கடந்த வாரம் 'கத்தி' திரைப்படம் பார்த்து முடியும் போது ஒரு வித சமூக அக்கறையை நமக்குள் கொடுத்தது. படத்தில் வருவது போல் கார்பரேட் நிறுவனங்களை எதிர்ப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமல்ல. அவர்களை அவர்கள் வழியில் சென்று தான் எதிர்க்க வேண்டி உள்ளது.
ஒரு முதலீட்டாளனாக நாமும் நமது எதிர்ப்பை நல்ல பலன் தரும் வழியில் பதிவு செய்யலாம். இது உலக சந்தைகளைப் பொறுத்த வரை புதிய விடயம் அல்ல. பல நாடுகளில் Socially responsible investing(SRI) என்ற பெயரில் வெளிப்படையாகவே பின்பற்றப்படுகிறது. அமெரிக்காவில் ஒன்பதில் ஒரு டாலர் சமூக அக்கறையுடன் முதலீடு செய்வதாக தெரிகிறது.
இதே போன்ற முறை இந்தியாவில் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் சில நண்பர்கள் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
கீழே நாம் பின்பற்றும் சில பங்கு கொள்கைகளை கொடுத்துள்ளோம்.
இதன் பிறகு வியாபாரத்தில் நேர்மையில்லாத சன் டிவி, ஏமாற்றுவதை தொழிலாக கொண்ட FINANCIAL TECHNOLIGIES, SAHARA, என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இவ்வாறு செய்வதில் ஒரு சாதகமான விஷயம் என்னவென்றால் எளிதில் நமக்கு தேவையான பங்குகளை பில்ட்டர் செய்ய முடிகிறது. ஒருவன் வியாபாரத்தில் நேர்மையில்லாமல் இருந்தால் எவ்வளவு சம்பாதித்தாலும் நீண்ட காலத்திற்கு அந்த வருமானம் தொடராது என்பதே இயற்கை நியதி. இந்த நியதி நீண்ட கால முதலீட்டில் தொடர்பவர்களுக்கு சாதகமாக உள்ளது.
குறைந்த காலத்திற்கு முதலீடு செய்பவர்கள் செய்திகளை அடிப்படையாக வைத்து முதலீடு செய்வார்கள். அவர்களுக்கு இந்த பங்குகளில் முதலீடு செய்வது வேண்டுமென்றால் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால் நீண்ட கால முதலீட்டில் தொடர்பவர்களுக்கு இந்த பங்குகளைத் தவிர ஏராளமான பங்குகள் சந்தையில் உள்ளன.
அதனால் த்ரிஷா இல்லாவிட்டால் நயன்தாரா, நயன் இல்லாவிட்டால் சமந்தா என்று அடுத்தடுத்த பங்குகளை எளிதில் இனங்காண முடியும்.
முறைகேடான கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக போராடும் போது "அவர்கள் முதலீட்டில் கை வைப்பது" என்பது மீள முடியாத ஒரு அடியைக் கொடுக்கும் என்பதே நிதர்சனம். நாம் ஒருவர் தானே எதிர்க்கிறோம் என்ற நினைப்பு ஒரு தளர்வைத் தரலாம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக பலர் பின்பற்றும் போது அந்த பங்கில் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.
சுகி சிவம் அவர்களின் பேச்சில் கேட்ட ஒரு பகுதியைக் குறிப்பிடுவது சரியாக இருக்கும். "இருபதாம் நூற்றாண்டின் முக்கிய ஆயுதம் DIPLOMACY" என்று ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார். எதையும் நாசூக்கான வகையில் புரிய வைப்பது அதிக பலனைத் தரும் என்பதே அதன் அர்த்தம்.
இலங்கை தமிழ் மக்களுக்காக பல உயிர் தியாகங்கள் செய்து போராடியது விடுதலைப் புலிகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கடைசி காலங்களில் உலக நாடுகளுடன் (இந்தியா அல்ல) DIPLOMACY தொடர்பான சில விட்டுக் கொடுத்தல்களை செய்து இருந்தால் அவர்கள் போராட்டமும் தொடர்ந்து இருக்கும். ஈழ நம்பிக்கை இன்னும் தொடர்ந்து இருக்கும்.
முன்பு ஒரு முறை இன்போசிஸ் நாராயண மூர்த்தி அவர்கள் இலங்கை ஐடி ஆலோசகராக ராஜபக்சேயால் நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால் இன்போசிஸ்சில் வேலை பார்க்கும் பல தமிழ் பொறியாளர்கள் மெயிலில் எதிர்ப்பைக் காட்ட அந்த பதவியை அவர் ஏற்க வில்லை. ஒரு தெருமுனை போராட்டத்தை விட இந்த எதிர்ப்பு வெற்றி எளிதில் கிடைத்தது.
இது எந்த வகை போராட்டத்திற்கும் பொருந்தும், ஒரு நாள் கடையடைப்பு, ஒரு நாள் வேலை நிறுத்தம் என்பதை விட தொடர்ச்சியான சமூக போராட்டமே அதிக பலனைத் தரும். அதற்கு பங்குச்சந்தையும் ஒரு வகையில் உதவுகிறது.
கட்டுரையின் இறுதியாக ஒவ்வொருவர் சித்தாந்தமும் வேறு வேறாக இருக்கலாம். அதனால் எமது தனிப்பட்ட கொள்கைகளை புகுத்த விரும்பவில்லை. அதே நேரத்தில் நீங்கள் கொண்ட எந்த சமூக கொள்கையின் எதிர்ப்பை பதிவு செய்யும் கருவியாக பங்குச்சந்தையைக் கருதிக் கொள்ளலாம் என்பதை மட்டும் இந்தக் கட்டுரையின் மையக் கருத்தாக எடுத்துக் கொள்ளவும்.

- சூதாட்டப் புகாரில் சிக்கிய பிறகு இந்தியா சிமெண்ட் நிறுவன பங்குகளை கண்டு கொண்டதில்லை.
- தமிழக மேற்கு மாவட்டங்களில் விவசாயிகள் விருப்பத்திற்கு மாறாக விளை நிலங்களில் குழாய்களை பதித்த GAIL, PETRONET போன்ற நிறுவனங்கள் தவிர்க்கப்பட வேண்டிய பட்டியலில் இணைந்தன. (ஏன் கெயிலுக்கு வேற வழியே இல்லையா?)
- மலைவாழ் மக்கள் விருப்பத்திற்கு மாறாகவும், முதலீட்டாளர்களிடம் நாணயமாக இல்லாத வேதாந்த குழும நிறுவனங்களை தவிர்ப்பது. (நேர்மையில்லாத CAIRN பங்கை என்ன செய்யலாம்?)
- நாணயம் இல்லாமை, சாராய தொழில், முடிந்தவரை பெண்களை கொச்சைப்படுத்தும் மல்லையாவின் KING FISHER, MANGALORE CHEMICALS போன்ற நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை படிக்கும் எண்ணம் கூட வந்ததில்லை. (SBIன் லாபம் சரிந்தது ஏன்?)
- சிகரெட்டை பரவலாக ப்ரொமோட் செய்யும் ITC நிறுவனத்தின் பங்குகள் எவ்வளவு டிமேண்டில் இருந்தாலும் வாங்கியது கிடையாது.
இதன் பிறகு வியாபாரத்தில் நேர்மையில்லாத சன் டிவி, ஏமாற்றுவதை தொழிலாக கொண்ட FINANCIAL TECHNOLIGIES, SAHARA, என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இவ்வாறு செய்வதில் ஒரு சாதகமான விஷயம் என்னவென்றால் எளிதில் நமக்கு தேவையான பங்குகளை பில்ட்டர் செய்ய முடிகிறது. ஒருவன் வியாபாரத்தில் நேர்மையில்லாமல் இருந்தால் எவ்வளவு சம்பாதித்தாலும் நீண்ட காலத்திற்கு அந்த வருமானம் தொடராது என்பதே இயற்கை நியதி. இந்த நியதி நீண்ட கால முதலீட்டில் தொடர்பவர்களுக்கு சாதகமாக உள்ளது.
குறைந்த காலத்திற்கு முதலீடு செய்பவர்கள் செய்திகளை அடிப்படையாக வைத்து முதலீடு செய்வார்கள். அவர்களுக்கு இந்த பங்குகளில் முதலீடு செய்வது வேண்டுமென்றால் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால் நீண்ட கால முதலீட்டில் தொடர்பவர்களுக்கு இந்த பங்குகளைத் தவிர ஏராளமான பங்குகள் சந்தையில் உள்ளன.
அதனால் த்ரிஷா இல்லாவிட்டால் நயன்தாரா, நயன் இல்லாவிட்டால் சமந்தா என்று அடுத்தடுத்த பங்குகளை எளிதில் இனங்காண முடியும்.
முறைகேடான கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக போராடும் போது "அவர்கள் முதலீட்டில் கை வைப்பது" என்பது மீள முடியாத ஒரு அடியைக் கொடுக்கும் என்பதே நிதர்சனம். நாம் ஒருவர் தானே எதிர்க்கிறோம் என்ற நினைப்பு ஒரு தளர்வைத் தரலாம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக பலர் பின்பற்றும் போது அந்த பங்கில் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.
சுகி சிவம் அவர்களின் பேச்சில் கேட்ட ஒரு பகுதியைக் குறிப்பிடுவது சரியாக இருக்கும். "இருபதாம் நூற்றாண்டின் முக்கிய ஆயுதம் DIPLOMACY" என்று ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார். எதையும் நாசூக்கான வகையில் புரிய வைப்பது அதிக பலனைத் தரும் என்பதே அதன் அர்த்தம்.
இலங்கை தமிழ் மக்களுக்காக பல உயிர் தியாகங்கள் செய்து போராடியது விடுதலைப் புலிகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கடைசி காலங்களில் உலக நாடுகளுடன் (இந்தியா அல்ல) DIPLOMACY தொடர்பான சில விட்டுக் கொடுத்தல்களை செய்து இருந்தால் அவர்கள் போராட்டமும் தொடர்ந்து இருக்கும். ஈழ நம்பிக்கை இன்னும் தொடர்ந்து இருக்கும்.
முன்பு ஒரு முறை இன்போசிஸ் நாராயண மூர்த்தி அவர்கள் இலங்கை ஐடி ஆலோசகராக ராஜபக்சேயால் நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால் இன்போசிஸ்சில் வேலை பார்க்கும் பல தமிழ் பொறியாளர்கள் மெயிலில் எதிர்ப்பைக் காட்ட அந்த பதவியை அவர் ஏற்க வில்லை. ஒரு தெருமுனை போராட்டத்தை விட இந்த எதிர்ப்பு வெற்றி எளிதில் கிடைத்தது.
இது எந்த வகை போராட்டத்திற்கும் பொருந்தும், ஒரு நாள் கடையடைப்பு, ஒரு நாள் வேலை நிறுத்தம் என்பதை விட தொடர்ச்சியான சமூக போராட்டமே அதிக பலனைத் தரும். அதற்கு பங்குச்சந்தையும் ஒரு வகையில் உதவுகிறது.
கட்டுரையின் இறுதியாக ஒவ்வொருவர் சித்தாந்தமும் வேறு வேறாக இருக்கலாம். அதனால் எமது தனிப்பட்ட கொள்கைகளை புகுத்த விரும்பவில்லை. அதே நேரத்தில் நீங்கள் கொண்ட எந்த சமூக கொள்கையின் எதிர்ப்பை பதிவு செய்யும் கருவியாக பங்குச்சந்தையைக் கருதிக் கொள்ளலாம் என்பதை மட்டும் இந்தக் கட்டுரையின் மையக் கருத்தாக எடுத்துக் கொள்ளவும்.
i'm not investing DCW and sterlite
பதிலளிநீக்குThanks Kamalakkannan for your info and comment!
நீக்குgreat sir. nanum try panran.....
பதிலளிநீக்குகண்டிப்பாக பின்பற்றுங்கள்! நன்றி..
நீக்கு"ஒருவன் வியாபாரத்தில் நேர்மையில்லாமல் இருந்தால் எவ்வளவு சம்பாதித்தாலும் நீண்ட காலத்திற்கு அந்த வருமானம் தொடராது என்பதே இயற்கை நியதி."
பதிலளிநீக்குஅற்புதமான பதிவு .ஒரு முறை செல்லமுத்து குப்புசாமி அவர்கள் ’இழக்காதே’ முன்னுரையில் சொல்வார் - நம்மவர்கள் பலரும் பணம் பற்றி பேசும்போது பூடகமாவே இருப்பார்கள் .வெளிப்படை தன்மை இருக்காது என்பார் .அப்படி இருக்குபோது நீங்கள் Socially responsible investing என்ற அற்புதமான வ்ழிப்புணர்வை எற்படுத்தி இருக்கிறீர்கள் .வணங்க தோன்றுகிறது .
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி!
நீக்குYour social outlook and your concern towards the society is very much appreciated. Thanks.
பதிலளிநீக்கு