செவ்வாய், 21 அக்டோபர், 2014

தீபாவளி வாழ்த்துக்களுடன் ஒரு பங்கு பரிந்துரை

இந்த வருடம் எமக்கு சிறப்பு தீபாவளியாக அமைந்தது. முகம் தெரியாத பல நண்பர்கள் மெயிலில் தீபாவளி வாழ்த்துக்களை அனுப்பி இருந்தார்கள். அதற்கு 'முதலீடு' தளமே முதற்காரணம். நண்பர்களுக்கு நன்றி!


அணைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினருக்கும் எமது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! 



தென் இந்தியர்களுக்கு நரகாசுரன் வீழ்ந்த இன்று தான் தீபாவளி. ஆனால் வட இந்தியர்களுக்கு தீபாவளி என்பது ஐந்து நாள் கொண்டாடப்படும் ஒரு பெரிய பண்டிகை. அதில் மூன்றாவது நாளான லட்சுமி பூஜை தான் முக்கிய தினம். அதாவது பணம் வரும் தினம்.

அதனால் நாளை பங்குச்சந்தைக்கு விடுமுறையாக இருந்தாலும் லட்சுமி பூஜையை முன்னிட்டு ஒரு மணி நேர அளவு மட்டும் திறந்து வைப்பார்கள். இதனை "முஹுரத் வர்த்தகம்' என்று அழைக்கிறார்கள்.

இந்த நாளில் பங்குகளை வாங்க மட்டும் தான் செய்கிறார்கள். யாரும் விற்க மாட்டார்கள். நாளை மாலை 6.15 முதல் 7.30 வரை சந்தையில் வர்த்தகம் நடைபெறும்.

சிலர் நீண்ட கால முதலீட்டு நோக்கில் தங்கள் குழந்தைகள் பெயரில் பங்குகளை வாங்கி போடுவார்கள். பங்குச்சந்தை நிதி ஆண்டை நேர்மறையாகத் தொடங்க வேண்டும் என்ற நம்பிக்கை காரணமாக வந்த பழக்கம். நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த தினத்தில் முதலீட்டைத் தொடங்குவதும் ஒரு வழக்கம்.



நமது வாசகர்களுக்கும் இந்த தினத்தில் ஒரு பங்கை இலவசமாகவே பரிந்துரை செய்கிறோம். இது ஏற்கனவே நமது போர்ட்போலியோவில் உள்ள பங்கு தான். ஆனால் பரிந்துரை நேரமும் காரணங்களும் புதியது.

கொஞ்சம் ரிஸ்க் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு Large Cap பங்கையே எடுத்துக் கொள்கிறோம். ஐடி துறையில் முன்னணியில் இருக்கும் எச்சிஎல் பங்கை தற்போது பரிந்துரை செய்கிறோம்.

அண்மைய காலாண்டு நிதி அறிக்கையின் காரணமாக பங்கு கடுமையாக வீழ்ந்து தற்போது 1492 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இவ்வளவு வீழ்ச்சி தேவையில்லை என்றே கருதுகிறோம்.

இன்போசிஸ், டிசிஎஸ் நிறுவனங்களை விட பங்கு மலிவான விலையில் வந்துள்ளது. ஆனால் இன்னும் Attrtion rate, Utilisation rate போன்றவை மற்ற நிறுவனங்களை விட நன்றாக உள்ளது. Profit Margin நன்றாகவே உள்ளது. நிறைய புதிய டீல்களும் கிடைத்துள்ளன.

அதனால் ஆறு மாதங்களில் 20% ரிடர்ன் கருதி 1800 ரூபாயை இலக்காகக் கொண்டு முதலீடு செய்யலாம்!

தொடர்புடைய பதிவுகள்:

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக