ஞாயிறு, 5 அக்டோபர், 2014

5000 கோடியை தானமாக கொடுக்கும் ஜூன்ஜூன்வாலா

இரண்டு நாள் முன் தினமலரில் ஒரு செய்தி பார்க்க நேரிட்டது. ஒவ்வொரு முறையும் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்போகும் போது இந்தியாவிலிருந்து ஏன் புதியவர்கள் அதிகம் பட்டியலுக்குள் வரவில்லை என்பதை அழகாக எழுதி இருந்தார்கள்.


அதற்கு முக்கிய காரணமாக குறிப்பிட்டது "குரோனி கேப்பிட்டலிசம்" என்பதைத் தான். அதாவது அரசும் பணக்காரர்களும் இணைந்து அவர்களுக்குள்  மட்டும் வளங்களைப் பங்கிட்டுக் கொள்வது. அதனால் புதிவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்கள். இது சோசியலிச இந்தியாவில் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது உண்மையே.



இது போக, வெளிநாடுகளில் உள்ள சில வழிமுறைகள் நம்மிடம் இல்லாததும் ஒரு குறையே.

வாரிசு வரி என்ற திட்டம் வளர்ந்த நாடுகளில் உண்டு. அதன் படி, நமது சொத்துக்களை வாரிசுகளுக்கு கொடுக்கும் போது அதில் பகுதியை அரசிற்கு வரியாக கொடுக்க வேண்டும். அதாவது சில நாடுகளில் 50% அளவு வரி கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

வாரிசு வரியாக அரசிற்கு கிடைக்கும் வருமானம் மீண்டும் மக்களுக்கே செலவிடப்படுகிறது. இதனால் பணப்புழக்கம் ஓரளவு எல்லா மக்களிடம் சமநிலைப்படுதப்படுகிறது..

அதே போல் தனிமனிதனுக்கு ஏழு தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்ற தனிமனிதனின் பேராசை தவிர்க்கப்படுகிறது அதுவே லஞ்சம், ஊழல், போன்றவற்றை ஓரளவு தவிர்த்து விடுகிறது.

மேலும் வாரிசு வரியைப் பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.

இது அரசிற்கு வரியைக் கொடுப்பதை விட நாமே தானம் பண்ணி விடலாம் என்றும் தூண்டி விடுகிறது. இதனால் தான் பில் கேட்ஸ், பப்பெட் போன்றவர்கள் தமது கடைசி காலத்தில் 50% க்கும் மேல் சொத்துக்களை தாராளமாக தானமாக செலவிட்டு வருகிறார்கள். கண்டிப்பாக அவரகளது நல்ல மனதும் ஒரு காரணம் என்பதையும் மறுக்க முடியாது.

கடந்த வாரம் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா பற்றி வந்த ஒரு செய்தி இந்தியாவிலும் இப்படி இருக்காதா என்ற மனக்குறையை ஓரளவு தீர்த்து விட்டது. ஆமாம். தனது சொத்தின் 25% பகுதியை சமூக சேவைகளுக்கு செலவிடப்போவதாக கூறி உள்ளார். (ராகேஷைப் பற்றி தெரியாதவர்கள் எமது இந்தியாவின் வாரன் பப்பெட் என்ற கட்டுரையைப் படிக்கவும்.)

இது வரை பங்குகள் மூலம் கிடைத்த டிவிடென்ட் வருமானத்தின் 25% பகுதியை சமூகத்திற்கு கொடுத்து வந்துள்ளார். இதனால் வருடத்திற்கு 20 கோடி வரை கொடுத்துள்ள ஜூன்ஜூன்வாலா 2020க்குள் 5000 கோடி அளவு கொடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறி உள்ளார்.

ராகேஷைப் பொறுத்த வரை நீண்ட கால முதலீட்டாளர் என்பதால் தமது கால இறுதியில் பங்குகளை விற்ற பணத்தின் 25% பகுதியினை தானமாக கொடுக்க முடிவு செய்து உள்ளார். அதன் மூலம் 5000 கோடியை பெறுவார் என்றும் தெரிகிறது.

"எனது மூன்று குழந்தைகளுடன் சேர்த்து சமூகத்தை நான்காவது குழந்தையாக கருதுகிறேன். அதனால் நான்கில் ஒரு பகுதியை நன்கொடையாக கொடுக்கிறேன்" என்ற வாக்கியம் மிகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது. 

இதே போல் 'விப்ரோ' ஆசிம் பிரேம்ஜி, 'எச்சிஎல்' ஷிவ்நாடார் என்ற தொழிலதிபர்களும் கொடுத்துள்ளது பாராட்டுதலுக்குரியது.

எமது போர்ட்போலியோவால் பயனடைந்த நண்பர் திரு.சுப்ரமணியம் வள்ளியப்பன் அவர்கள் காஷ்மீர் வெள்ள நிதிக்காகவும், WORLDVISION தொண்டு நிறுவனத்திற்கும் 12,600 ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளார். இதன் மூலம் ஒரு குழந்தையின் வருடாந்திர படிப்பு செலவை ஏற்றுள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். அவரை 'முதலீடு' மனமார பாராட்டுகிறது.

எமது அடுத்த போர்ட்போலியோ அக்டோபர் 15 அன்று வெளிவருகிறது. muthaleedu@gmail.com என்ற முகவரியில் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இந்த போஸ்டரை வைத்தது வக்கீல்கள்.
இவர்களை வைத்து ஜென்மத்திலும் ஜாமீன் கிடைக்காது.

கடந்த கட்டுரையில் ஜெயலலலிதா சிறைத் தண்டனை பற்றி ஏற்பட்ட அனுதாபத்தை தெரிவித்து இருந்தோம். ஆனால் கடந்த ஒரு வாரமாக ஷிப்ட் முறையில் அதிமுகவினர் செய்யும் கூத்துக்கள் தமிழ்நாட்டையே கேலிக்குரியதாக்கி வருகிறது.

தனது எதேச்சாதிகாரத்தின் காரணமாக இப்படி அறிவற்ற அடிமைகளை உருவாக்கி விட்டோமே என்று ஜெயலலலிதாவே வருத்தப்பட்டு இருப்பார். . ஒரு வாரமாக தமிழ்நாட்டின் மொத்த வாழ்வும், பொருளாதாரமும் முடங்கிக் கிடப்பது வருத்தமான நிகழ்வு...


English Summary:
Rakesh donates 5000 crore rupees for welfare which is the partial income from stock investments and collected through dividends.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக