பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகம்
பங்குச்சந்தை முதலீடுகள் - ஒரு ஒப்பீடு (ப.ஆ - 30)
நேற்றும் ஒரு என்ஆர்ஐ தொடர்பான பதிவு தான் எழுதி இருந்தோம். (வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆப்பு வைத்த அரசு). இன்றும் அவர்களுக்கான ஒரு கட்டுரை தான் வருகிறது.
ஒருவர் ஆறு மாதத்திற்கு மேல் வெளிநாட்டில் இருந்தாலே வெளிநாட்டு வாழ் இந்தியர் என்று அழைக்கப்படுவார். இந்த மாதிரியான சூழ்நிலையில் விதிகளின் படி பழைய டிமேட் கணக்கை பயன்படுத்த முடியாது. அதற்கு பதிலாக ரிசர்வ் வங்கி கூறிய வழிமுறைகள் படி புதிதாக சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இந்த வழிமுறைகள் எந்த அளவு பின்பற்றப்படுகிறது என்பதில் அதிக சந்தேகம் உள்ளது. ஆனால் பல வருடங்களுக்கு இந்தியா திரும்ப திட்டமில்லாதவர்கள் இந்த வழிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியமானது.
முதலில் ஏற்கனவே இருக்கும் டிமேட் கணக்கை மூடி விட வேண்டும். அதில் இருக்கும் பங்குகளை விற்று விடலாம். அல்லது புதிதாக திறக்கப்படும் டிமேட் கணக்கிற்கு மாற்ற வேண்டும்.
முதல்படியாக ஏதேனும் ஒரு வங்கி மூலமாக NRO (Non Residence Ordinary) என்ற கணக்கை திறக்க வேண்டும். இதனுடன் ஒரு NRO டிமேட் கணக்கையும் திறக்க வேண்டும். இந்த கணக்கில் தங்களது பழைய டிமேட் கணக்கில் உள்ள பங்குகளை வரவு வைத்துக் கொள்ளலாம். அதே போல் IPO முறையிலும் பங்குகளை வாங்கி கொள்ளலாம். ஆனால் Secondary Market என்ற முறையில் வாங்கப்படும் பங்குகளை வாங்க இங்கு அனுமதி இல்லை. அதாவது IPO அல்லாத பங்குகளை NRO டிமேட் கணக்கை வைத்து வாங்க முடியாது.
அவ்வாறான Secondary Market பங்குகளை வாங்குவதற்கு முதலில் NRE வங்கி கணக்கை திறக்க வேண்டும். அதன் பிறகு Portfolio Investment Scheme (PINS) என்ற பெயரில் உள்ள டிமேட் கணக்கினையும் திறக்க வேண்டும். இந்த கணக்கானது உங்களது NRE கண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் வாங்கப்படும்/விற்கப்படும் பங்குகளுக்கான தொகை NRE கணக்குடன் மூலமாகவே நடைபெற வேண்டும். இந்த முறை மூலம் IPO பங்குகளை வாங்க முடியாது.
ஆக, முதலீடு செய்வதற்கு NRE, NRO, NRE PINS, NRO Demat என்று நான்கு கணக்குகளை வைத்து இருப்பது அவசியமானது.
இப்பவே கண்ணைக் கட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.
இதன் பிறகு சில வெளிநாட்டு முதலீடு உச்சவரம்பு கொண்ட பங்குகளை NRI மக்கள் வாங்க முடியாது. ஒரு நிறுவனத்தில் 5%க்கும் மேல் பங்குகளை வைத்துக் கொள்ள முடியாது. டிமேட் கட்டணங்களும் கொஞ்சம் அதிகம் என்று தெரிகிறது.
மீண்டும் இந்தியாவிற்கு வந்த பிறகு இதை எல்லாம் மூடி விட்டு திருப்பி பழைய நிலைக்கு செல்ல வேண்டும்.
இந்த கடினமான முறைகளை தவிர்ப்பதற்காக சிலர் நெருங்கிய உறவினர்கள் பெயரில் கணக்கு திறந்து கொண்டு முதலீடு செய்வதும் உண்டு. குறைந்த காலத்தில் இந்தியாவிற்கு திரும்பும் திட்டம் உள்ளவர்கள் ஏற்கனவே இருந்த டிமேட் கணக்கு வைத்து கொண்டும் வர்த்தகம் செய்வதும் உண்டு,.
ஒரு லோக்கல் டிமேட் கணக்கு திறப்பதற்கே ஒரு ஐம்பதிற்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் போட வேண்டும். இதுல அதே மாதிரி நான்கு கணக்கு திறக்க சொன்னால் ரொம்ப கஷ்டம் தான்.
இப்படி கஷ்டமாக வழிமுறைகள் இருந்தால் யார் வெளியில் இருந்து வந்து இந்திய சந்தையில் முதலீடு செய்வார்கள்? இவை எளிமைப்படுத்தப்பட வேண்டியது மிக அவசியம்.
English Summary:
How to open NRI Demat accounts in India? Portfolio Investment Scheme and Non Residence Ordinary accounts are making difficulties for outside Indians to open demat account. ICICI, HDFC like banks are having facilities for NRI demat account.

பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் அடுத்த பாகம்
English Summary:
How to open NRI Demat accounts in India? Portfolio Investment Scheme and Non Residence Ordinary accounts are making difficulties for outside Indians to open demat account. ICICI, HDFC like banks are having facilities for NRI demat account.
தொடர்பான பதிவுகள்:
- பங்குச்சந்தையில் பங்குகளை எப்படி வாங்குவது? (ப.ஆ - 4)
- டிமேட் கணக்கை எப்படிப் பயன்படுத்துவது? (ப.ஆ - 5)
- டிமேட் கணக்கு எவ்வாறு ஆரம்பிக்க?(ப.ஆ- 6)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக