செவ்வாய், 7 அக்டோபர், 2014

திருவிழாவை நடத்தி அதிருப்தியை சம்பாதித்த ப்ளிப்கார்ட்

நேற்று முன்தினம் Big Billion Day என்று ஒரு திருவிழாவை ப்ளிப்கார்ட் நடத்தியது. ப்ளிப்கார்ட் 6-10 என்ற இலக்கமுடைய பிளாட்டில் ஆரம்பிக்கப்பட்டதன் நினைவாக அக்டோபர் 6 தேதியை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.


ஆனால் உண்மையான நோக்கம் தீபாவளிக்கு வர்த்தகத்தை அப்படியே அள்ளுவது தான். இதனால் ஒரு பில்லியன் டாலர் வர்த்தகத்தை ஒரே நாளில் அடைய வேண்டும் என்று இலக்கு வைத்து இருந்தார்கள். அதனை அடைந்து விட்டார்கள். நேற்று மட்டும் 600 கோடிக்கு வர்த்தகமாகி உள்ளதாம்.



ஆனால் ஒரே நாளில் இவ்வளவு நாள் சேர்த்து வைத்து இருந்த வாடிக்கையாளர் நம்பிக்கையைக் கொஞ்சம் கெடுத்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.

ஆன்லைன் வர்த்தகத்தை பொறுத்த வரை பல அடுக்கு தரகு வியாபாரம் தவிர்க்கப்படுவதால் அவர்களால் குறைந்த விலைக்கு விற்க முடிகிறது.

பொருட்கள் உற்பத்தி செய்யும் செலவு மற்றும் தயாரிப்பாளர்கள் லாபம் போன்றவற்றை சேர்த்து 40 ரூபாய்க்கு வெளியே வரும் பொருள் அடுத்தடுத்த ஏஜென்ட், தரகர்கள், இடமாற்றம், கடை வாடகை, மின்சாரம்  என்று பல காரணங்களால் நுகர்வோர்களிடம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் நாம் வாங்கும் எந்த பொருளின் உண்மையான மதிப்பு 40%க்கு உள்ளே தான் இருக்கும்.

ஆன்லைன் வர்த்தகத்தில் உற்பத்தியாளர் நேரடியாக நுகர்வோரை தொடர்பு கொள்வதால் கடை விலையை விட 50% வரை தள்ளுபடி கொடுத்தாலே அவர்களுக்கு நஷ்டம் கிடையாது. மார்ஜினல் லாபம் கிடைத்து தான் தீரும்.

ஆனால் நேற்று ப்ளிப்கார்ட் ஒரு ரூபாய்க்கு கூட சில எலக்ட்ரானிக்ஸ் பொருளை விற்றது. அதிர்ஷ்டக்கார ஒருவருக்கு ஒரு ரூபாய் பொருளை விற்று விட்டு அதனை வாங்கும் மற்ற 99% பேர்கள் தலையில் கையை வைத்து உள்ளார்கள்.

உதாரனத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக 1650 ரூபாய்க்கு விற்ற வாசனை திரவியம் (Perfume) தற்போது 1950 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. திருவிழாவின் போது 70% தள்ளுபடியில் விறகப்பட்டதாம்.

இதனால் ஒரு நாள் திருவிழாவிற்காக மற்ற நாட்களில் வழக்கமாக  வாங்கும் வாடிக்கையாளர் அதிருப்தியை சம்பாதித்து உள்ளார்கள்.

அடுத்து, ஒரு கட்டத்தில் அவர்கள் இணையதளம் அதிக ஓவர்லோட் காரணமாக முழுமையாக வேலை செய்ய வில்லை. இவ்வாறு முன்னேற்பாடு எதுவும் செய்யாமல் இருந்ததும் எதிர்மறையாக போனது.

ப்ளிப்கார்ட் பொருட்களை அனுப்பும் Logistics சேவையில் அமேசான், ஸ்னேப்டீல் நிறுவனத்தை விட வெகு விரைவாக அதே நேரத்தில் தரமாகவும் டெலிவரி செய்யப்படுகிறது. அதே போல் , இது வரை நீண்ட காலமாக இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்ததால் இந்திய வாடிக்கையாளர்கள் மன ஓட்டம் பற்றிய தரவுகள் ப்ளிப்கார்ட்டிடம் அதிகமாக உள்ளது. இதுவும் அவர்களுக்கு சாதகமான விஷயம்.



ஆனால் அவர்கள் இணைய தள வடிவமமைப்பு என்பது இன்னும் ஒரு முழுமையான தரத்திற்கு இல்லை என்றும் ஒரு கருத்து உள்ளது. பொருட்களை தேடுவதில் உள்ள சிரமங்கள், மெதுவான தள வேகம், டிசைன் போன்றவற்றில் மற்ற தளங்கள் முன்னையில் உள்ளன.

பல நேரங்களில் Google Adsense விளம்பரம் அவர்கள் தளத்தில் ஓடிக் கொண்டு இருக்கும். அதன் மூலமாக அவர்கள் போட்டியாளர்கள் விளம்பரம் வருவதை பார்த்து இருக்கலாம். இது வேறு எந்த ஆன்லைன் வியாபர தளத்திலும் பார்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. ப்ளிப்கார்ட் என்பது விளம்பரம் போடும் செய்தி தளம் இல்லையே..

எந்த ஆன்லைனை முழுமையாக நம்புகிறார்களோ அதே இன்டர்நெட் மூலமாக அவர்களைப் பற்றிய கிண்டலும் கேலியும் தற்போது பரவி வருவது ப்ளிப்கார்ட் வர்த்தகத்தை கண்டிப்பாக பாதிக்கும். பரபரப்பு, கவர்ச்சி போன்றவற்றைக் காட்டிலும் தரம் நீண்ட நாள் நிலைத்து நிற்பதற்கு உதவும்!

English Summary:
Flipkart got negative image on Big Billion day sales on discounts. Snapdeal effectively used opportunities to promote their online shopping portal

தொடர்புடைய கட்டுரைகள்:

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக