்சார வாழ்க்கையில் ஓய்வூதியத்திற்கும் திட்டமிடப்படுவதும் தேவையான ஒன்று.

இதற்கு முன் நமது தளத்தில் ஓய்வூதியம் தொடர்பாக கீழ் உள்ள திட்டங்களை எழுதி இருந்தோம்.

மேல் உள்ள திட்டங்களைப் பார்த்தால் நிலையான வட்டி விகிதத்தில் தரப்படுபவை. அதாவது அதிக பட்சம் வட்டி விகிதம் 9.5% சதவீதத்திற்குள் தான் இருக்கும்.

இந்த திட்டங்களை விட கொஞ்சம் அதிக வருமானம் தருவதும் ஓரளவு பாதுகாப்பான ஒரு திட்டத்தை இந்த கட்டுரையில் பதிவிடுகிறோம்.

Swavalamban Pension scheme


இந்த திட்டத்தின் பெயர். "Swavalamban". மத்திய அரசினால் PFRDA (Pension Fund Regulatory and Development Authority) என்ற அமைப்பு மூலம் நடத்தப்படுகிறது.

இந்த அமைப்பின் கீழ் பல திட்டங்கள் இருந்தாலும் அதிக பயன் கொடுக்கும் Swavalamban திட்டத்தை மட்டும் தற்போது அறிமுகப்படுத்துகிறோம்.

Swavalamban திட்டத்தின் கீழ் 18 முதல் 55 வயது நிரம்பிய எவரும் இணைந்து கொள்ளலாம். NRI மக்களும் இணைய வசதி உள்ளது.

இந்த ஓய்வூதிய திட்டத்தில்  குறைந்தபட்ச முதலீடு தொகை என்று எதுவும் கிடையாது. எவ்வளவு கையில் இருக்கிறதோ முதலீடு செய்து கொள்ளலாம்.

மேற்பார்வையாக பார்த்தால் ம்யூச்சல் பண்ட் முதலீடு போல் தெரியும் .ஆனால் அதனை விட சேவை கட்டணங்கள் மிகக் குறைவு. அதாவது 0.009% தான். அரசினாலே நடத்தப்படுவதால் ம்யூச்சல் பண்ட்டை விட பாதுகாப்பானது.

இந்த திட்டத்தின் 15% பகுதி நிதியானது அதிக வருமானம் தரும் பொருட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. மற்ற பகுதிகள் நிலையான வருமானம் தரும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

இதனால் சராசரியாக வருடதிற்கு 12% வரை வட்டி வருமானம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசின் மற்ற திட்டங்களை விட கொஞ்சம் அதிகமான வட்டி விகிதத்தை தருகிறது. 

Swavalamban Pension scheme


அதே போல் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வரி விலக்கும் பெற்றுக் கொள்ளலாம். அரசும் தன் பங்கிற்கு முதல் ஐந்து வருடங்களுக்கு வருடத்திற்கு 1000 ரூபாயை செலுத்துகிறது. இந்த மாதிரியான முறை வேறு அரசு திட்டங்களில் கிடையாது என்பதையும் கவனிக்க.

அறுபது வயதான பிறகு இதில் வட்டியுடன் சேர்த்து கிடைக்கும் தொகையில் 60% பகுதியினை மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம். மீதி தொகைக்கு அந்தந்த வருடங்களில் உள்ள வட்டி விகிதங்களுக்கேற்றவாறு 70 வயது வரை ஓய்விதயமாக பெற்றுக் கொள்ளலாம். 70 வயதிற்கு பிறகு மீதி உள்ள மொத்த தொகையும் எடுத்துக் கொள்ளலாம்.

இங்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்வதால் நமக்கு ஓரளவு பயம் ஏற்படலாம். ஆனால் மிகக் குறைவான பகுதியே பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. அதனால் ரிஸ்க் என்பது மிகக் குறைவே.

உதாரணத்திற்கு 18 வயதில் இணைந்து மாதந்தோறும் 500 ரூபாய் செலுத்தி வந்தால் அவருக்கு 60 வயதில் 43 லட்சம் கையில் கிடைக்கும். 24,000 வரை ஓய்வூதியம் மாதந்தோறும் கிடைக்கலாம். (இந்த கணக்கில் சராசரி வட்டி விகிதம் 12% என்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் மாற்றங்கள் இருப்பின் கூடவோ குறையவோ செய்யலாம்.)

கொஞ்சம் ரிஸ்க் தாங்குபவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். ICICI, SBI, AXIS, LIC போன்ற வங்கிகள் மூலமாகவும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களை www.pfrda.org.in என்ற தளத்தில் பார்க்கலாம்;

தொடர்புடைய பதிவுகள்:

English Summary:
Review on Swavalamban Pension scheme. It gives High return over other Govt. pension/saving schemes. Part of the money is invested in share markets.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: